Saturday, April 30, 2016

முஸ்லிம்கள் எப்படி எல்லாம் பழி வாங்கப் படுகிறார்கள்...?


வாக்குச் சீட்டுக்களில் அடையாள அட்டை களிலும் வேண்டு மென்றோ அல்லது அலட்சியத்தாலோ முஸ்லிம் பெயர்களை தாறுமாறாக எழுது கிற போக்கும், அதையே காரணம் காட்டி அவசியமான உரிமைகளை மறுக்கும் போக்கும் பரவலாக இருக்கிறது.

· Mohmad என்பதையும் mohmed என்பதையும் ஒரு பெரிய ஆள்மாறாட்டமாக கருதி ஆவணங்களை நிராகரிக்கிறார்கள். பொதுவான சாமாண்ய முஸ்லிம்கள் பெரிதும் பாதிப்புக்க்குள்ளாகியிருக்கிற விச்ய்ம இது,

இன்றைக்கு வாக்கு சாவடியில் ஒரு தகராறு . வரலாறு படிச்ச நீங்க அலாவுதீன் என்ற பெயரை சரியாக எழுதாமலா வெற்றி பெற்றீர்கள். ஆவணங்களில் எழுதும் போது ஏன் சார் தவறாக எழுதுகிறீர்கள் என்று ஒருத்தர் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார்.

அப்பா பெயர் சரியில்லை தெருப் பெயர் சரியில்லை என்று பல வாக்காளர்களும் திருப்பி அனுப்ப பட்டனர்.
தேர்தலுக்கு முன்னாள் தேர்தல் கமிஷன் வழங்கிய பல வாய்ப்புக்களை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு இன்று வாக்குச் சாவடிக்கு வந்து அதிகாரிகளிடம் சிலர் தகறாறு செய்தனர் அது வாக்களர்களின் குறைபாடு என்றாலும். இது விச்யத்தில் கீழ் மட்ட ஊழியர்களின் அலட்சியத்த்திற்கும் ஒரு முக்கிய பங்கு இருக்கிறது,

என்னுடை ஆதார் அட்டைக்கு அட்ரஸ் எழுதும் போது al ameen colony என்று பதியுமாறு எத்தனை தடவை கூறும் ஏற்கெனவே al amin colony என்று தான் போட்டுவிட்ட்தாக ஒரே வார்த்தையை சொல்லி திருப்பினார் ஒரு ஊழியர், எங்களது பகுதியில் உள்ள சுமார் 10 ஆயிரம் பேருக்கு இப்படி ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் இருக்கிறது,. இந்த அட்டையை கொண்டு போய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால் எத்தனை சிரம்ம் ஏற்படும்?

ஒரு பார்வையில் இதை சரி செய்து கொண்டு வா என்று சொல்லி தூக்கி வீசிவிடுவார்கள்...

 -கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

(இது ஒரு பழைய பதிவுதான்...ஆனாலும் தேர்தல் நேரத்தில் பயன்படும் என்பதால் பதிந்தேன்)

பட்டுக்கோட்டை சட்டமன்ற வேட்பாளர் அதிரை இல்யாஸ் வேட்பு மனு ஏற்ப்பு

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் அதிரை இலியாஸ் அவர்களின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அதிகாரப்பூர் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரூர் தலைவர் அஸ்லம் அவர்களை தேர்தல் பொறுப்பாளராக நியமித்த தலைமை கழகம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பு கட்டத்தை அடைந்துள்ளது இந்நிலையில் திராவிட முன்னெற்ற தலைமை கழகம் இன்று முரசொலி பத்திரிக்கையில் தொகுதி தேர்தல் பணி பொறுப்பாளர்களை நியமித்தி வெளியிட்டு இருகிறார்கள் .அதில் பட்டுக்கோட்டை தொகுதிக்கு பொறுப்பாளராக அதிரை பேரூர் தலைவர் அஸ்லம் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கா .அண்ணாதுரை மற்றும் நகர செயலாளர் குணா சேகரன் ஆகியோரை நியமித்து இருக்கிறது தலைமை கழகம் . 


Friday, April 29, 2016

சவுதி அரேபியாவில் வெற்றி கோப்பையை கைப்பற்றிய அதிரை அணி!இந்தியா ஃபெடர்னிட்டி ஃபாரம் சார்பில் இன்று காலை ஜித்தாவில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இறுதிபோட்டியில் விளையாடிய அதிரை அய்டா அணி டெல்லி அணியை தோற்கடித்து வெற்றி கோப்பையை கைப்பற்றியது. இதில் மேன் ஆஃப் தி மேட்ச் சாதிக் மற்றும் மேன் ஆஃப் தி சீரிஸ் ரியாஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். மேலும் 8 ஓவருக்கு 64 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்த டெல்லி அணியை 7 விக்கெட்கள் விதியாசத்தில் அதிரை அய்டா அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

7ரூபாயை எட்டியது வேல்முருகன் டீ !


அதிரை டீ பிரியர்களின் சந்திப்பு இடமாக மெயின் ரோட்டில் உள்ள வேல்முருகன் டீ கடை விளங்கி வருகிறது . இங்கு பரிமாறப்படும் தேனீர் ,பலகாரங்கள் மிகவும் நேர்த்தியாகவும் சுவையாகவும் இருப்பதால் இக்கடை வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது . இந்நிலையில் 6 ரூபாய்க்கு விற்றுவந்த தேனீர் நேற்று முன்தினம் முதல் 7 ரூபாய்க்கு விற்க்கபடுகிறது. இதுகுறித்து அந்த கடையின் உரிமையாளர்களில் ஒருவரிடம் கேட்டபொழுது தற்பொழுது உள்ள விலைவாசிக்கு எங்களால் ஈடுகொடுக்க முடியவில்லை இருப்பினும் தேநீரில் உள்ள சுவையை மாற்றாமல் சிறு தொகையை மட்டும் உயர்த்தி உள்ளோம் பொதுமக்களும் வாடிக்கையாளர்களும் எப்பொழுதும் போல் தொடர்ந்து ஆதரவு தரவேண்டும் என கேட்டுகொண்டார்.

அதிரை சிஎம்பி லைன் பகுதியில் தவ்ஹீத் ஜமாஅத் புதிய மர்க்ஸ் உதயம் !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரை கிளை 2 சார்பாக பெண்கள் பயான் 27-4-2016 புதன்கிழமை அன்று மாலை 5 மணிக்கு சி எம் பி லைன் பகுதிதியில் புதிய மர்கஸில் நடைபெற்றது இதில் அல்-ஹிக்மா இஸ்லாமிய கல்லூரி மாணவிகள்  மறுமையில் மனிதர்களின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார் அதனை தொடர்ந்து மாநில தனிக்கை குழு உறுப்பினர் கோவை R ரஹ்மத்துல்லாஹ் "இவர்கள் முஸ்லீம்களா" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.இந்நிகழ்வில் அதிரை tntj கிளை 2 நிர்வாகிகள் மற்றும் அப்பகுதியில் இருக்கும் பெண்கள் மபெரும் திரளாக கலந்து கொண்டனர் 

13 ம் ஆண்டு AFFA கால்பந்து தொடர் போட்டி துவக்கம்!!

 அதிரை பிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேசன்(AFFA) அணியின் 13 ம் ஆண்டு எழுவர் கால்பந்து தொடர் போட்டி  துவங்க உள்ளது. மாவட்டங்களில் உள்ள தலைசிறந்த அணிகளை கொண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டியினை வருடந்தோறும் நடத்தி வருகிறது.   அவ்வகையில் இந்த வருடத்திற்கான 13 ம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி ஷிஃபா மருத்துவமனை எதிரில் அமைந்திருக்கும் கிராணி மைதானத்தில் இன்று முதல் துவங்க உள்ளது.

இன்றைய முதல் போட்டியில் பாலு மெமோரியல் திருச்சி  - நாகூர்  அணிகள் களம் காண உள்ளது.பட்டுக்கோட்டை பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் டெப்போசிட் கூட பெற முடியாது! (விரிவான தகவல்)கடந்த 2014 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக, பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவை இடம்பெற்று இருந்தன. இதனை அவர்கள் சில சமயங்களில் மெகா கூட்டணி என அழைத்தும் வந்தனர். பின்னர் தொகுதி பங்கீட்டின் படி மன்னார்குடி, திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பாஜகவை சேர்ந்த கருப்பு என்ற முருகானந்தம் போட்டியிட்டார். 

இதில் (ஆறு சட்டமன்ற தொகுதியில்) இவர்கள் பெற்ற வாக்குகள் வெறும் 58,521 வாக்குகள் மட்டுமே அதாவது இதேதொகுதியில் அதிமுக தனித்து போட்டியிட்டு 5,10,307 வாக்குகளும் திமுக 3,66,188 வாக்குகளும் பெற்றன. இதுவும் கூட பாஜகவின் தனி பலத்தால் பெற்றது அல்ல மாறாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக, பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளின் கூட்டணி பலத்தால் பெற்ற வாக்குகள் ஆகும். 

தற்பொழுது பாஜக தரப்பில் தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பலமான கூட்டணி அமையபெறவில்லை இதனால் பாஜக இந்த தேர்தலை தமிழகத்தில் தனது பலத்தை பரிசோதனை செய்வதற்காக மட்டுமே எதிர்கொள்கின்றது. அந்த வகையில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தனக்கு இருக்கும் வாக்குகளின் எண்ணிக்கையை அறிவதற்காக கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட கருப்பு முருகானந்தத்தை மீண்டும் களமிறக்கியுள்ளது. கூட்டணி பலம் இல்லாமல் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் காணும் பாஜகவிற்கு எப்படி பார்த்தாலும் சில ஆயிரம் ஓட்டுகள் வாங்குவதே சவாலான ஒன்று. இந்த சில ஆயிரம் ஓட்டுக்களை அவர்கள் பெற்றாலும் டெப்போசிட் கூட அவர்களுக்கு கிடைக்காது என்பதே நிதர்சனமான உண்மை.

ஏனெனில் கடந்த முறை பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த பெரிய கட்சியாக கருதப்படும் தேமுதிக மற்றும் மதிமுக ஒன்றாக இம்முறை மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றும் பாமக தனித்தும் இதே பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடுவதால் கிட்டதட்ட பாஜக டெபோசிட் கூடபெறாது என்பது தெளிவாகிவிட்டது. மேலும் சிவசேனா கட்சி சார்பில் கள்ளர் சமூகத்தை சேர்ந்த போஸ் போட்டியிடுவதால் தேவர் சமூகத்தை சேர்ந்த கருப்பு முருகானந்தத்திற்கு முக்குலத்தோர் சமூகத்தின் வாக்குகள் முழுமையாக கிடைக்காது. இதனால் பாஜக டெப்போசிட் இழப்பது உறுதி என்றே கூறலாம்.

உறுமிக்கொண்டு செல்லும் பைக்குகள்)...மக்களின் மனதில் பதற்றம், மன அதிர்வு மற்றும் ஆரோக்கிய கேடு
மனிதனின் வாழ்வில் இன்றியமையாத ஒன்று போக்குவரத்து, ஆனால் அதற்கு  தேவை பாதுகாப்பான வாகனங்கள் (கார், வேன்) மற்றும் இரு சக்கர வாகனங்கள். நமது அன்றாட மற்றும் அலுவல் தேவையான வேலைகளை மேற்கொள்ளும் நாம் முன்பே திட்டமிட்டு இரு சக்கர வாகனங்களிலோ அல்லது மற்ற பொது போக்குவரத்து வாகனங்களை பயன் படுத்துகிறோம்.

ஆனால், நம்முடைய உயிர்களுக்கே ஊரு விளைவிக்கும் வகையில் சில இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சிறார்கள் தாம் வைத்திருக்கும் பைக்குகளில் சைலேன்செர் என்ற பகுதியில் தாமாகவே ஆள்டேரசன் செய்து அசாதாரண சத்தம், மக்கள் அதிர்ந்து வீழும் அளவுக்கு இடி இடிப்பது போன்ற சத்தம் வரவழைத்து அநாகரிகமாக இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.  இதனால் பாதிக்கபடுவது ஏதுமறியாத அப்பாவி பொது மக்கள், பச்சிளம் குழந்தைகள். மேலும் இரவு நேரங்களில் திடீரென்று வரும் இது போன்ற பைக்குகளின் சத்தம் கேட்டு அதிர்ந்து பெரியவர்களில் இருந்து குழந்தைகள் தூக்கம் கெடுவதோடு மட்டுமில்லாமல், அதிர்ச்சியின் காரணத்தால் நோய்க்கு ஆளாக பட்டு துன்பம் அடைகின்றனர், ஏன் உயிரிழப்பு சம்பவம் கூட நடக்கும் அளவுக்கு நிலைமை செல்கிறது.

ஆகவே, இது சம்பந்தமாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அல்லது பொது சேவை நிறுவனங்கள் தலையிட்டு இது போன்ற பைக்குள் தவறாக பயன்படுத்தப்பட்டு, மக்களின் அமைதியான சுகாதார வாழ்வுக்கு அச்சுறுத்தலாக  இருக்கின்றதை எதிர்த்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வேண்டி கொள்ளப்படுகிறது.

இதை சாதாரண விசயமாக கருதாமல், மக்களின் அமைதியான ஆரோக்கிய வாழ்வுக்கு துணை புரியும் வகையில் செயல்படுவோம்.

மக்களின் பொது நலன் கருதி, இப்பதிவு மீண்டும்  பதிவிடப்படுகிறது, அரசு போக்குவரத்து துறை மற்றும் காவல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று மோட்டார் வாகனங்களை வேண்டுமென்றே தவறாக பயன்படுதுபுவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நன் நோக்கத்தில்.

Thursday, April 28, 2016

மரண அறிவிப்பு -கல்லுக்கொல்லை பைசல் அவர்களின் தாயார்

அதிரை கல்லுகொல்லை பகுதியை சேர்ந்த மர்ஹும் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகளும் மி .முன .உதுமான் அவர்களின் மனைவியும் ,TNTJ நிர்வாகி அப்துல் ஜப்பார் , அவர்களின் மாமியாரும் ,பைசல் அஹமது  அவர்களின் தாயாருமான நபிஸா அம்மாள் இன்று மாலை வாபதகிவிட்டர்கள் .அன்னாரின் ஜனாஸா நாளை காலை 8 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

இமாம் ஷாபி பள்ளியில் இருந்து பணி ஓய்வு பெற்ற முதல்வர்

அதிரை  இமாம் ஷாஃபி  மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் ஆங்கில ஆசிரியையாக தனது  பணியை துவங்கிய   ஆஃப்தா பேகம் MA ,MPHIL ., B.Ed   அவர்கள் 36 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினார் .இவரின் பணியில் திறமையை கண்டு பள்ளி நிர்வாகம் துணை முதல்வர் மற்றும் முதல்வராக  பணி உயர்த்தியது . இவருடைய நிர்வாகத்தின் கீழ் பள்ளி பல சாதனைகளை எட்டியது . குறிப்பாக பொது தேர்வில் பட்டுக்கோட்டை அளவில் மாணவர்கள் மதிப்பெண்கள் எடுத்தது குறிப்பிடதக்கது .பல சாதனைக்கும் உரியவரான ஆஃப்தா பேகம்   நேற்று  பள்ளியிலிருந்து பணி ஓய்வு பெற்றார். 

இவரது சிறப்பான பணியை பாராட்டி பள்ளி நிர்வாகம் , பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி பணியாளர்கள் சார்பில் பாராட்டு விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு  பள்ளி மூத்த முதல்வர் பர்கத் தலைமை வகித்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள்  O.K.M  சிபஹத்துல்லா, M.F முஹம்மது சலீம், காதர் முகைதீன் கல்லுரி பேராசிரியை M.A  தஸ்லீமா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளி ஆசிரியர்கள் ,பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள்  பள்ளி முதல்வர் ஆஃப்தா பேகம் பள்ளியில் பணிபுரிந்த காலத்தில் செய்த கல்வி பணிகள் மற்றும் சாதனைகள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி பணியாளர்கள் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.அதிரை ECR யில் சாலை விபத்து!

திருத்துறைபூண்டி யிலுருந்து அதிரை வந்து கொண்டு இருந்த கார் மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. அங்குள்ள இளைஞர்களால் அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். 


பைனாப்பிள் ஜுஸ்


தேவையான பொருள்கள்

அன்னாசிப்பழம் -1
சா்க்கரை -தேவைக்கேற்ப
தண்ணீர்-1லிட்டர்
சிட்ரிக்அமிலம் -2கிராம்
கலர் பொடி -1/2 ஸ்பூன்
எசன்ஸ் -கால் ஸ்பூன்

செய்முறை

பழத்தின் மேல்பாகத்தையும்,தோலைச் சுற்றியுள்ள இலைகளையும் அகற்றிநல்ல தண்ணீரில் கழுவியபின்கத்தியால் தோலை அகற்றவும் .
பழத்தின் மேலுள்ள குழிபோன்ற மொக்குகளையும்,கெட்டுப்போனபகுதிகளையும் ஒதுக்கிவிட்டுதுண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டுஅரைத்துக் கூழாக்கவும்சாற்றைப் பிழிந்து வடிகட்டிக் கொள்ளவும்.

மேலும் சா்க்கரையைத் தண்ணீரில் கலந்து பாகு வைத்து அதை வடிகட்டியசாறுடன் கலந்து கொள்ளவும். சிட்ரிக் அமிலத்தையும் சிறிதுதண்ணீரில் கலந்து சாற்றில் சேர்க்கவும்அத்துடன் நிறப் பொடியையும் எசன்ஸையும்கலந்து கொதிநீரில் சுத்தப்படுத்தப்பட்ட பாட்டில்களில் ஊற்றி காற்றுப்புகாவண்ணம் அடைத்து சேமித்து வைக்கவும்..

மரண அறிவிப்பு – அதிரை தமுமுக செய்யது அவர்களின் சகோதரர்


சி.எம்.பி லேனை சேர்ந்த சேஹன்னா வீட்டு மர்ஹூம் மு.அ.முஹம்மது உமர் அவர்களின் மகனாரும், எம்.மஹ்மூத் அலியார் ஹாஜியார் அவர்களின் மருமகனாரும், அஹமது அலி, முஹம்மது ஹசன், ஆகியோரின் மைத்துனரும், அஹமது ஹாஜி, செய்யது முஹம்மது புகாரி, தாஜுத்தீன், அபுல் ஹசன் சாதுலி ஆகியோரின் சகோதரரும் எம்.ஏ.முஹம்மது உமர் அவர்களின் தகப்பனாருமான எம்.ஓ.அபூபக்கர் அவர்கள் இன்று காலை 4 மணியளவில் சி.எம்.பி லேன் ஹனீப் பள்ளி எதிர் புரம் உள்ள வீட்டில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்
அன்னாரின் ஜனாசா மக்ரிப் தொழுகைக்கு பின்னர்  மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Wednesday, April 27, 2016

வாக்குச் சாவடியில் செல்ஃபி எடுத்தால் 3 மாதம் சிறை

தமிழகத்தில், தற்போது 5.79 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த சட்டமன்றத் தேர்தலில் இருந்ததைவிட 1.08 கோடி அதிகம். முதன்முறையாக வாக்களிக்கப் போகும் வாக்காளர்கள் சுமார் 6 லட்சம் பேர்தான் என்றபோதும், கடந்த தேர்தலைவிட இந்தமுறை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தவர்களின் எண்ணிக்கை உயர்வால், புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல் உயர்ந்ததே காரணம். இளைய சமுதாயத்தினர் சாப்பாட்டு இலையிலிருந்து இழவு வீடு வரை எங்கும் செல்ஃபி எடுத்துத் திரிகிறார்கள். இளைஞர்கள் இடையே அதிகரித்துக் காணப்படும் இந்த செல்ஃபி மோகத்தைக் கருத்தில்கொண்டு தேர்தல் ஆணையம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, "வாக்குப்பதிவு மையத்துக்கு 100 மீட்டர் சுற்றளவில் செல்போன் பயன்படுத்த தடை உள்ளது. இதைமீறி செல்போன் எடுத்துச் சென்றால் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது செல்போன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் பறிமுதல் செய்யப்படும். இதையும்மீறி, செல்போன் பயன்படுத்தினாலோ அல்லது வாக்குப்பதிவு மையத்துக்குள் செல்ஃபி எடுத்தால், அது தேர்தல் விதிமீறலாகக் கருத்தில் கொள்ளப்பட்டு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி மூன்று மாதம் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இளைஞர்கள் ஆர்வமிகுதியில் செல்போன் எடுத்துச் செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உம்ராவுக்கு செல்வோரின் கவனத்திற்கு - சவூதி அரசாங்கத்தின் அதிரடி முடிவு


ம்ரா கடமைக்காக சவூதி அரேபியா செல்லும் யாத்ரீகளுக்கு தனது கடமை முடிந்தவுடன் உம்ரா வீசாவை சுற்றுலா வீசாவாக மாற்றிக்கொள்ளும் அனுமதியை சவூதி அரசாங்கம் அனுமதித்து நடைமுறைப்படுத்த முடிவெடுத்துள்ளது. தேசிய சுற்றுலா மற்றும் பாரம்பரிய தளங்களுக்கான ஆணைக்குழுவின் தலைவர் இளவரசர் சுல்தான் பின் சல்மான் இதனை ஆரம்பித்து வைத்தார்.

முஸ்லிம்களுக்கான சுற்றுலாத்தளமாக இராச்சித்தை மாற்றும் முகமாக இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 

தனது உம்ரா கடமையை முடித்தவுடன் உம்ரா விசாவில் ஜித்தாவை தவிர நாட்டில் வேறு இடங்களுக்கு செல்லும் அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை. 

இதன்படி நாட்டில் உள்ள வரலாற்று சம்பந்தப்பட்ட இடங்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் தமக்கு விருப்பமான பொருற்களை வாங்கும் தேவைகளையும் முடித்துக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளது.

குண்டு கல்யாணம் அதிரையில் வாக்கு சேகரிப்பு

அதிரை பேருந்து நிலையத்தில் நேற்று அதிமுக வேட்பாளர் C V .சேகர் அவர்களை ஆதரித்து நட்சத்திர பேச்சாளர் குண்டு கல்யாணம் வாக்கு சேகரித்தார் .அதனை தொடர்ந்து முக்கிய விதிகளில் வாக்கு சேகரித்து அதிமுக அரசின் சாதனைகள் குறித்து பேசினார்.இந்நிகழ்வில் எம்.ஜீ.ஆர் மன்ற செயலர் மலை அய்யன் ,நகர செயலாளர் பிச்சை ,துணை செயலாளர் தமீம் ஆகியோர் உடன் இருந்தனர் . 


ஜவஹிருல்லாஹ் வேட்பு மனு தாக்கல்

தமிழகத்தில் 2016 கான சட்டபேரவை தேர்தல் விறுவிறுப்பு கட்டத்தை எட்டி உள்ளது .முக்கய தலைவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவஹிருல்லாஹ் வேட்பு மனு தாக்கல் செய்தார் .கூட்டணி கட்சி தலைவர்கள் உடன் இருந்தனர் .

கோடை கால காய்கறி சாலட்


தேவையான பொருள்கள் 

துருவிய வெள்ளரிக்காய் 
துருவிய முட்டை கோஸ், 
துருவிய கேரட்,
பொடியாய் நறுக்கிய சின்ன வெங்காயம்
கொத்தமல்லி தழை பொடியாய் நறுக்கியது
எலுமிச்சை சாறு
இஞ்சி சாறு
தக்காளி பொடியாய் நறுக்கியது
குட மிளகாய்  சிறிதாக நறுக்கியது
மாதுளை  2 டேபிள் 
உப்பு  


செய்முறை

அனைத்து காய்கறிகளையும்  சேர்த்து   அதனுடன் . எலுமிச்சை சாறு , இஞ்சி சாறு தேவையான அளவு உப்பு சேர்த்து  நன்கு கலந்து சாப்பிடலாம் 

இந்த கலவை கோடையில் உங்கள்    உடல்  வெப்பத்தை  குறைத்து  உடலை சீராக வைத்திருக்க உதவும்.

அதிரையில் புதிய உதயம் இக்ரா இன்டர்நேஷனல் பள்ளி

அதிரையில் புதிய உதயம் இக்ரா இன்டர்நேஷனல் இஸ்லாமிக் மற்றும் மகதப் பள்ளி இது முழுவதுமாக இஸ்லாமிய அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இது மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்பட உள்ளது. இங்கு பள்ளி அமைப்பதற்கான சரியான இடம் தேவைபடுகிறது, இப்பள்ளி அமைப்பதற்கான சரியான வீடோ அல்லது பெரிய அளவிலான இடமோ இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம்.  மேலும் தற்போது PRE.KG, LKG, UKG வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. மேலும் விபரங்கள் அறிய http://www.iqrainternationalschool.com/ லிங்கை பார்க்கவும்.

தொடர்புக்கு: 97890 71757Tuesday, April 26, 2016

மரண அறிவிப்பு [மஹ்ரூபா]


சிஎம்பி லைனை சேர்ந்த சட்டிபானை மர்ஹும் அகமது கபீர் அவர்களின் பேத்தியும் ஷைக் அப்துல் காதர் அவர்களின் மகளும் மஹ்ரூபா அவர்கள் இன்று இரவு இமாம் ஷாபி பள்ளி அருகில் உள்ள வீட்டில் வபாதாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டும்.

வேட்புமனு தாக்கல் செய்தார் அதிரை இலியாஸ்!


பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் முஹம்மது இலியாஸ் தேர்தல் நடத்தும் துணை அலுவலரும் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் டி.எஸ் ராஜசேகரிடம் தனது வேட்புமனுவை இன்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.

முன்னதாக தனது கட்சியினருடன் பட்டுக்கோட்டை இரயில் நிலையம் இப்ராஹிம் பள்ளிவாசல் அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பேருந்து நிலையம், மணிக்கூண்டு வழியாக சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தடைந்தார்.

இதில் வேட்பாளர் முஹம்மது இலியாஸ் முதன்மை முகவர் வழக்கறிஞர் முஹம்மது தம்பி, எஸ்.டி.பி.ஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஹாஜி சேக், எஸ்டிபிஐ கட்சி திருவாரூர் மாவட்ட தலைவர் எம்.ஏ லத்திப், திருவாரூர் மாவட்ட செயலாளர் சேக்தாவூது, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அபுல்ஹசன், பொருளாளர் சேக் ஜலாலுதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் தொண்டர்கள் உடன் சென்றனர்.

-அதிரை நியூஸ்

கருப்புக்கு ஓட்டு போடுங்க தீவிர வாக்கு சேகரிப்பில் இஸ்லாமிய குடும்பம்,

தமிழகத்தில் 2016 காண சட்டமன்ற தேர்தல் வரும் மே 16 தேதி நடைபெற இருக்கிறது .அதனை தொடர்ந்து பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் கருப்பு என்கின்ற முருகானந்தம் போட்டி ஈடுகிறார் .மேலும் காங்கிரஸ், அதிமுக ,SDPI கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் நேரடியாக களம் காண்கிறார்கள் .இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் முருகானந்தம் அவர்களுக்குபட்டுக்கோட்டை பிரதான சாலையில்  தீவிர வாக்கு சேகரிப்பில் இஸ்லாமிய குடும்பம்போலிஸ் பாதுகாப்போடு  ஈடுபட்டு வருகிறது .மேலும் விசாரித்த வகையில் கட்டிமேடு  சேர்ந்த இஸ்மாயில் சாஹிப் ,ஜன்னத்  பேகம் ,ரியாஸ் என்பது தெரிய வந்தது .


கோடை விடுமுறை-சென்னையில் இருந்து அதிரை செல்ல பஸ் டிக்கெட் முன்பதிவு துவக்கம்

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை இன்னும் சில தினங்களில் துவங்க இருப்பதால் சென்னையில் இருந்து அதிரை செல்லும் அஸ்பத் பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புக்கு:9840015690 

திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் தேர்தல் பணி தொடர்பான ஆலோசனை கூட்டம்

அதிரை திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் தேர்தல் பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் அதிரை நகர தலைவர் ஜலிலா மொகைதீன் தலைமையில்இன்றுகாலை  நடைபெற்றது . அதில் வேட்பாளர் வெற்றி பெற குறித்து ஆலோசிக்கப்பட்டது .மேலும் இந்நிகழ்வில் திமுக நகர செயலாளர் இராம குணசேகர் ,பழஞ்சூர் செல்வம் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆதம் செய்யது  , லைன் சாகுல் ஹமீது ,முஸ்லிம் லீக் நிர்வாகி ஹாஜா ,ஜமால் உட்பட  பலர் கலந்து கொண்டனர் .


டான்செட் நுழைவுத் தேர்வு!


எம்பிஏ, எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்காக டான்செட் நுழைவு தேர்வு ஜூன் 11,12ம் தேதிகளில் நடக்கிறது. இதற்கு மே 2ம் தேதி முதல்  விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில்  எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான் உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்காக பொதுநுழைவு தேர்வு  (டான்செட்) நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2016ம் கல்வியாண்டில் மேற்கண்ட படிப்புகளுக்கான நுழைவு தேர்வுகள் குறித்த அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. 


இத்தேர்வுகள் எழுதுவதற்காக அடுத்த மாதம் 2ம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். மே 17ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்.  நுழைவு தேர்வுகள் ஜூன் மாதம் 11, 12ம் தேதிகளில் நடைபெறும். பதிவு கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.500ம், எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினருக்கு ரூ.250ம்  செலுத்த வேண்டும். மேலும் தகவல்களுக்கு அண்ணா பல்கலை இணையதளமான www.annauniv.edu/tancet2016 என்ற முகவரியை பார்த்து  தெரிந்து கொள்ளலாம்.

மக்கள் நல கூட்டணி கட்சி தேர்தல் அலுவலகம் திறப்பு "

பட்டுக்கோட்டை மக்கள் நல கூட்டணி வேட்பாளர் செந்தில் நேற்று மாலை அதிரை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள MMS வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு வந்தார் .அதனை தொடர்ந்து தேர்தல் பணி குழு அலுவலகம் திறக்கப்பட்டது .மேலும் சமூக ஆர்வலர் இப்ராஹிம் 21 அம்ச கோரிக்கைகளை வேட்பாளர் அவர்களிடம் கொடுத்தார் .இந்நிகழ்வில் தேர்தல் பணி சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது .அதற்க்கு முன்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு .ரங்கராஜன் அலுவலகத்தை திறந்து வைத்தார் .மற்றும் MMS அப்துல் கரீம் ,கூட்டணி கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .