வீட்டுக்குள் நுழைந்த உடனே கடுமையாக தாக்க துவங்கினார்! (தொடர்ச்சி)


"வீட்டுக்குள் நுழையும் போதே அவர் கடும் சத்தம் போட்டவராக நுழைந்தார். பிள்ளையை அழைத்து அடிக்க துவங்கினார் பதறிபோன நான் உடனே அவரை தடுக்க முயன்றேன். ஆனால் அவர் என்னையும் சேர்த்து அடித்தார்"

இந்த வரிகள் உணர்த்தும் செய்தியாது என நாம் சற்று நோக்கினால் புரியும். 7வயது குழந்தை வீட்டுக்கு வெளியே தந்தை நிறுத்தி வைத்திருந்த அவரது பைக்கை கீழே தள்ளிவிட்டுவிட்டான். மிகவும் கஸ்டப்பட்டு வாங்கிய பைக் என்பதால் தந்தைக்கு கடும் கோபம் உடனே வீட்டிற்குள் விளையாடிகொண்டிருந்த குழந்தையை போட்டு அடிக்கிறார். இதுவா கண்டிக்கும் முறை? 

இதனை எப்படி அந்த தந்தை கையாள வேண்டுமென பார்ப்போம். குழந்தை பைக்கை தள்ளிவிட்டதை பார்த்தவுடன் தந்தை பைக்கை எடுத்து கொண்டு எதுவும் சொல்லாமல் தான் செல்லவேண்டிய இடத்திற்கு சென்று பணிகளை முதலில் முடிக்க வேண்டும். எல்லா பணிகளும் முடிந்தபின் குழந்தைக்கு பிடித்த ஆரோக்கியமான தின்பண்டங்கள் வாங்கிகொண்டு வீட்டிற்கு செல்லவும். 

பெரும்பாலும் குழந்தைகள் தந்தை பணி முடித்து வரும் சமயத்தில் தூங்கிகொண்டிருக்கும் அப்பொழுது அவர்களை எழுப்ப வேண்டிய அவசியமில்லை. மறுநாள் காலையில் எழுந்தவுடன் குழந்தைக்கு என நேரம் ஒதுக்கி அன்பு கடலால் அவர்கள் எதிர்பார்க்காத நிலையில் தூக்கி குழந்தையுடன் விளையாட வேண்டும். பின்பு ஏற்கனவே வாங்கி கொண்டுவந்தவைகளை கொடுத்து அவர்களின் மனநிலையை நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும் பின்பு அவர்களிடம் புன்னகைத்த முகத்துடன் மீண்டும் அதேதவறை செய்ய கூடாது என எடுத்து கூற வேண்டும்.

இவ்வாறான அணுகு முறையை கொண்டு நாம் குழந்தைகளிடம் அறிவுரை வழங்கும் அதேசமயம் அவர்களுக்கு நன்னெறி விசயங்களை போதிக்கவும். இதன்காரணமாக பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே அன்பு அதிகரிக்கும் அவர்களுக்கும் நம்பிக்கை உண்டாகும். இதனால் முடிந்தளவு எல்லாவற்றையும் அவர்கள் பெற்றோர்களிடம் பகிர்ந்துகொள்வர். ஆகையால் குழந்தைகள் நிச்சயம் வழிதவறி செல்ல வாய்ப்புகள் குறைவு.

-ஜெ.முகம்மது சாலிஹ்
www.fb.com/xmsalih 
Share:

1 comment:

  1. nengal kurum kadhai appa padam pola iruku I think nengal appa movie parthu kuruvadhu pol eruku

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது