அதிரையில் மேம்பாலம் கட்ட கோரிக்கை!


பேரா. ஏ. ஹாஜா அப்துல் காதர் அவர்கள் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் கணினி அறிவியல் துறை  உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். அதிரையில் ஒரு மேம்பாலம் கட்ட வேண்டுமென்ற அவரது கோரிக்கை சமீபத்தில் THE HINDU தினசரியில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் தமிழ் மொழிபெயர்ப்பு பின்வருமாறு:

அதிரை வழியாக திருவாரூர் மற்றும் காரைக்குடி இடையே அகல இரும்புபாதை மாற்று வேலை ஒரு நீண்ட தாமதத்தின் பின்னர் முழு மூச்சில் நடக்கிறது. அதிரையில் இந்த இரும்புபாதை  கிழக்கு கடற்கரை சாலையை கடந்து  செல்கிறது. நாகப்பட்டினம்-தூத்துக்குடி சாலை கடுமையான போக்குவரத்து சாலையாக மாறிவிட்டது. இரும்புபாதை சாலையை கடக்கும் நேரத்தில் ஒரு ரயில் மேம்பாலம் தேவை. எனவே, ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை துறை ஒரு பாலம் அமைத்து எதிர்காலத்தில் உயிருக்கு ஆபத்தான விபத்துகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது