Saturday, July 30, 2016

பற்கள் நமது உடல் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி....!!!


மேல் வரிசையோ... கீழ் வரிசையோ... முன் நான்கு பற்கள் கிட்னி, சிறுநீர்ப்பை ஆகியவற்றின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றன.

அதற்கடுத்துள்ள சிங்கப்பல் எனப்படும் ப்ரீமோலார் பற்கள் இரண்டும் கல்லீரல், பித்தப்பையின் சக்தியை உணர்த்துகின்றன.

அதற்கடுத்த இரண்டு பற்களும் பெருங்குடல் மற்றும் நுரையீரலைப் பிரதிபலிக்கின்றன. கடைவாய்ப் பற்களுக்கு முந்தைய இரண்டு பற்களால் முறையே வயிறு, மண்ணீரல் ஆகியவற்றின் சக்தியும், கடைவாய்ப் பற்களால் இதயம், சிறுகுடலின் சக்தியும் எதிரொலிக்கப்படுகிறது.

மேற்சொன்ன உள்ளுறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அது சம்பந்தமான பற்கள் தாமும் பாதிக்கப்பட்டு அபாய சங்கு ஊதும். எனவே பல் பாதிப்புக்கு உள்ளானவர்கள், பல்லுக்கு மட்டும் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் சம்பந்தப்பட்ட உள்ளுறுப்புகளையும் சோதிப்பது நல்லது.

பற்கள் தொடர்பான அக்கு பிரஷர் சிகிச்சை, குழந்தைகளுக்கும் செய்யக்கூடிய அளவில் எளிமையானது. சில குழந்தைகளுக்கு பால் பற்கள் விழுந்து மறுபடி முளைக்க தாமதமாகலாம். அந்தக் குழந்தைகளின் குதிகால்களில் உள்ள கிட்னி சக்தி புள்ளிகளை தினசரி மூன்று வேளை விட்டுவிட்டு அழுத்தி வந்தால் போதும், பலமானப் பற்கள் முளைக்கத் துவங்கும்.

எல்லோரும் பரவலாகச் சந்திக்கும் பல் சம்பந்தப்பட்ட அடுத்த பிரச்சினை, தீராத பல்வலி. இதைக் குணப்படுத்த விரல்நுனி அழுத்தம் கைகொடுக்கிறது. முன் நான்கு பற்களுக்கு கட்டை விரலின் நுனியை தொடர்ச்சியாக இரு நிமிடங்கள் அழுத்தி விடவும்.

அடுத்த நான்கு பற்கள் வலித்தால், ஆட்காட்டி விரலையும், அடுத்த நான்கு பற்களுக்கு முறையே நடு, மோதிர விரலையும், கடைவாய்ப் பற்களுக்கு சுண்டுவிரலையும் தொடர்ந்து அழுத்தி வந்தால் பல்வலியைக் குணப்படுத்தலாம்.

பொதுவான ஒரு முறையும் உண்டு. அதாவது கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சிறிய ஐஸ்கட்டியை வைத்துத் தொடர்ந்து இரு நிமிடம் அழுத்தினால், பல்வலி பறந்துபோகும்.

அடுத்ததாக பற்குழி. பல் மருத்துவரிடம் சென்று பற்குழிகளை சுத்தம் செய்து அடைத்துக் கொள்வதுதான் இதற்குச் சிறந்த வழி. ஆனால், எதைக்கொண்டு அடைக்கிறோம் என்பது முக்கியம். தற்போது இதற்கு ‘அமால்கம்’ முறையில் வெள்ளி பாதரசக் கலவை (30:70) பயன்படுத்தப்படுகிறது. இந்த முறைக்கு உலகின் பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. காரணம், இம்முறையால் ‘பாதரச ஆக்சைடு’ என்கிற விஷம் நம் உடலுக்குள் செல்கிறது.

சாப்பிடும்போது உணவோடு உணவாகக் கரைந்தும், சூடான பானங்களை அருந்தும்போது ஆவியாக மாறியும் உடலுக்குள் இது சென்றுவிடுகிறது. இதனால் நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாகிறது. பாதரசம் இல்லாமல், ‘செராமிக்’ முறையில் அடைத்துக் கொள்வது நல்லது.

அதிரை பேரூராட்சி மெத்தனப்போக்காக செயல்படுகிறது என AIWA குற்றச்சாட்டு !

அதிரை பழைய போஸ்ட்டாபீஸ் சாலையில் கரைபுரண்டு ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை கருத்தில்கொண்டு அதிரை இஸ்லாமிக் வெல்ஃபர் அசோசியேசன் சார்பில் கடந்த 26.ஆம் தேதி பேரூராட்சி மன்றம் எதிரே சாக்கடை ஊற்றும் போராட்டம் நடத்த உள்ளதாக அதன் நிர்வாகிகள் கூறினார்.

இதன் ஆயத்தப்பணிகளான போலிஸாரின் அனுமதி, உள்ளிட்டவற்றை அவ்வமைப்பினர்  முறையாக செய்திருந்த நிலையில், காவல்துறையின் அனுமதிக்காக காத்த்திருந்தனர். 

இந்நிலையில் இருதரப்பாருக்கும் அமைதியை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு சம்மன்கள் முறையே EO முனியசாமி ,சேர்மன் அஸ்லம் உள்ளிட்டவர்களுக்கு காவல்துறையின் சார்பில் அனுப்பப்பட்டு கடந்த 28ஆம் தேதி காவல்நிலையத்தில் பேச்சு வார்த்தை நடைபெறுவதாக இருந்தது.

இதனை தொடர்ந்து AIWA அமைப்பினர் காவல்நிலையத்தில் காத்திருந்த நிலையில் பேசசுக்கு பேரூர் மன்றம்  சார்பில் யாரும் முன்வரவில்லை. 

இதனை அடுத்து ஆத்திரம் அடைந்த AIWA அமைப்பினர் நாளைமறுநாள் இதே போராட்டம் வீரியமான முறையில் நடைபெறுவதாக அறிவித்தவுடன் காவல்துறை சுறுசுறுப்புடன் செயலாற்றி இதற்க்கு முற்று புள்ளி வைக்க பேரூர்மன்ற அதிகாரிகளிடம்  கோரியது. 

இதன் அடிப்படையில் EO முனியசாமி, அய்வா அமைப்பினரை தொடர்புகொண்டு வரும் திங்கள் அன்று கழிவு நீர் கால்வாய் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது என்றும், AS அதாவது இதற்கான அனுமதி கடிதம் AD அலுவகத்தில் பெற உள்ளதாகவும் தெரிவித்த அவர், கொஞ்சம் பொறுமையுடன் இருக்க AIWA அமைப்பினர்களிடம்  கேட்டுக்கொண்டார். 

இதனடிப்படையில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் வரும் திங்கள் வரை காத்துள்ளோம் என  AIWA அமைப்பினர் கூறினர் .இதனையும் கடந்து   இவ்விவகாரத்தில் மெத்தன போக்காக பேரூர் நிர்வாகம் செயல்பட்டால் வியாபாரிகளுடன் சேர்ந்து மிகப்பெரிய ஒரு போராட்டத்தை முன்னெடுக்கும் என்கிறார் அவ்வமைப்பின் செயலாளர்.

அதிரையை எட்டி பார்த்த குட்டி மழை!

கடந்த இரண்டு நாட்களாக அதிரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் சென்னை மற்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்து வந்தது. இன்று காலை முதலே லேசான இடியுடன் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் லுஹர் தொழுகைக்கு பின் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் அதிரை முழுதிலும் குளுகுளு வென காணப்படுகிறது.


ரேஷன் கார்டை தவறவிட்ட அதிரையர்! (அதிகம் பகிரவும்)


பழஞ்செட்டி தெருவை சேர்ந்த அப்துல் வாஹிது அவர்களின் மனைவி அய்னுல்பஜ்ரியா (குடும்ப தலைவி) அவர்களின் அசல் குடும்ப அட்டை (எண். 18/G/0407647) சில நாட்களுக்குமுன் அதிரையில் தவறவிடப்பட்டுள்ளது. இதனை கண்டெடுக்கும் நபர்கள் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளி எதிரே உள்ள HIBM டிரேடர்ஸ் (நூருல் அமீன் கடை)யில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு: 9894 071892

பதிவுசெய்யப்பட்டநாள்: 30-07-2016 

இந்தியாவிற்கு வரப்போகிறது இ-பாஸ்போர்ட்.!


லோக் சபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நாட்டின் வெளிவுறவுத் துறை அமைச்சர் வி்.கே.சிங் அளித்த பதிலில், ''இ-பாஸ்போர்ட்டை நம் நாட்டில் செயல்படுத்தும் வேலை நடந்து கொண்டு இருக்கிறது'' என்றார்.

இ-பாஸ்போர்ட் நம்மை பற்றிய தகவல் சேமித்து வைக்கும் பெட்டகம் போல செயல்படும். போலி பாஸ்போர்ட்டுகளிடம் இருந்து விடுபெற இது உதவும்.

இ-பாஸ்போர்ட்டுடன் ஒரு எலக்ட்ரானிக் சிப் இணைக்கப்பட்டு அதில் நம் பாஸ்போர்ட்டில் அச்சிட வேண்டிய அனைத்து தகவல்களும் சேமிக்கப்பட்டு இருக்கும். இதை ஸ்கேன் செய்தால் போதும், நம்மை பற்றிய அனைத்து தகவல்களையும் இது கொடுக்கும்.

மிக விரைவில் குடிமக்களுக்கு இதை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது, இந்திய அரசாங்கம். இதற்கான எலக்ட்ரானிக் சிப்களை தயாரிக்க (ISP) இந்தியா செக்யூரிட்டி பிரஸ்க்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அறுபது நாடுகளுக்கு மேல் செயல்பாட்டிற்கு வந்த நிலையில் இப்பொழுது இ-பாஸ்போர்ட் இந்தியாவிற்கும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, July 29, 2016

அதிரையில் அகல ரயில் போக்குவரத்தை துவங்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம்...!!! -

அஸ்ஸலாமு அலைக்கும்... அதிரையில் விரைவில் ரயில் போக்குவரத்தை துவங்குவது குறித்து அதிரை சாரா திருமண மண்டபத்தில் வரும் ஜூலை 31 ஆம் தேதி மாலை 5 மணியளவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அதிரையை சேர்ந்த  மக்களும், ,   ஊர் நலனை கருத்தில் கொண்டு ஒன்று சேர கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அதிரையில் புதிய உதயம் ...FAE CHICK..

அதிரையில் புதிதாக FAE CHICK (Fried Chicken Product) என்னும் ரெஸ்ட்டாரெண்ட் ஜாவியா ரோட்டில்,  Honda and Bajaj Showroom க்கு பின்புறத்தில் துவங்கப்பட்டுள்ளது. FAE CHICK, FAE CHICKEN NUGGET, FAE HOT CHOCOLATE, BEENA DRINKS, SOFTTHIE (Mild) DRINKS, FAE HOT STRAWBERRY MILK. ICE CREAM, FAE 20-CHICKEN, GOLDEN CHICKEN, SPECIAL CHICKEN, DELIGHT ல், TEA, COFFEE, FRENCH FRY முதலியவைகள் கிடைக்கின்றன.  இலவசமாக Delivery மற்றும் Wifi வசதி உண்டு.

Dr.ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் நினைவுநாள் அன்று இலவச பாடப்புத்தகங்கள்..!!!

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் Dr.ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இராஜமடம் அண்ணாபல்கலைகழக மாணவர்கள் சார்பில் இராஜமடத்தில் இயங்கி வரும் ஸ்ரீராமகிருஷ்ணா சாரதா ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி பயிலும் பள்ளி மாணவர்களுக்கு படிபதற்கு தேவையான பாட பொருட்கள் வழங்கினர். இதில் பல்கலைகழக பேராசிரியர்கள் Dr. கார்த்திகேயன், Dr. ராஜப்பா , Dr. செந்தில்குமார் , Mrs. கவிதா , Mr.அருண்குமார் , Mrs.தமிழ்பிரியா. Mr.கிருஷ்ணராஜ் ஆகியோர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாட பொருட்களை வழங்கி சிறப்பித்தனர்.

திருடனை பிடித்துவிட்டேன்!தொடர் திருட்டு சம்பவங்களால் போலிஸ் தரப்பிற்கு மேல்மட்டத்திலிருந்து உடனே குற்றவாளிகளை பிடித்தாக வேண்டுமென அழுத்தம். என்ன செய்வதன யோசித்தது நரிமூளை. அரசியல் அழுத்தம் குறைய வேண்டுமென்றால் முதலில் குற்றவாளிகளை நெருங்கியது போன்ற மாயதோற்றத்தை நாமே உருவாக்க வேண்டும். 

அது எப்படி சாத்தியம்? விசாரணை என்ற பெயரில் பின்பலம் ஏதுமில்லாத அப்பாவிகளை பிடித்து அவர்களை அடித்து உதைத்து செய்யாத தவறை செய்ததாக ஒப்புக்கொள்ள செய்துவிட்டால்? அவர்களுக்கு பிரச்சனை முடிந்தது. (அநேகமாக உங்கள் கண்முன்னே விராசணை படம் வந்து செல்லலாம்.)

ஆம், தமிழகத்தில் எங்கு திருட்டு நடந்தாலும் முதலில் குறிவைக்கப்படுவது பிழைப்பு தேடி தின கூலிக்கு வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்களே. அவர்கள் தவறு செய்யவில்லை என நான் கூற வரவில்லை மாறாக தவறு செய்தவர்கள் எல்லாம் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறுவது முறையற்றவை. தவறு செய்தவன் மனிதன் அவனுக்கு என தனித்தனியாக பெயர் உள்ளது. தவறு செய்யக்கூடியவனை அவனின் பெயரை வைத்து அடையாளப்படுத்தினாலே போதும் மாறாக அவன் சார்ந்துள்ள முழு சமூகத்தின் மீதும் குற்ற பார்வைகொண்டு பார்ப்பது முட்டாள்தனம். 

திருடர்கள் என்னமோ வட மாநிலத்தில் சிறப்பு பயிற்சிகள் பெற்று தென் மாநிலத்தில் திருடுவதற்காகவே அனுப்பி வைக்கப்பட்டதை போன்றும் இதேபோல் வட மாநிலத்தில் தென் மாநிலத்தை சேர்ந்தவர்கள் இருப்பதாகவும் பிம்பங்கள் சிலரால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அனைவரையும் நாம் சந்தேக கண்கொண்டு பார்க்க வேண்டிய சூழல். இது புரியாமல் நாமும் பிறர் சொல்கேட்டு தலையை அசைத்து கொண்டிருக்கிறோம்.

முதலில் உலகில் உள்ள அனைவரையும் நாம் மனிதற்களாக பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். இயல்பாகவே மனிதன் என்றால் தவறு செய்ய கூடியவனே. அவர்களை இனம் கண்டு அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது கட்டாயம். அதையெல்லாம் விட்டுவிட்டு மொழி இன வெறியிலான அடையாளங்கள் கொண்டு விமர்சனம் செய்வது அறிவு சார்ந்தது அல்ல.

அப்படி வட மாநிலகாரனே திருடன் என கூறும் நபர்கள் தென் மாநிலகாரர்களை பற்றி யோசிக்க மறந்தது ஏன்?

விசாரணை... தொடரும்

-Z.முகம்மது சாலிஹ்

Wednesday, July 27, 2016

SMS மரைக்காயர் ட்ராடெர்ஸ் மற்றும் டால்மியா சிமெண்ட் சார்பாக கட்டிட கலைஞர்கள் கலந்துரையாடல்

இன்று மாலை 7 மணியளவில் அதிரை பவித்ரா திருமண மண்டபத்தில் SMS  மரைக்காயர் ட்ராடெர்ஸ் மற்றும் டால்மியா சிமெண்ட் சார்பாக கட்டிட கலைஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் லீயோ (Area Manager) அவர்கள் முன்னிலை வகித்தார், கிருஷ்ணா காந்த் (Technical Engineer) அவர்கள் டால்மியா சிமெண்ட் பற்றிய விழிப்புணர்வு மற்றும் சிறப்பம்சங்களை பற்றி உரையாற்றினார். மேலும் சிறப்பு விருந்தினராக விஜயகுமார் (புதுக்கோட்டை மாவட்டம் Senior Sales Officer) அவர்கள் கலந்து கொண்டார். இதில் P.V.T சத்யநாராயனன்(Senior Sales Officer) அவர்கள், பல கட்டிட கலைஞர்கள் மற்றும் அதிரை முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


அதிரையில் நாளை மின் வெட்டு!

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் அதிரையில் வியாழன்(28/07/2016) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே பொதுமக்கள் அனைவரும் மின்சார்ந்த தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Tuesday, July 26, 2016

அதிரையில் சாக்கடை ஊற்றும் போராட்டம் மூன்று நாட்கள் தள்ளிவைப்பு !

அதிரை AIWA அமைப்பின் சார்பில் இன்று காலை நடைபெற இருந்த சாக்கடை ஊற்றும் போராட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளதாக அவ்வமைப்பின் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட அவ்வமைப்பினருடன் காவலர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் .

அதில் அதிராம்பட்டினம் செயல் அலுவலர் முனியசாமி தற்பொழுது ஊரில் இல்லாததாலும். கூடிய விரைவில் வடிகால் அமைக்க காவல்துறை மூலம் அழுத்தம் கொடுக்கப்படும் என்ற உத்திரவாதம் கொடுத்துள்ளதின் பேரில் இந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அதிரை இஸ்லாமிக் வெல்பேர் அசோசியேசன் அமைப்பினர் முன்வந்துள்ளனர்.

எனவே இன்றுகாலை நடைபெறுவதாக இருந்த இப்போராட்டம் தற்காலிமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என  AIWA அமைப்பின் செயலாளர்.தெரிவித்துள்ளார்.

அதிரை காவல்நிலையம் அருகே கைவரிசையை காட்டிய கொள்ளையன்!

அதிராம்பட்டினத்தில் கடந்த சில நாட்களாக கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இரு தினங்களுக்கு முன்னர் பழைய போஸ்ட்டாபீஸ் சாலையிலுள்ள டைனமிக் செல்போன் கடை உள்ளிட்ட பல இடங்களில் கொள்ளை முயற்சி நடந்தது . இதனை அடுத்து காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 

இந்நிலையில் இன்று நள்ளிரவு காவல்நிலையம் அருகே உள்ள அம்பிகா மின்சாதன பொருள் விற்பனை செய்யும் கடையில் கதவின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்துள்ளனர் கொள்ளை போன பொருட்களின் மதிப்பு இதுவரை தெரியவில்லை. இதனை தொடர்ந்து ஹனீப் டாக்டர் மருத்துவமனை எதிரே உள்ள செலக்ஷன் மளிகை, ஆயிஷா பேபி ஷாப் ஆகிய கடைகளை பதம்பார்த்த திருடன் செலெக்ஷன் மளிகை கடையில் இருந்த 60ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளான். 

இதேபோல் ஆயிஷா பேபி ஷாப்பில் இருந்த 14ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வட்டாரத்தில் கூறப்படுவதாவது. கொள்ளையர்களின் படம் CCTV காமிராக்களில் பதிவாகியுள்ளது விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் என்றும் பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை என்றும் கூறினர் 

Monday, July 25, 2016

அதிரையில் 9 மணிநேர மின்தடை! மின்சாரவாரியம் அறிவிப்பு!அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 28ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9மணி முதல் மாலை 5மணி வரையில் சுமார் 8 மணிநேரம் மின்தடை செய்யப்படும் என மின்சாரவாரியம் அறிவித்துள்ளது.

இதனால் பொதுமக்கள் முன்கூட்டியே தங்களின் மின்சாரம் சார்ந்த வேலைகளை முடித்துக்கொள்ள வேண்டும்.

அதிரையில் இன்று பலத்த மழை!

அதிரையில் சில நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது, மேலும் அவ்வப்போது சிறு தூறல் பெய்தது. அதனை தொடர்ந்து இன்று இரவு 10 மணியளவில் I லேசான இடியுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அதிரை முழுதும் குளுகுளு என காணப்படுகிறது.

எச்சரிக்கை பதிவு கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்.!


கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - இணையதளத்தில்!!!
எச்சரிக்கை 100 முறை! சகோதர சகோதரிகளே!

நாம் நம் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டால் உணர்ச்சி மிகுதியால் சில நேரம் நம்முடைய துணையிடம் /  நிச்சயம் முடிக்கப்பட்ட பெண்ணிடம் தொலைபேசியில் / கை
ப்பேசியில் / இணை தொலைபேசி என்று சொல்லக்கூடிய வாய்ப் பேசிகளில் (Voip Phones) பேசும் போது எல்லை மீறி அந்தரங்க விஷயங்களை பேசி விடுகிறோம். 

இது யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றோ அல்லது யாரும் இந்த பேச்சுகளை ஒட்டு கேட்க முடியாது என்றோ நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படி நீங்கள் யாரேனும் நினைத்திருந்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

"நெட்மூலம் பகிரங்கமாகிக்கிட்டு இருக்கும் என் மானத்தை நீங்கதான் காப்பாத்தணும்'’ என்றபடி நம்மிடம் கண்ணீருடன் வந்தார் அந்த இளம் குடும்பத்தலைவி. 

"முதல்ல கவலையை விடுங்க. என்ன பிரச்சினை? உங்க படத்தை யாராவது...?'’ என நாம் முடிக்கும் முன்பே...

"இல்லைங்க. எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம்தான் ஆகுது. கல்யாணமான நாலாவது மாசமே என் கணவர் குவைத் போயிட்டார். என் மேல் அளவுகடந்த காதல் அவருக்கு. அதனால் இரவு நேரங்கள்ல எங்கிட்டே ரொமாண்டிக்கா பேசுவார். என்னையும் அவர் அளவுக்கு பேசவைப் பார்..'' சொல்லும்போதே அவர் கண்கள் சங்கடம் கலந்த பயத்தில் தவித்தது.

"சரி விடுங்க. இது பல இடங்களில் நடக்குறதுதானே... இதில் என்ன பிரச்சினை?'’ 

அந்த குடும்பத் தலைவி, அடுத்து சொன்ன தகவல் நம்மை ஏகத்துக்கும் அதிரவைத்தது.

"அவரும் நானும் ரொமாண்டிக் மூடில் எல்லை மீறி பேசிய அந்தரங்கப் பேச்சுக்கள்... இப்ப இண்டர் நெட்டில் வருதாம். யாரோ ஒரு கிரிமினல் பேர்வழி... எங்களுக்கே தெரியாமல்... எங்க பேச்சை ரெக்கார்டு பண்ணி... இப்படிப் பண்ணியிருக் கான். இதை என் வீட்டுக்காரர்தான் பார்த்துட்டு... அதிர்ந்துபோய்... எனக்குத் தகவல் சொன்னார். 

அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்த நாம்... அவர் சொன்ன விவகாரமான இணையதளத்தை கவனித்தோம். 

கணவன்- மனைவிகள், .... ஜோடிகள், என பலதரப்பட்ட ஆண்-பெண்களின் அப்பட்டமான உரையாடல்கள்... அங்கே பதியப்பட்டிருந்தன. காதுகள் கூசும் அளவிற்கு... பலரும் தங்களது அந்தரங்க உணர்வுகளை யார் கவனிக்கப்போகிறார்கள் என்ற தைரியத்தில்.. தங்கள் பார்ட்னர்களிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்... அங்கே தோரணம் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. 

நமக்குத் தெரியாமல் நாம் செல்போனில் பேசுவதை தனி நபர் ஒருவரால் ரெக்கார்டு செய்யமுடியுமா? என விசாரிக்க ஆரம்பித்தோம். 
பிரபல மொபைல் கம்பெனியில் டெக்னிக்கல் பிரிவு உயர் அதிகாரியாகப் பணிபுரியும் அவரைத் தொடர்புகொண்டோம். அந்த அதிகாரியோ... ஒரு குபீர்ச் சிரிப்பை உதிர்த்துவிட்டு... "இந்த மாதிரியான பேச்சுக்கள் 3 விதமா பதிவாக வாய்ப்பிருக்கு. 

முதல் வகை... நீங்களோ, நானோ மொபைல்ல ரெக்கார்டிங் வாய்ஸ் சாஃப்ட்வேர்கள இன்ஸ்டால் பண்ணிக்கிட்டோம்ன்னா நமக்கு வர்ற இன்கம்மிங், அவுட்கோயிங் கால்கள் தானா துல்லியமா பதிவாயிடும். இதில் பெரிய பிரச்சினை இல்லை. 

இரண்டாவது, எங்களை மாதிரியான செல்போன் நிறுவனங்கள் கஸ்டமர்களின் பிரச்சினைகள தீர்த்து வைக்க 24 மணி நேரமும் இயங்கும் கால்சென்டர்கள உருவாக்கி வச்சிருக்கு. இந்த கால்சென்டர்கள்ல பணிபுரியும் ஒருத்தர் நினைச்சா... யார் பேச்சை வேணும்னாலும் ரெக்கார்ட் பண்ணமுடியும். 

பொதுவா நைட் ஷிப்டில் அதிக வேலையிருக்காது. அப்ப டூட்டியில் இருக்கறவங்க... நீண்ட நேரமா ஒரு கால் பேசப்படுதுன்னா அவுங்க என்ன பேசறாங்கன்னு ஒட்டு கேட்க முடியும். நைட்ல கணவன்-மனைவி, உணர்ச்சியோட பேசுவாங்கங்கற ரகசியம் எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே. 

இந்த மாதிரி பேச்சுக்களை கேட்டுக்கேட்டு மயங்குற சிலர் இருக்கத்தான் செய்றாங்க. அப்படி ரெக்கார்ட் பண்ணியது அப்படியே பரவி நெட் வரைக்கும் வர வாய்ப்பிருக்கு.

மூன்றாவதாக, சில குறிப்பிட்ட இணையதளங்கள், "உங்களுக்காக எங்களது பெண்கள் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம், செக்ஸ் பற்றி மற்றவர்களிடம் பேச தயங்குவதை இவர்களிடம் பேசலாம்'னு குறிப்பிட்டு 12 இலக்க எண் தந்திருப்பாங்க. 

அதுல ஏதாவது ஒரு நம்பர காண்டக்ட் பண்ணி பேசனிங்கன்னா நீங்க பேசற பேச்சை உங்களுக்கே தெரியாம ரெக்கார்ட் பண்ணி நெட்ல போட்டுடுவாங்க. இது காசு கொடுத்து நமக்கு நாமே சூன்யம் வச்சிக்கறதுக்கு சமம்'' என்றார் விரிவாக.

பெண்களுடன் மோசமானஉரையாடல்களுக்கு அழைப்பு விடுக்கும் அந்த இணையதளங்கள் குறித்தும் விசாரித்தோம். அதில் கையைச் சுட்டுக்கொண்ட ஒரு நண்பர் தன் அனுபவங்களை சங்கோஜத்துடனே சொல்ல ஆரம்பித்தார்.

"பொதுவா ...இந்த மாதிரியான வெப்ஸைட்டுகளில் நான் உலவிக்கிட்டு இருந்தபோது... "எந்த நேரத்திலும் மனதில் இருக்கும் ஆசைகளை உரையாடல் மூலம் இந்தப் பெண்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்'னு ஒரு வெப்ஸைட் கூவியழைத்தது. 

அவங்க கொடுத்திருந்த ஐ.எஸ்.ஐ. எண்ணில் தொடர்பு கொண்டேன்.எடுத்த எடுப்பிலே "என் பேரு லதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), மும்பையிலுள்ள காலேஜ்ல படிக்கறேன். என் சொந்தவூர் சென்னைதான். உங்களோட பேசணும்னு ஆசையா இருக்கு' என்றவள், இனிமையாக பேசி மயக்கினாள். இப்படி அவளோடு 22 நிமிடம் உரையாடல் நீண்டது. 

அந்த மாத பில் வந்தபோது மயக்கம் வந்துவிட்டது. காரணம் அந்த 22 நிமிட பேச்சுக்கு 3,050 ரூபாய் சார்ஜ் ஆகியிருந்தது. நொந்துபோய் இதுபற்றி விசாரித்த போது இணையதளத்தரப்பும் தொலை பேசித்தரப்பும் கூட்டு சேர்ந்து என்னை மாதிரியான சபல பார்ட்டிகள்கிட்ட பணம் புடுங்க இந்த மாதிரி பண்ணிக்கிட்டிருக்காங்கன்னு தெரிஞ்சிது. 

லோக்கல் கால்களை ஐ.எஸ்.டி கால்களா மாத்தித்தான் பணம் பறிக்கிறார்கள்'' என்றார் எரிச்சலாக. வழக்கறிஞரான ஒருவர் நம்மிடம் "சென்னையிலுள்ள பிரபலமான கடைவீதி ஒன்றில்
குளோனிங் செல்லை உருவாக்கித்தர்றாங்க. 

இது எதுக்குன்னா கணவன் மீது மனைவிக்கோ... அல்லது மனைவி மீது கணவனுக்கோ சந்தேகம் இருந்தா... அவங்க சிம் கார்டைக் கொடுத்து அதே நம்பருக்கான குளோனிங் சிம்கார்டை வாங்கிக்கலாம். சம்பந்தப்பட்டவங்க எவரிடம் பேசினாலும் இந்த குளோனிங் சிம் போட்ட செல்போனிலும் கேட்கும்.

இப்படி ஒரு வியாபாரம் அங்க நடக்குது. அதேபோல்... இன்னொரு விஷேச ஆண்டனாவையும் அங்க விக்கிறாங்க. அந்த மினி சைஸ் ஆண்டனாவை வீட்டு மொட்டை மாடியில பொருத்திட்டா போதும்... 

அக்கம் பக்கத்தலயிருக்கற செல்போன் லைன்களுக்கு வர்ற அத்தனை கால்களையும் ஒட்டுக்கேட்டு.. ரெக்கார்டும் பண்ணமுடியும். இதன் மூலம் சின்னஞ்சிறிய ஜோடிகள், தம்பதிகள், இவங்க அந்தரங்க உரையாடல்கள் கொள்ளையடிக்கப்படுது. 

இந்த குளோனிங் செல்போனை அவங்க 20 நிமிசத்தில் ரெடிபண்ணிக் கொடுக்குறாங்க. இதுக்கு சார்ஜ் 3,500 ரூபாயாம். நாடு எங்கேயோ போய்க்கிட்டு இருக்கு. இந்த மாதிரியான டேஞ்சரஸ் விவகாரங்களை உடனே அரசாங்கம் தடுக்கணும்'' என்றார். 

சென்னையில் உள்ள ஒரு, சைபர் க்ரைம் பிரிவு ஏ.சி. யிடம் இதுபற்றி நாம் கேட்டபோது..."மொபைல்ல சாஃப்ட்வேர்ஸ் இன்ஸ்டால் பண்ணி ரெக்கார்ட் பண்ணிக்கறது அவுங்களோட தனிப்பட்ட விருப்பம். 

ஆனா அத வச்சி மிரட்டறது, வெளியிடறது குற்றம். இதுக்கு கடுமையான தண்டனையுண்டு. நம் பேச்ச மொபைல் கம்பெனிங்க ரெக்கார்ட் பண்ண வாய்ப்பு குறைவு. குளோனிங் சிம், மினி ஆண்டனாவெல்லாம் புது விவகாரமாயிருக்கு. இதனால பெரிய பிரச்சினைகள் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. நாங்க இத தீவிரமா கண்காணிக்கிறோம்''’ என்றார் உறுதியான குரலில்.

மொபைல் போனில் பேசும் முன் யோசித்து பேசுங்கள். இல்லையேல்.... உங்கள் அந்தரங்கமும் நாளை உலகமெங்கும் உலா வரலாம்.
இது சம்பந்தமாக சைபர் க்ரைம் ஸ்பெஷலிஸ்ட்டான அட்வ கேட் ஒருவர், "வெளிநாட்டிலுள்ள கணவனிடம் மனைவி தன் ஆசைகளையும், ஏக்கம் விருப்பங்களையும் வெளிப்படுத்தி சந்தோஷமாகப் பேசுவது உண்டு. 

இளம் பெண்கள் அப்பா, அம்மாவிடம் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களைக் கூட தோழிகளிடம் பகிர்ந்து கொண்டு பேசுவதுண்டு.
சிலர் கொஞ்சிக் குலவுவது மட்டுமில்லாமல், உணர்ச்சியை தூண்டும் விதமாக ஃபோனில் பேசுவது உண்டு. 

இதையெல்லாம் ஒருவன் ஒட்டுக் கேட்டு அதை ரெக்கார்டும் செய்கிறான் என்றால் என்ன நடக்கும்? ஆண்களிடம் ப்ளாக்மெயில் செய்து பணமும், பெண்களிடம் கற்பையும் சில கில்லாடிகள் களவாட வாய்ப்பிருக்கிறது. இதைவிட டேஞ்சரஸ் என்னன்னா... டெரரிஸ்ட்டுகள் நம்ம சிம்கார்டை குளோனிங் சிம்கார்டாக்கி விட்டால் அவ்வளவுதான். 

போலீஸிடம் நாம்தான் மாட்டிக்கொள்ள வேண்டிய சூழல்.    ஆக, 
ஒவ்வொரு மாதமும் பில்தொகை எவ்வளவு வருது என்பதை "செக்' பண்ணணும்.

நமக்கு அறிமுகமே இல்லாத செல் நம்பருக்கு கால் போயிருந்தாலோ, ராங்-கால் வந்து நாம் கட் பண்ணியிருப்போம்... ஆனாலும் தொடர்ந்து பேசியதுபோல பில் வந்திருந்தாலோ, நாம் எந்த நம்பருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப் பாமலேயே "டெலிவர்டு' ஆனது போல ரிப்ளை வந்தாலோ அலட்சியப்படுத்த வேண்டாம். உடனடியாக காவல் துறையில் புகார் கொடுத்து கண்காணிக்க வேண்டும். 

சிம்கார்டை யாரிடமும் கொடுக்காமல் கேர்ஃபுல்லாக இருக்க வேண்டும். ஒருவேளை சிம்கார்டு தொலைந்து போனாலும் புகார் கொடுத்து "லாக்' பண்ணிவிட வேண்டும்.'' என்று உஷார்படுத்துகிறார் அவர். 

(நன்றி: நக்கீரன்)

சகோதர சகோதரிகளே, நம்மில் பலரும் இது போன்ற செயல்களை தினமும் செய்து கொண்டிருக்கிறோம். இது எங்கோ நடக்கிறது, நமக்கேன் கவலை என்று இருந்து விடாதீர்கள். இதை எச்சரிக்கையாக எடுத்து உங்கள் வாழ்க்கையில் முதலில் கடைபிடியுங்கள். 

தொலைபேசியில் / கைப்பேசியில் / இணை தொலைபேசி என்று சொல்லக்கூடிய வாய்ப் பேசிகளில் (Voip Phones) எல்லை மீறி நிதானம் இழந்து மனைவி தானே என்றி நினைத்து அந்தரங்க விஷயங்களை எக்காரணம் கொண்டும் பேசாதீர்கள், விஷயத்தின் விபரீதத்தை சொல்லி புரிய வையுங்கள். 

இதை உங்கள் நண்பர்களுக்கும், நல விரும்பிகளுக்கும் சொல்லி புரிய வையுங்கள். திருமணமான புதிதில் எல்லோருக்கும் இருக்கும் பிரச்சனை தான், ஆனால் நாம் உஷாராக இல்லாது போனால் நம்முடைய அந்தரங்கமும் இணையதளத்தில் வெளிவந்து அதன் பின் வருத்தப்பட நேரிடும்.

அதிரையில் "குலோப் இண்டீரியர்"!


அதிரையில் அமைந்துள்ள குலோப் இண்டீரியர் நிறுவனத்தில் கிச்சன் மாடல் கபோர்டு, ஃபால் சீலிங், டிவி சோ கேஸ், ரூம் செட்டிங், ஆஃபிஸ் செட்டிங் ஆகிய வேலைப்பாடுகள் மிக சிறப்பாக செய்துதரப்படும்.

தொடர்புக்கு: T.Imran Khan +91 9566808851Sunday, July 24, 2016

அதிரை பேரூராட்சி அலுவலகம் முன்பு சாக்கடை ஊற்றும் போராட்டம் !

அதிராம்பட்டினம் 11வது வார்டுக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது பழைய போஸ்ட்டாபீஸ் சாலை . இந்த சாலையில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக கூறி JCB இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை பேரூராட்ச்சி நிர்வாகம் அகற்றியது . 

இதில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் இருந்து வெளியாகும் கழிவு நீர் கால்வாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த சிலமாதங்களாக சாலைகளின் இரு புறத்திலும் கழிவு நீர்கள் கரைபுரண்டு ஓடிக்கொண்டுள்ளது. 

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள், மற்றும் பொதுமக்கள் பேரூர் மன்ற மநிர்வாகத்தை அணுகினர். ஆனால் இதுவறை அந்தச்சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் கழிவுநீர் நின்றபாடில்லை. இதனால் அல் அமீன் ஜாமிஆ பள்ளிக்கு தொழுகைக்கு வரும் நபர்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாவதோடு அக்கம்பக்கத்தில் வசிக்கும் குடும்பத்தினர் நோயின் பிடியில் சிக்கியுள்ளனர். 

இதனை கருத்தில்கொண்டு வருகின்ற 26.07.2016 அன்று காலை 11 மணிக்கு அதிரை இஸ்லாமிக் வெல்ஃபர் அசோசியேசன் சார்பில் பேரூராட்சி மன்றம் எதிரே சாக்கடை ஊற்றும் போராட்டம் நடைபெற உள்ளது. 

இதில் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுமாய் AIWA அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   

அதிரை டைனமிக்கில் திருட முயற்சி! திருடன் படம் சிக்கியது!அதிரை போஸ்ட் ஆஃபிஸ் தெரு பாவா மெடிக்கல் அருகே செயல்பட்டுவரும் டைனமிக் மொபைல் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் நேற்றிரவு திருடர்கள் பூட்டை உடைத்து திருடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அந்த வழியாக வந்த ஒருவரை பார்த்து அவர்கள் தப்பித்து ஓடிவிட்டனர். 

இதனையடுத்து இன்று காலை அதிரை காவல்நிலையத்தில் இதுகுறித்து கடை உரிமையாளர்கள் புகார் அளித்தனர். மேலும் காவல்துறை அதிகாரிகள் கடையில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அதில் கிடைத்த படங்களை வைத்து விசாரித்துவருகின்றனர். இதனால் விரைவில் திருடர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இதற்கு முன் அதே திருடர்கள் அருகே இருந்த பிற கடைகளிலும் திருட முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


Saturday, July 23, 2016

சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று வெளியிட்ட செய்தியில், ''சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10, 12-ம் வகுப்புகள், ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு படிக்கும் கிறிஸ்தவம், இஸ்லாம், புத்தம், சீக்கியம், பார்சி, ஜெயின் மதங்களைச் சேர்ந்த சிறுபான்மை மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
பள்ளி மேற்படிப்பு திட்டத்தின்கீழ் கல்வி உதவித் தொகை பெற மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
11 மற்றும் 12-ம் வகுப்ரபு மாணவ, மாணவிகள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் வரும் 31-ம் தேதிக்குள்ளும், ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு மாணவ, மாணவிகள் வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.
உதவித் தொகைகள் மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். எனவே, வங்கிக் கணக்கு எண், வங்கி குறியீடு எண், ஆதார் எண் ஆகியவற்றை அவசியம் சமர்ப்பிக்க வேண்டும். உரிய காலத்தில் விண்ணப்பித்து கல்வி உதவித் தொகை பெற்று பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, July 22, 2016

அதிரையில் மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி

மெ.மு சஹீது / SSM குல் முஹமது இவர்களின் நினைவாக ASC SPORTS CLUB 11 ம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி இன்று துவங்கப்பட்டது. மேலும் இப்போட்டி இன்று இரவு மற்றும் நாளை மட்டும் நடைபெறும்.சுட்டெரிக்கும் வெயில் தவிக்கும் துபாய் மக்கள்


துபாய் நாட்டில் வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள்,
ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் கோடை மாதங்கள் தான் என்றாலும் இந்த முறை வெப்பநிலை அதிகரித்துள்ளது, துபாய் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெப்பநிலையானது 50C ஆக உள்ளது,

அபுதாபியில் 48 டிகிரி செல்சியஸ் வரையும் வெயில் தாக்கம் உள்ளது.
இந்த வெப்பநிலையின் தாக்கம் வருகிறது சனிக்கிழமை வரை நீடிக்கும் என்றும் அதிகபட்சமாக இன்னும் 2 நாட்களுக்கு பிறகு தூசிகளுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என National Centre of Meteorology மையம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த தூசி மேகங்கள் 3,000 மீற்றர் தூரம் வரை செல்வதால் மத்திய பகுதிகளில் உள்ள இடங்களில், பார்க்கக்கூடிய தன்மை பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

யூலை 15 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 21 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் கடும் வெயில் நிலவும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

தற்போது இந்த வெப்பம் மிகுதியின் தாக்கத்தால், ஓமன் கடலினை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர், இன்னும் 2 நாட்களுக்கு இந்த கடலில் மக்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துபாயில் நெருப்புடா... நெருங்குடா என்ற கபாலி பட பாடல் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளதோடு மட்டுமல்லாமல், வெயிலும் சுட்டெரிப்பதால் அந்த பாடல் அங்குள்ள மக்களுக்கு நிஜமாகவே பொருந்தியுள்ளது.

தமிழக கல்வித்துறை: மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு.!


தமிழக கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் 11 விதிமுறைகளை மாணவர்கள் பின்பற்ற அறிவுறுத்தும்படி சுற்றறிக்கை  அனுப்பி உள்ளது.

இந்த விதிமுறைகள் பள்ளிகளில் பின்பற்றப்படுகிறதா என்பதை  முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

 இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலை கல்வி பயிலும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய  ஒழுக்க நடைமுறைகள்  பற்றி பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. 

 இதை மீறும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டு  உள்ளது.

கல்வித்துறையின் 11 விதிமுறைகள்:  

* காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வந்து சேர வேண்டும்.

* லோ ஹிப், டைட் பிட் ‘பேன்ட்’கள் அணிந்து வர அனுமதி இல்லை.

* அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். சட்டையை இறுக்கமாக அணியக்கூடாது

* மாணவர்கள் அணியும் சட்டை நீளம் ‘டக் இன்’ செய்யும்போது வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும்.

* சீரற்ற முறையில் ‘இன்’ பண்ண கூடாது. கறுப்பு கலர் சிறிய ‘பக்கிள்’ கொண்ட பெல்ட் மட்டுமே அணிய வேண்டும்.

* கை, கால் நகங்கள், தலை முடி சரியான முறையில் வெட்டப்பட (போலீஸ் கட்டிங்) வேண்டும்.

* மேல் உதட்டை தாண்டாதவாறு மீசை இருப்பது அவசியம். முறுக்கு மீசை வைத்திருந்தால் கடும் நடவடிக்கை பாயும்.

* கைகளில் ரப்பர் பேண்டு, கயிறு, கம்மல், கடுக்கன், செயின் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது.

* பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியர் அனுமதி பெற்றுத்தான் விடுமுறை எடுக்க வேண்டும்.

* பைக், செல்போன், ஸ்மார்ட் போன் கொண்டு வர அனுமதி இல்லை. மீறினால் பறிமுதல் செய்யப்படும். திரும்ப ஒப்படைக்கப்பட மாட்டாது.

* பிறந்த நாள் என்றாலும் மாணவர்கள் சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டும்.

இவ்வாறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில்,  மாணவர்களின் ஒழுக்க நெறி முறைகளை கடைபிடிக்க செய்வதில்  பள்ளிகளுக்கும், ஆசிரிய பெருமக்களும் பெரும்பங்கு உண்டு.

இந்த  11 விதிமுறைகள் குறித்து பள்ளிகளில் பேனர் வைக்கவும், துண்டு பிரசுரங்கள் மூலமும், பெற்றோரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.