அதிரையில் ரெயில்வே பணிக்காக சிறப்பு இயந்திரம் வருகை! (படங்கள் இணைப்பு)திருவாரூர்-காரைக்குடி மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக இருந்துவரும் அகலரயில் பாதை பணிகள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இந்நிலையில் இன்று இவ்வழிதடத்தில் இருக்கும் மணல்மேடுகளை சரி செய்வதற்காக வேண்டி ஹைதராபாத்திலிருந்து இயந்திரம் ஒன்று அதிரைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் கப்பிமணல் மற்றும் மணல் ஆகியவை கலவை செய்து மேடுகள் அமைக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பணிகளுக்காக விரைவில் சிறப்பு பணியாளர்கள் அதிரைக்கு வருவார்கள் எனவும் தெரிவித்தனர்.


Share:

1 comment:

  1. பாத்தும்மா.....ரயிலுக்கு பதில் கெயில் மீத்தேன் குழாய் பெதச்சிட்டு போயிடப்போராங்க.......

    அகல ரயில் பாதை மூலம் அழகிய ரயிலை ஓட்டச்செய்கிறோம் என்று சொல்லி அந்த காலம் முதல் அதிராம்பட்டினம் என்னும் கடல்கரை ஊர் வழித்தடம் வழியாக காரைக்குடி முதல் சென்னை வரை அமைதியாய் ஓடிக்கொண்டிருந்த‌ கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை கழுத்தைப்பிடித்து தள்ளுவது போல் தண்டவாளத்தை விட்டே தள்ளி விட்டார்கள். பிறகு தண்டவாளங்களையும் பெயர்த்து எடுத்து போய் விட்டனர். எப்படியும் வரும் வரும் என காத்திருந்து இடையில் தேர்தல்கள் தான் வந்து போயின. அகல ரயில் பாதை மூலம் ரயில் வரத்து இந்நாள் வரை கை கூட வில்லை அதற்காக முயற்சித்த எத்தனையோ உள்ளங்களை அவர்கள் கண் மூடியதும் மண் மூடி விட்டது. சொந்த பந்தங்களை எங்கள் ஊர் ரயிலடி வந்து பயணம் அனுப்பி, வரவேற்ற நிகழ்வுகள் என்னவோ நடு இரவில் வெள்ளைக்காரன் அன்றளித்த நம் நாட்டு சுதந்திரம் போல் கனவில் வந்து நொடியில் மறைகிறது. நாட்டில் அரசியல்வாதிகளுக்கு வேண்டிய புதுப்புது ஊர்களுக்கெல்லாம் ரயில் பாதைகளும், மெட்ரோ ரயில்களும், ஓடிய எங்களூர் ரயில் மட்டும் எங்கள் ஊரை கை கழுவி விட்டு வேறு ஏதோ ஊரில் ஒளிந்து ஒளிந்து ஓடிக்கொண்டிருப்பதாக கேள்வி. அரசியல் சதுரங்கத்தில் தண்டவாளம் ஏதுமின்றி எங்களூரில் ஓடி வந்த கம்பன் ரயில் மட்டும் தடம் புரண்டு விட்டது. அதை பயன்படுத்திய எத்தனையோ மக்கள் இன்று மண்ணறைக்குள் உறங்கிப்போய் விட்டனர்.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது