Monday, September 5, 2016

அதிரையில் ரசீது வழங்கப்படுமா?



இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் துல்ஹஜ் மாதம் பிறை 10 தியாக திருநாளாக கொண்டாடிவருகின்றனர். அன்றையதினம் குர்பானிக்காக ஆடு, மாடு போன்றவைகளை அறுத்து இறைச்சிகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்குவார்கள். மேலும் குர்பானி கொடுக்கும் பிராணியின் தோல் போன்ற எந்த ஒரு பாகத்தையும் குர்பானி கொடுப்பவர் விற்க கூடாது என்பதால் அதனை தானமாக கொடுத்துவிடுவர். இந்நிலையில் இதன்மூலம் லாபமடைய நினைக்கும் சிலர் தாங்கள் ஏழைகளுக்கு உதவி செய்கிறோம் என கூறி வீடுவீடாக சென்று தோல்களை வசூல் செய்து அதனை மார்க்கெட்டில் நல்ல விலைக்கு விற்றுவிடுகின்றனர்.

இதனால் உரியவர்களுக்கு அதன் பயன் கிடைக்காமல் போய்விடுகின்றது. ஆகையால் இனி வரக்கூடிய பெருநாளில் வீடுவீடாக சென்று தோல் வசூல் செய்யும் அமைப்புகள் அதற்குரிய ரசீது கொடுத்தால் பெருமளவு முறைகேடுகளை தவிர்க்கலாம். மேலும் பொதுவிசயம் சார்ந்த இதுபோன்ற சேவைகளில் ரசீது முறையை பின்பற்றுவதால் நிர்வாகமும் நன்பகதன்மையுடன் விளங்க வாய்ப்பு உள்ளன என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

இந்த ரசீது வழங்கும் முறை அதிரையில் பின்பற்றப்படுமா?

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது