அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம்

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம்

தேதி02/09/2016                                              
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 38 வது மாதாந்திர கூட்டம் கடந்த 02/09/2016 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-

கிராத்                     : சகோ. சாகீர் & சாஜித் S/o மன்சூர் ( உறுப்பினர் ) 

முன்னிலை             : சகோ. A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )

வரவேற்புரை          : சகோ. சகோ. அஷ்ரஃப் ( துணை தலைவர் )

சிறப்புரை              : சகோ. A. அபூபக்கர் ( பொருளாளர் )

அறிக்கை வாசித்தல்  : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )

நன்றியுரை           : சகோ.  ஜம்ரூத் முகமது ( உறுப்பினர் ) 

தீர்மானங்கள்:

1) பைத்துல்மாலின் சார்பாக நடத்தி வரும் குர்பானி திட்டத்திற்கு ( தனி நபர் குர்பானி / கூட்டு குர்பானி ) நமதூர் ரியாத் வாழ் அதிரை மக்களிடம் ஆர்வமூட்டப்பட்டு குர்பானி திட்டத்திற்கு இதுவரை முன்பதிவு செய்தவர்கள் போக மற்றவர்கள் குர்பானி கொடுக்க ஆர்வம் உள்ளவர்கள் பின்வரும் நபர்களிடம் தெரியப்படுத்தவும்.

1. அகமது ஜலீல்  ( 0504191127 )

2. அப்துல் மாலிக் ( 0550629583 )

3. அப்துல் ரஷீது  ( 0532578453 )

(i) இந்த மேன்மையான ஒழுகியா எனும் சிறப்பான அமலை அதிரை பைத்துல்மால் மூலம் கொடுத்து நன்மையை பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

2) அதிரை பைத்துல்மால் நடத்திவரும் தையல் பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது அதற்காக ரியாத் வாழ் அதிரை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்வதோடு மேலும் நமதூர் அதிரை பெண்களை தையல் பயிற்சி வகுப்பில்  கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

 3) நகை கடன் விஷயமாக கலந்து ஆலோசிக்கப்பட்டு இந்த திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு தந்து பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

4) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் OCTOBER 14-ம் தேதி  ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.


                … ஸாகல்லாஹ் ஹைர்...
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது