திராணி இல்லையே!!

பிறந்தோம்!  வாழ்ந்தோம்!
 சந்தோஷமாக வாழ்ந்தோம்!

 பிறருடைய சந்தோஷத்தை நினைத்துப் பார்க்க நேரமில்லை...

தன் குடும்பத்தை மட்டும் நினைத்துப் பார்த்தோம்!
பிறருடைய கஷ்டங்களை நினைக்க மறுத்தோம்!

தன் குடும்பத்தின் தாகம் தணிந்தது என்று ஆனந்தம் கொண்டோம்!

பிறரின் தாகத்தை தணிக்க மறுத்தோம்!!

வறுமையின் குரல் வீதியின் நடுவே ஓங்கி ஒலிக்கிறது அந்நேரத்தில் மட்டும் செவிடர்களாய் ஆனோம்....

இரத்த வெள்ளம் ஓட  வெடிக்கிறது சாதி மதக் கலவரம்....

ஆனால் வீதியில் இறங்கி போராட திராணி இல்லையே  ஏன் இந்த அவலம்....?

சாதி கொலைகளும், பெண் வன்கொடுமைகளும் நீள்கிறது நம் வசந்த பூமியிலே....

அதை கண்ட உன் மனம் சற்றும் கூட கலங்கவில்லையே!

போராடிப் பெற்ற சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஏங்கும் உள்ளத்திலே....

வக்கிரம புழுதிக்காற்றை வீசுகின்ற அவலமே...!

ஒருமுறை தான் மனிதனுக்கு இவ்வுலகில் வாழ்க்கை....

அதில் தான் சுயநலத்திற்கும்,பொதுநலத்திற்குமிடையில் நடக்கிறது ஓர் யுத்தம்...

வெகுநாட்களாய் காத்திருந்த நீதிவான்களெல்லாம் மண்ணிற்குள் செல்கையிலே....
 
நீதியின் குரல் மட்டும் அழுகிறது மண்ணின் மேலே....

விதைத்தவர்களெல்லாம் ஆலமரமாய்  நிற்கின்றன விதைகளின் உள்ளத்திலே.....

அதனாலோ என்னவோ அழிக்க நினைக்கும் நஞ்சுக்களெல்லாம் அழிந்துவிடுகிறது சிறுமுளையிலே....

காதுகளின் ஓரத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும் நீதியின் குரலெல்லாம்...

நம் கண்களின் ஓரத்தில் வழியும் கண்ணீரை துடைக்கவிருக்கும் அமைதிக்காகவே....

மீண்டும் வேண்டும் சுதந்திரம் என்று உரக்கச் சொல்வதெல்லாம்

நாளை நம் சந்ததிகளின் உயிர் காக்க நின்று உதவும் என்பதற்காகவே....

இனியும் சுயநலம் தான் உன் வாழ்க்கை என்றால்

இன்றே எழுதிக்கொள் நாளைய  சந்ததியின் இறுதி நாளை....

-இலக்கு "சாமானியனின் குரல்"
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது