அதிரையர்கள் பயணித்த பேருந்து விபத்து!


இன்று மாலை தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி வந்த அரசு பேருந்து புலவன்காடு என்ற இடத்தில் பிரேக் பிடிக்காத காரணத்தால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இதனால் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. 

மேலும் மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டதால் பெரும்  அசம்பாவிதம் தவிர்கப்பட்டது. இதில் பயணித்த பயணிகள் காயங்கள் ஏதுமின்றி தப்பினர். இதுகுறித்து அதிரையை சேர்ந்த பயணி ஒருவர் கூறுகையில்  "தஞ்சாவூரிலிருந்து இந்த பேருந்தில் நாங்கள் பயணித்து வந்தோம். புலவன்காடு அருகே வந்த பொழுது பேருந்து திடீரென பிரேக் பிடிக்காமல் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. இறைவன் உதவியால் யாருக்கும் அடிப்படவில்லை. அரசு முறையாக மக்களின் நலனில் அக்கறை கொண்டு பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும்" என்றார்
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது