செந்தலைப்பட்டினம் பொதுநல சங்கம் சார்பில் சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாட்டம்

செந்தலைப்பட்டினம், ஆகஸ்ட் 15
இந்தியாவின் 70 வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம்,
செந்தலைப்பட்டினத்தில் செந்தலைப்பட்டினம் பொதுநல சங்கம் சார்பில் சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

சுதந்திர தின விழா மிகச் சிறப்பாக சங்க அலுவலகத்தின் முன்பாக நடைபெற்றது .இந்த விழாவிற்கு சங்கத் தலைவர் தலைமைவகித்தார், கெளரவத் தலைவர் மற்றும் கெளரவ ஆலோசகர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் நிர்வாகக்குழு அனைவரும் கலந்துக்கொண்டனர் அதன் பின்பு அனைத்து பொது மக்களுக்கும் மற்றும் ECR சாலையில் செல்லக்கூடியவர்களுக்கு  அவர்களின் வாகனங்களை  நிறுத்தி மிகச்சிறப்பான முறையில் இனிப்பு  வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் அதிரையில் இருந்து அதிரை ஹாப்ஸா முகமது அவர்களும் மற்றும் அதிரை மரைக்கா இத்ரீஸ் (ரெட் கிராஸ் அதிரை கிளை தலைவர்) அவர்களும் கலந்துக்கொண்டனர்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது