அதிரையர்களுக்கு பரிச்சயமான மோர் தாத்தா (VIDEO)!

சென்னை வாழ் அதிரையர்களின் பெரும்பாலானவர்கள் சென்னை திருவான்மியூர் பகுதியில் மோர் விற்பனை செய்யும் இவரை சந்திக்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. 

காரணம் இவர் விற்கும் மோரின் தனி சுவை தான். கடந்த 18 ஆண்டுகளாக மோர் விற்கும் ராமஜெயம் (மோர்த்தாத்தா) எனும் இவரிடம் சினிமா நடிகர்கள் முதல் தொழில் அதிபர்கள் என பலதரப்பட்ட மக்களும் இவர் தாயரிக்கும்  மோரை விரும்பி குடிக்கின்ற்னர். 

குறிப்பாக இரவு நேரத்தில் விற்கப்படும் இவ்வகை மோருக்கு கிராக்கி அதிகம் . சைக்கிள் வண்டியில் விற்கும் இவரின் மோரை குடிக்க வேண்டுமென்றால் இவருக்கு தொலைப்பேசி வாயிலாக தெரிவித்த பின்னரே அவரை நாடி செல்ல வேண்டும்.  காரணம் இவர் நடமாடும் அங்காடியில் வாயிலாகவே மோரை விற்பதுதான். இதுகுறித்து மோர் பிரியரான அதிரையர் ஒருவர்  கூறும்பொழுது ....

அதிரைமக்கள் மட்டுமின்றி கீழக்கரை,காயல்பட்டினம் உள்ளிட்ட பலராலும் பாராட்டு பெற்ற இந்த மோர் மிகவும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு விற்கப்படுவதுடன் , வெள்ளரிக்காய் ,மாங்காய் இவைகளுடன் மோரின் மீது மணிகார பூந்தியை மிதக்கவிட்டு தருவதுதான் இவரின் தனி சிறப்பு . 

அதேபோல் இன்றுவரை  இவரின் சுவையை மிஞ்சுவதற்கு ஆள் இல்லை எனலாம் அந்த அளவிற்கு இவரின் சுவைக்கு அடிமையானவர்கள் ஏராளம் ஏராளம்...

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது