மாணவ-மாணவிகள் செல்போன் அப்ளிகேஷன் மூலம் பாடம் படிக்கும் புதிய திட்டம்....!!

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகள் செல்போன் ‘அப்ளிகேஷன்’ மூலம் பாடம் படிக்கும் புதிய திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் உபயோகம் குறித்து ஆசிரியர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பாட திட்டத்தில் சிலவற்றை தேர்ந்தெடுத்து நவீன தொழில்நுட்பம் மூலம் மாணவ-மாணவிகள் படிக்க செல்போன் ‘அப்ளிகேஷன்’ ஒன்றை தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை தயார் செய்துள்ளது.இதன் உபயோகம் குறித்து ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள காணொலி காட்சி மூலம் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் இருந்தபடி, 32 மாவட்டங்களில் உள்ள 32 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன மையங் கள், 16 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் செயல்விளக்கம் வழங்கப்பட்டது.

இது குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் ராமேஸ்வர முருகன் கூறியதாவது:-தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை மூலம் ‘TN SC-H-O-O-LS LI-VE ’ என்ற அப்ளிகேஷனை செல்போனின் ‘பிளே ஸ்டோரில்’ சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இது தொடர்பாக சி.டி.யிலும் நாங்கள் பதிவு செய்து ஒவ்வொரு பள்ளிகளுக்கும் வழங்கி இருக்கிறோம்.

மாணவ-மாணவிகள் தேவைப்பட்டால் அதை கேட்டு பெற்றுக்கொண்டு தங்களுடைய செல்போனில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்த அப்ளிகேஷனை கொண்டு பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியின் படத்தின் மீது வைத்தால் அந்த படம் முப்பரிமாண தோற்றத்தில் (3-டி) காட்சி அளிக்கும்.பின்பு அந்த படத்தின் மூலம் மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விளக்கங்களையும் அதில் பெற்று படித்து கொள்ளலாம். 

இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து இருக்கிறார்கள்.எஸ்.எஸ்.எல்.சி. அறிவியல் புத்தகத்தில் 57 பாடங்களையும், கணித புத்தகத்தில் 6 பாடங்களையும், பிளஸ்-2 இயற்பியல் புத்தகத்தில் 5 பாடங்களையும், வேதியியல் புத்தகத்தில் 16 பாடங்களையும், உயிரியியல் புத்தகத்தில் 20 பாடங்களையும், கணித புத்தகத்தில் 7 பாடங்களையும், கணினி அறிவியல் புத்தகத்தில் 10 பாடங்களையும், விலங்கியல் புத்தகத்தில் 20 பாடங்களையும் என மொத்தம் 141 பாடங்களை படித்து தெரிந்து கொள்ளலாம்.. 
Share:

1 comment:

  1. பள்ளிகல்வி துறையே கல்வி கூடங்களுக்கு செல்போன் எடுத்து வர கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் தற்பொழுது இவர்களே ஆண்டிராய்டு செயலியை உருவாக்கி தந்துள்ளனர். இனிமேல் கல்வி கூடங்களுக்கு தாராளமாக/தைரியமாக செல்போன்களை எடுத்து செல்லலாம்.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது