ரத்ததான சேவையில் முன்னோடியாக திகழும் CBD !இந்திய இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வின் காரணமாக ரத்ததானம் அதிகரித்து  வருகிறது. என CBDயின் தஞ்சை மாவட்ட தலைவர் பேராசிரியர் கபீர் அவர்கள் கூறியுள்ளார்.. 

தற்பொழுது  தங்களுடைய பிறந்த மற்றும் விஷேச  நாள்கள்  அன்று ரத்ததானம் செய்வோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது என தெரிவித்துள்ள அவர்,  அவசர கால தேவைகளுக்கு ரத்த கொடைகொடுக்க இளைஞர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருவதாக கூறினார். 

ரத்ததானம் செய்வதினால் ஒரு உயிரைக்காப்பாற்ற முடியும். தானம் செய்தவர்களின் உடலில் இயற்கையாகவே புதியரத்தம் உடலில் ஊறும். பல்வேறு ஆய்வுகளில் தொடர்ந்து ரத்ததானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு குறையும் வாய்ப்பு உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள பேராசிரியர்,   

ஹீமோகுளோபின் அளவினைக் கட்டுப்படுத்தவும் சமச்சீராகப் பராமரிக்கவும் ரத்ததானம் பயன்படுகிறது என்றார்.. மேலும் அவர் கூறுகையில், “சாலை விபத்துகளில் இளைஞர்கள் அதிகமாக காயமடைகின்றனர். அவர்களுக்கு ரத்தம் அதிகம் தேவைப்படும் போது, பலஇளைஞர் அமைப்பினர் மற்றும் குறிப்பாக எங்களின் கிரசன்ட் ப்ளட் டோளனர் அமைப்பு முன்வந்து ரத்ததானம் செய்வதோடு முதலுதவி சிகிச்சையும் செய்து வருகின்றனர் என்ற அவர் எங்கள் அமைப்பின் மூலம் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 1200யூனிட்டுக்கும் அதிகமான அளவில் இரத்த கொடை வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.. 

எங்கள் அமைப்புடன் இணைந்து பணியாற்ற தன்னார்வலகர்கள் இணைந்து கொள்ளலாம் என்றார்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது