அதிரையில் பலமுனை போட்டிக்கு தயாராகும் உள்ளாட்சி தேர்தல் !


சட்டமன்ற தேர்தல் படபடப்பு இன்னும் அடங்காத நிலையில் இன்னும் சில நாட்களில் உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைபெற உள்ளன .இந்நிலையில் அதிரை நகரில் தலைவர் பதவிக்கு பலமுனை போட்டி ஏற்பட வாய்ப்புள்ளதாக நமது செய்தியாளர் தெரிவித்துள்ளார் மேலும் அதிமுகவில் இரு அணிகளாகவும் திமுகவில் இரு அணிகளாகவும் செயல்பட்டு வருகின்றனர் என்றும் இது திராவிட கட்சிகளுக்கு ஏற்பட்ட பெரும் இழுக்கு எனகூறினார் .  இது எதிரணியாக இருக்கும் வாய்ப்பாக அமைந்துவிட கூடும் என தெரிகிறது. 

கடந்த முறை வெற்றிபெற்று பொறுப்பில் இருக்கும்திமுகவை சேர்ந்த சகோதரர் அஸ்லம் அவர்கள் மாநில அரசிடம் இருந்து நிதியை முறையாக பெற்று எந்தவித கட்டமைப்பையும் செய்து தரவில்லை. இதுகுறித்த அவர் பலமுறை அதிகாரிகளை அணுகுவதற்கு மன்ற உறுப்பினர்கள் யாரும் ஓத்துழைப்பு நல்குவதில்லை என கூறுகிறார். 

இதுகுறித்து மன்ற உறுப்பினர்கள் சிலரிடம் வினவியபோது. அவர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும். உறுப்பினர்களுக்கு உண்டான மரியாதையை வழங்கிடவில்லை என கூறுகின்றனர். எது எப்படியோ வரவிருக்கின்ற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகாவது  ஊருக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் திமுக,அதிமுக ஊரில் செல்வாக்கு மிக்க எல்லோருடனும் நல்லமுறையில் அனுகுகூடிய மனோபான்மை கொண்டவர்களை வார்டு மற்றும் தலைவர் வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும்.
Share:

3 comments:

  1. உறுப்பினர்களுக்கு உன்டான உரிய (கமிஷன்)மரியாதை கொடுப்பது இல்லை.உன்மையான விஷயம்

    ReplyDelete
  2. உறுப்பினர்களுக்கு உன்டான உரிய (கமிஷன்)மரியாதை கொடுப்பது இல்லை.உன்மையான விஷயம்

    ReplyDelete
  3. உறுப்பினர்களுக்கு உன்டான உரிய (கமிஷன்)மரியாதை கொடுப்பது இல்லை.உன்மையான விஷயம்

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது