அதிரையில் மாணவியை கடுமையாக திட்டிய ஆசிரியை!

ஒவ்வொரு நாளும் நிகழ்வுகளை செய்திகளாக வாசிக்கின்றோம். ஆனால் அதேநிலை நம் குழந்தைகளுக்கு ஏற்படும் என என்றாவது நினைத்து பார்த்துள்ளோமா? என்றால் நிச்சயம்  கிடையாது.

அதிரையில் சிலதினங்களுக்கு முன்பு பள்ளியில் படிக்கும் மாணவியை பார்த்து செய்யாத தவறை செய்ததாக கூறி பாடம் எடுக்கும் ஆசிரியை கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த மாணவி இனி நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என அடம்பிடிக்க பெற்றோர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரித்த பிறகு ஆசிரியையின் வண்டவாலம் எல்லாம் தண்டவாலம் ஏறிவிட்டது. 
 
நன்றாக படிக்கும் மாணவிக்கு இவ்வாறு என்றால், சுமாராக படிக்கும் மாணவ/மாணவிகளின் நிலைமை எவ்வாறு சற்று சிந்தியுங்கள்.

இது ஒருபுறமிருக்க இதேபோல் எத்தனை மாணவ/மாணவிகள் இதுபோன்றவைகளை தங்களின் மனதுக்குள்ளே வைத்துக்கொள்கிறார்களோ தெரியவில்லை. 

தாய்/தந்தை தங்களின் குழந்தைகளின் மனநிலை பள்ளி கூடங்களில் எவ்வாறு உள்ளது என்பதை வாரம் ஒருமுறையாவது அன்பாக விசாரியுங்கள், ஏதேனும் தவறு நடந்தால் அதை பெற்றோரிடம் பயம் இல்லாமல் சொல்லுவதற்கு அறிவுரை சொல்லுங்கள்.

இதுதொடர்பாக அதிரை MST சிராஜுதீன் அவர்கள் பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றது. அது இதோ உங்கள் பார்வைக்கு...
Share:

1 comment:

  1. எந்த பள்ளி ஆசிரியை இவ்வாறு செய்தது ?

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது