மக்கள் பாதை இயக்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டது: ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் விளக்கம்

மக்கள் பாதை இயக்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று அந்த இயக்கத்தை வழிநடத்தும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சகாயம் தெரிவித்துள்ளார்.

கடலூரில் மக்கள் பாதை இயக்கத்தின் கிளை அலுவலகத்தை திறந்து வைத்துப் பேசிய அவர், இந்த இயக்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டது என தெரிவித்தார்.

அடுத்த தேர்தலைப் பற்றி கவலைப்படுவது இதன் நோக்கம் அல்ல என்றும், அடுத்த தலைமுறையைப் பற்றி கவலைப்படுவதே இதன் நோக்கம் என்றும் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாகாயம், அரசின் திட்டங்கள், எளிய மக்களைச் சென்றடைய பாலமாக மக்கள் பாதை இயக்கம் பணியாற்றும் என்று கூறினார்.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது