Monday, September 12, 2016

தாய்லாந்தில் அதிரையர் சிறப்பாக பெருநாள் கொண்டாட்டம்!!

இன்று உலகம் முழுவதும் ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறதுஇன்று காலைதாய்லாந்து  நடைபெற்ற  பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் ஒன்றாக கலந்து கொண்ட ஒருவருக்கொருவர் தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.


பஹ்ரைன் அதிரையர்களின் ஹஜ்பெருநாள் சந்திப்பு ( படங்கள் இணைப்பு )

இன்று உலகம் முழுவதும் ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை பஹ்ரைன்ல் நடைபெற்ற  பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் ஒன்றாக கலந்து கொண்ட ஒருவருக்கொருவர் தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.


சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள அதிரையர்களின் ஹஜ்பெருநாள் சந்திப்பு ( படங்கள் இணைப்பு )

இன்று உலகம் முழுவதும் ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரியாத்தில் இருக்கும் அதிரையர்கள் ஒன்றாக கூடி ஹஜ் பெருநாள் தொழுகையை  நிறைவேற்றி பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்கள்.


அயல்நாடு வாழ் அதிரையர்களின் அசத்தல் பெருநாள் செல்ஃபி !


உலகெங்கும் வியாபித்து இருக்கும் அதிரையர்கள் அந்தந்த நாடுகளின் பிரகாரம் இன்று தியாக திருநாளாம் ஹஜ்ஜுப்பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். 

அவர்களில் பெரும்பாலோனோர் குழுவாக நின்று செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அதில் சிலர் நமது அதிரை எக்ஸ்பிரஸ்சில் பதிவேற்றம் செய்ய  விரும்பி மின்னஞ்சல் வழியே அனுப்பி வருகின்றனர் அதில் சிலவற்றை இப்பொழுது பதிந்துள்ளோம். Sunday, September 11, 2016

முத்துப்பேட்டையில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி!முத்துப்பேட்டையில் இன்று மாலை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் வீடு அருகே வந்த பொழுது கலவரத்தை ஏற்படுத்தும் நோக்குடன் சிலர் கற்களை வீட்டிற்குள் வீசியுள்ளனர். ஆயிரகணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியிலிருந்த பொழுதும் கூட இந்த விசம செயலில் அவர்கள் ஈடுபட்டுள்ளது பொதுமக்களின் பாதுகாப்பினை கேள்வி குறியாக்கி உள்ளது.

இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முத்துப்பேட்டை ஜமாத் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி காவல்நிலையத்தில் புகார் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் முஸ்லீம் லீக் கட்சி சார்பிலும் தனியாக புகார் கொடுக்கப்பட இருக்கிறது.

இதேபோல் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் பொழுதும்கூட இதே வீட்டிற்குள் கலககாரர்கள் கற்களை வீசி தாக்கியது குறிப்பிடத்தக்கது.

அதிரையில் நாளை ஹஜ் பெருநாள் தொழுகை அறிவிப்பு(சர்வேதேச பிறை)

சவூதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளில் இன்று துல்ஹஜ் பிறை 9 அரபா தினமாகும். இன்று ஹாஜிகள் அரபா மைதானத்தில் குழுமி ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளனர் . நாளை ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் ஆகும் .
சர்வேதேச பிறை அடிப்படையில் நாளை ஹஜ்பெருநாள் தொழுகை அதிரையிலும்  நடைபெற உள்ளது.

ஷிஃபா எதிரே உள்ள  கிராணி மைதானத்தில் காலை 7 மணியளவில் நடைபெறவுள்ளது. 

இதில் பெண்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும்  தொடர்புக்கு: ஹசன்: +91 9042 303 404 தாஜ் : +91 9944 916 614

அதிரை மாணவர்களின் முயற்சி!!!

அதிராம்பட்டினத்தில் மாணவர்கள் இணைந்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதிராம்பட்டினம் கடற்கரை தெருவில் பல இடங்களில் குப்பைகள் கிடந்தன, இதனை அப்பகுதியில் வசிக்கும் மாணவர்கள் தாங்களாகவே இணைந்து அந்த குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வு அதிரையில் வசிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு விழிப்புணர்வாக அமைந்தது. மேலும் பலரது பாராட்டுகளை பெற்றனர்.


மாற்று திறனாளிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் !


பட்டுக்கோட்டையில் வருகின்ற 18ஆம் தேதி அனைத்து வகை மாற்று திராளிகளின் ஆலோசனை கூட்டம் அதிரை பஹத் தலைமையில் நடைபெற உள்ளது . இந்த ஆலோசனை கூட்டத்தில் 40% ஊனம் இருந்தும் உதவித்தொகை கிடைக்காதவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கபடும் மேலும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நிரந்தரம் செய்துகொள்ள வழிமுறைகள் அரசு வேலைவாய்ப்பில் 3% இட ஓதிக்கிட்டிற்காக காத்திருக்கும் மாற்றுதிறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் பெற்று தர போராட முனைப்புக்காட்டி வரும் இந்த அமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் தவறாது கலந்துகொண்டு பயனடைய கேட்டுகொள்ளபடுகிறார்கள் .

சவூதி அரேபியாவில் ஹஜ் பெருநாள் தொழுகை நேர அட்டவணை!


சவூதி அரேபியாவில் ஈத் உல் அல்ஹா (ஹஜ் பெருநாள்) தொழுகை நேர அட்டவணையை அந்நாட்டு அரசு வெளியிட்டு உள்ளது.

Saturday, September 10, 2016

அமீரகத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை நேர அட்டவணை!

அமீரகத்தில் ஈத் உல் அல்ஹா (ஹஜ் பெருநாள்) தொழுகை நேர அட்டவணையை அந்நாட்டு அரசு வெளியிட்டு உள்ளது.

புனித ஹரம் ஷரீபில் என்றுமில்லாத பாதுகாப்புடன் நேற்றைய குத்பாவில் 1.5 மில்லியன் மக்கள் பங்கேற்பு!


இந்த ஆண்டு உலகம் முழுவதும் இருந்து ஹஜ் பயணத்தை மேற்கொண்டுள்ள இஸ்லாமியர்களில் ஒன்றரை லட்சம் பேர் மெக்கா நகரை சென்றடைந்துள்ளனர். அடுத்த சில நாட்களில் அந்த எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும்.

இந்த ஆண்டுக்கான சவுதி அரேபியாவின் ஹஜ் புனித யாத்திரை நேற்று  வெள்ளிக்கிழமை துவங்கியுள்ளது. நேற்றைய குத்பாவில் 1.5 மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர்.  

இந்த வருடம் விபத்து எதுவும் நிகழாமல் இருக்கும் பொறுட்டு சவுதி அரசு பல்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
எதிர்பாரா விளைவுகளைத் தவிர்க்கும் நோக்கில் புனிதப் பயணிகள் அனைவருக்கும் மின்னியல் கைப்பட்டை வழங்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகமுள்ள இடங்களை அறிந்து புனிதப் பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை வகுத்துக்கொள்ள அது உதவும்.

புனித மக்காவில் மட்டும் 800க்கும் அதிகமான சுற்றுப்புறக் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புனிதப் பயணிகள் இங்கு வந்து சேர்ந்ததிலிருந்து, கடமைகளை முடித்துவிட்டுத் திரும்பும்வரை அவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்தவிதச் சமரசமும் செய்யப்படமாட்டாது என்று மேஜர் ஜெனரல் முகம்மது அல் அஹ்மதி கூறினார்.

Friday, September 9, 2016

அதிரையில் ஆடுகள் மீது லாரி மோதல்!அதிரை ஈசிஆர் சாலை வழியாக மரம் ஏற்றி சென்றுகொண்டிருந்த லாரி திடீரென குறுக்கே வந்த ஆடுகளின் மீது மோதியது. இதில் மூன்று ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. இருப்பினும் லாரி ஓட்டுநருக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

அதிரையில் மமகவின் நான்காம் கட்ட தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்!!!!


                    அதிராம்பட்டினத்தில் இன்று (09/09/2016)மனித நேய மக்கள் கட்சியின் நான்காம் கட்ட  தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அதிராம்பட்டினம் கடற்கரை தெரு ஜும்மா பள்ளிவாசல் அருகில் இன்று மமகவின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் பல பொதுமக்கள் தங்களுடைய பெயர், தொலைபேசி எண்,முகவரி ஆகியவற்றை பதிவு செய்தனர்.
இந்த முகாமை மமகவின் நகர செயலாளர் S. A. இத்ரிஸ் அஹமத் அவர்கள் தலைமைதாங்கி நடத்தினர்.இதை தொடர்ந்து மமகவின் நகர இணை செயலாளர் முஹம்மது சேக்ஹாதியார் அவர்கள் முன்னிலை வகித்தார்.இடையடுத்து, மமகவின் மூத்த உறுப்பினர்களாகிய முஹம்மது யூசுப், காதர் பாட்ச ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்த முகாமின் நோக்கமாகியது தூய்மையான அரசியலை உருவாக்குவது, புதிய முயற்சியை எடுத்து மாற்று அரசியலை உருவாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த முகாம் நடைபெற்றது.இதை தொடர்ந்து கடற்கரை தெரு ஜும்மா மஸ்ஜிதில் பெரும் திரளாக வந்த பொதுமக்கள் தங்களை அடிப்படை உறுப்பினராகளாக பதிவு செய்தனர்

தமிழகத்தில் ஒட்டக குர்பானிக்கு அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் மீண்டும் மறுத்துள்ளது !

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒட்டகம் வெட்ட உரிய வசதிகளை செய்து தர தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரி இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா அப்துல் ரஹீம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசின் விதிமுறைகளை பரிசீலித்த பிறகு தான் ஒட்டகம் வெட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது  என்று தெரிவித்தனர்.
 
மேலும் உரிய வசதிகள் இல்லாத இடத்தில் ஒட்டகம் வெட்டுவதை அனுமதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது

மேலும் தமிழகத்தில் ஒட்டகம் வெட்ட கூடாது என்பதை தமிழக அரசு காவல்நிலையங்களுக்கு வலியுறுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம்  தெரிவித்துள்ளது.