சற்றுமுன் அதிரை PP பஸ் மோதியதில் ஒருவர் பலி!


இன்றிரவு அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து சேண்டாக்கோட்டை அருகே வந்தபொழுது சாலையை கடக்க முயன்ற ஒருவர் மீது மோதியதாக கூறப்படுகிறது.  இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். 

இதனையடுத்து அவரது உடலை மீட்ட காவல்துறையினர் அதிரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக வேண்டி அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து அதிரை காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது