அதிரை பேரூராட்சியில் உள்ளிருப்பு போராட்டம்!


பேரூராட்சி பொதுநிதியில் சில வார்டுகளுக்கு சாலை, வடிகால் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து 14வது வார்டு உறுப்பினர் NKS சரீப் இன்று காலை முதல் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். இவருக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி வார்டு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பொதுநிதியில் 10 வார்டுகளுக்கு மட்டும் தலா 5 லட்சம் ஒதுக்கீடு செய்த தீர்மனத்தை உடனே வாபஸ் பெற வேண்டுமென்றும் வலியுறுத்தி உள்ளனர். அப்படி செய்யாவிட்டால் அடுத்த கட்டமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட போவதாகவும் எச்சரித்துள்ளனர்.


Share:

1 comment:

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது