Saturday, September 3, 2016

அதிரையில் CBDயின் உறுப்பினர் சேர்க்கை முகாம்!!


அதிராம்பட்டினம் கடற்கரை தெரு ஜும்மா பள்ளிவாசல் அருகில்  CRESENT BLOOD DONORS உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு தங்களுடைய பெயர் ,பிறந்த தேதி, இரத்தவகை, தொலைபேசி எண் மற்றும் முகவரி ஆகியவற்றை பதிவு செய்தனர்.இந்த முகாமை CBDன் நகர செயலாளர் ஹாஜா முஹைதீன் அவர்கள் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து CBDன் நகர துணை தலைவர் நூர் முகம்மது அவர்கள் இந்த முகாமை ஒருங்கிணைத்து நடத்தினார்.

இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் CBDன் உறுப்பினர்களாகிய அபு பக்கர், ஷாலிம், அப்ரித், சுஹைப்,சமீர் அலி , ஜுபைர், ரிஜிவான், சபூர்தீன், சைபுர் ரகுமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்த முகாமில் CBDன் மாவட்ட joint Secretary கலீஃபா அவர்கள் கலந்துகொண்டார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது