குர்பானிக்கு எதிரான சட்டத்தினை திரும்ப பெறவேண்டும்TNTJ எச்சரிக்கை !

 திருவாரில் நேற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் யார் இந்த முகம்மது ரசூலுல்லாஹ் ? என்ற தலைப்பில் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட ஆயிரகணக்கானோர் கலந்துகொண்டனர் . இதில் கலந்து கொண்டு பேசிய அமைப்பாளர் P ஜைனுல் ஆபிதீன். 

இஸ்லாமியர்களின் கடமையான குர்பானி விஷயத்தில் நீதிமன்றம் மூக்கை நுழைத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் . ஒட்டகத்தை குர்பானி கொடுப்பதால் இவர்களுக்கு என்ன குறை நேர்ந்துவிட போகிறது? என PJ கேள்வி எழுப்பினார் . இந்த தடைக்கான சட்டத்தினை நீதிமன்றம் நேர்மையான முறையில் கையாள வேண்டும் இல்லையேல் வருகின்ற 25ஆம் தேதி சென்னையில் லட்சகணக்கான மக்கள் சங்கமிக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.

மேலும் இஸ்லாமியர்களுக்கு வழங்கபட்டுள்ள 3.5சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி தர அரசு ஆவண செய்ய வேண்டும் என்றார்.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது