அதிரையில் கன்ஃபார்ம் கவுன்சிலர்கள் யார் யார் ?நடந்து முடிந்த 2011ஆம் ஆண்டு உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்ற 21வார்டு கவுன்சிலர்களில் யார் யார் மீண்டும் வெல்ல வாய்ப்புள்ளது என்ற க ஆய்வை அதிரை எக்ஸ்பிரஸ் குழு கடந்த சில நாட்களாக நடத்தி வருகிறது. 

இதில் திமுகவின் கோட்டையாக இருந்து வந்த அதிரை நகரில் ஆச்சரியபடதக்க சில மாற்றங்கள் உருவாகியுள்ளதை அப்பட்டமாக காண முடியாவிட்டாலும் ஆள் மனதின் தோன்றல்கள் வாயிலாக காண முடிவதாக நமது குழுவினர் கூறுகின்றனர். 

மேலும் அவர்கள் கூறுகையில் அதிரையில் சிட்டிங் கவுன்சிலராக உள்ள சிலர் மீண்டும் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அதில் குறிப்பாக 12 வது வார்டு கவுன்சிலர் செய்யது முகம்மது, 14 வார்டு அகமது சரிப், 8 வது வார்டு சேனாமூனா, 21வது வார்டு ஆப்பிள் இப்ராஹீம். லத்தீப் உள்ளிட்ட சிலர் மீண்டும் வெல்வதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளது. 

எமது குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் கடந்த 5 ஆண்டுகளில் அதிரை நகரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டவில்லை இன்னும் சொல்லபோனால் சாலை வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லை.  காரணம் தமிழகத்தை அதிமுக தலைமியிலான அரசு ஆண்டுகொண்டுள்ளது ஆனால் அதிரை நகரமோ திமுகவின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது இந்நிலையில் வரக்கூடிய உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிரை மக்களுக்கு மன மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 

தற்பொழுது நகர தலைவர்களை வார்டு கவுன்சிலர்களே தேர்வு செய்யும் நிலை உருவாகி உள்ளதால் சிட்டிங் சேர்மன் தனக்கு சாதகமாக உள்ள ஒரு வார்டில் போட்டியிட்டு வெல்லும் வாய்ப்பும் உள்ளது. அப்படி வெற்றி பெரும் பட்சத்தில் அவருக்கு ஆதரவாக சில கவுன்சிலர்கள் வாக்களிக்க கூடும் என்பதால் உள்ளூர் திமுகவினர் மாவட்ட நிர்வாகத்தை சிலர் அடிக்கடி சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
Share:

1 comment:

  1. 8.12.14.21 வார்டுகள் மட்டும்தான் அதிரை பேரூராட்சி உள்ள வார்டுகள்.மேற்கண்ட வார்டுகளில் வெற்றிபெற்றால் சேர்மன் ஆகிவிடலாமா????????????

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது