உள்ளாட்சி தேர்தல் நெருங்கி விட்டதை அடுத்து அலுவலகத்தை காலி செய்தார் அதிரை சேர்மன் !!உள்ளாட்சிக்கான பதவிகள் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதியுடன் முடிவடைவதையொட்டி அதற்க்கு முன்பாக தேர்தலை நடத்திட தமிழக தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 

கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிரை நகர சேர்மனாக திமுகவை சேர்ந்த அஸ்லம் தேர்ந்தெடுக்கபட்டார். 

அவரது அலுவல் பணிகளுக்கென பேரூராட்சி மன்ற கூடத்தில் அறை ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்த நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மேயர்கள்,நகர்மன்றதலைவர், ஊராட்சிமன்ற தலைவர்கள் என உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் தங்கள் அலுவலகங்களை காலி செய்து வருகின்றனர். 

அந்த வகையில் அதிராம்பட்டினம் பேரூராட்சி மன்ற தலைவர் அஸ்லம் அவர்கள் தான் பயன்படுத்தி வந்த  அலுவலகத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது