Tuesday, September 6, 2016

கண்டுகொள்ளாத அதிரை சேர்மன்!



அதிரை பேரூராட்சி எல்லைக்குட்பட்ட மொத்தம் 21 வார்டுகளுக்கு தலா 5 இலட்சம் மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முதல் கட்டமாக 11 வார்டுகளை தேர்வு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மீதமுள்ள 9 வார்டுகளில் திட்டப்பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.

இதுகுறித்து சமூக வலைதளமான முகநூலில் கருத்து தெரிவித்துள்ள 8வது வார்டு உறுப்பினர் ஹாஜா முகைதீன் "அதிராம்பட்டினம் பேரூராட்சியில் 21 வார்டுகளுக்கு தலா 5 லட்சம் மதிப்புள்ள பணிகள் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு. இதில்11 வார்டுகள் எதன் அடிப்படையிலேயோ தேர்வு செய்து பணி நடைபெறுகிறது மற்ற 9 வார்டுகளுக்கு பை பை.
நம்ம சேர்மன் கூட இதை பற்றி கேர் எடுக்கல" என குறிப்பிட்டு அதனை சேர்மன் அஸ்லம் அவர்களும் டேக் செய்துள்ளார்.

மேலும் ஒரு வார்டுக்கு மட்டும் ஏற்கனவே பணிகள் முடிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது