Thursday, July 27, 2017

உலகளவில் அதிகபட்சம் வெப்பம் குவைத் நாட்டில் பதிவு.!!வெந்து போகும் மக்கள்

குவைத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.உலகளவில் அங்கு அதிகபட்சமாக 129.3 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது.

வளைகுடா நாடுகளில் எப்போதும் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகத்தான் இருக்கும் .கோடைகாலத்தில் சொல்லவே வேண்டியதில்லை.ஆனால் இந்தமுறை வழக்கத்திற்கும் அதிகமாக குவைத்தில் வெயில் வாட்டி வதக்கி வருகிறது.இதனால் மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.பகல் நேரங்களில் வெளியே வரமுடியாத அளவிற்கு வெயில் சுட்டெரிக்கிறது.

உலக வரலாற்றிலேயே கடந்த வியாழக்கிழமை,குவைத்தில் உள்ள மித்ரிபா என்ற பகுதியில் 54டிகிரி செல்சியஸ்(129.3டிகிரி பாரன் ஹீட்)வெப்ப நிலை பதிவாகி உள்ளது.வெயிலின் கோர தாக்குதலால் குவைத் மக்கள் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதற்கு முன்பு,கடந்த1913ம் ஆண்டு ஜூலை10ல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில்56.7டிகிரி செல்சியஸ்சாக(134.06டிகிரி பாரன்ஹீட்)பதிவாகி இருந்தது.ஆனால் இந்த பதிவின் உண்மை தன்மை அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.இதனால் இப்போது குவைத்தில் பதிவாகி உள்ளது வெப்பநிலை. உலகத்திலேயே அதிகபட்ச வெப்பநிலையாக அறிவிக்கப்பட்டது.

வாக்கு எந்திரத்தின் முறைகேடு...ஊர்ஜிதப்படுத்திய மாவட்ட ஆட்சி தலைவர்..


Image result for electoral voting machine

மகாராஷ்ட்ரா மாநிலம், புல்தானா நகரில் நடை பெற்ற உள்ளாட்சி தேர்தலின் முடிவு, அம்மாவட்ட ஆட்சியருக்கு திகைப்பை ஏற்படுத்தியது. தேர்தல் முடிவு எதிர்பாராத அளவிற்கு அணைத்து வாக்குகளும் பா ஜ க கட்சிக்கு பதிவாகியுள்ளது. அதை தொடர்ந்து வாக்கு எந்திரத்தை முற்றிலும் சோதிக்கும் போது மற்ற சின்னங்களுக்கு பட்டனை அழுத்தியபோது எல்லா வாக்குகளும் தாமரை சின்னத்தில் பதிவானது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த தகவலை அம்மாவட்ட ஆட்சியர் ஊர்ஜிதம் செய்து மாநில தேர்தல் ஆணையருக்கு கடிதம் மூலம் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி. பாலிமர் செய்திகள்.

பகிர்வு. அதிரை வா. இபுறாஹிம்.

குழந்தைகள் ஜாக்கிரதை

அதிரையில் வாகனங்களும் ஆபத்தான சூழ்நிலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிதுக்கிறது.
நேற்று இரவு இஷாவுக்கு முன்.(8 அல்லது 9 வயது) சிறுவன் சைக்களை ஓட்டி வந்தவன் பைக் மீது மோதி இருக்கிறான் அப்பையனை தூக்கி கால் கையை தடவி கொடுத்து இருக்கிறார்கள் ஆனால் பையன் வாந்தி எடுக்க ஆரம்பித்தான்.
கூட்டத்தில் இருந்த நபர்களுக்கு பையனை யாரென்று தெரியவில்லை.வேருரொரு பையந்தான் இவன் வீடு இமாம் ஷாஃபிக்கு பின்னால் இருக்கு என்று சொல்லி மோதிய பைக் நபரோடு பையனை அழைத்து சென்றான்.
பிள்ளைகள் விசயத்தில் பெற்றோற்கள் மிக கவனக்குறைவாக இருப்பதை அதிகமாக காணமுடிகிறது.
நேற்று நான் கடையில் இருந்து வீட்டுக்கு வரும் போது இரவு 8 மணிக்கு சிறுவன் சைக்கிளில் மெயின் ரோடு ஹனீப் டாக்டர் வீட்டுக்கு எதிரில் வாகனங்களுக்கு மத்தியில். வேகமாக சென்றான்.
அப்பையனை அலட்டி ஓரமா மிதுவா போடா தம்பி என்று சொல்லி விட்டு போகும் போது தான் வேரொரு பையனின் விபத்து சம்பவம்.
அடங்காத பிள்ளைகளும்,அலட்சியமான தாய்மார்களின் காரணங்களால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது.
அன்பிற்க்குறிய சொந்தங்களே தன் பிள்ளைகளை கவனமாக கண்கானித்துக் கொள்ளுங்கள்.
இப்படிக்கு.
A.Abubacker. LMS

விகளத்தூர் அரசு மருத்துமனையா? அல்லது இஸ்லாமிய சமுகத்தை குறிவைத்த சட்டவிரோதகருகலைப்பு கூடமா?

பெரம்பலூர் மாவட்டம் விகளத்தூர் அரசு மருத்துவமனை  மருத்துவர் காமராஜர் அறிவுறுத்தலின் பேரில் நர்ஸ் திலகவதி அவர்கள்
இரண்டு குழந்தைகளுக்கு மேல் கருதரிக்கும் தாய்மார்களுக்கு எந்தவித முன் அறிவிப்பும் இன்றி சத்துஊசி போடுவதாக பொய்கூறி ஊசிபோடுகின்றனர் .

ஊசி போட்ட 4மணிநேரத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்றுபட்டு கருகலைந்து  விடுகின்றது.

ஒரே நாளில் இரண்டு இஸ்லாமிய பெண்களுக்கு இப்படியாக நடந்துள்ளது.

மருத்துவ சீட்டில் கண்டறிய பட்ட வியாதி HOB (high order birth) என்று குறிப்பிட்டுள்ளார் மருத்துவர்.

இது சம்மந்தமாக நேற்று sdpi கட்சி நிர்வாகிகள் மருத்துவரை சந்தித்து பேசிய போது மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி தான்  நாங்கள் செய்கின்றோம்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாத மாதம் நடைபெறும் சுகாதாரதுறை சம்மதமான கூட்டத்தில் விகளத்தூரில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் தொகை பெருகிவருகின்றது. நீங்க என்ன செய்கின்றீர்கள் என்று எங்களை சத்தம்போடுகிறார் ஆட்சியர்.

இது மாநில சுகாதார துறையின் அறிவுறுத்தலும் கூட  என்கிறார் ...

அரசு வழங்கிய உத்தரவு நகலை கேட்டதற்கு இது வாய்மொழி உத்தரவு என்கிறார் .....

இதுவரை பல பெண்களுக்கு அபாசன் செய்தது தெறிவந்துள்ளது  .....

இது சம்மந்தமாக ஆட்சியரின் நிலைபாட்டை தெரிந்துகொள்ளவும் ,

சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஆட்சியிடம்  மனு தரப்பட்டது .

உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

Wednesday, July 26, 2017

மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த அதிரை இனாமுல்!சில நாட்களுக்கு முன் சென்னை புதுக்கல்லூரி மாணவர்களின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிரை நடுத்தெருவை சேர்ந்த ஹாபிழ் உதுமானின் மகன் இனாமுல் ஹசன் இன்று மரியாதைநிமித்தமாக திமுக செயல்தலைவர் மு..ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார்.


குடிநீர் வழங்க கோரி அதிரை ஈ.சி.ஆர் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்!

அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல நாட்களாக தண்ணீர்  பஞ்சம்   இருந்து வருகிறது. இந்நிலையில் ஏரிப்புரக்கரை ஊராட்சிக்கு  உட்பட்ட ஆதம் நகர் மற்றும் எம் எஸ் எம்  நகரில் ஒரு மாத காலாமாக  முறையாக குடிநீர் வினியோகிக்க வில்லை என கூறி இன்று காலை பொதுமக்கள் திடீரென்று அதிரை  ஈ.சி.ஆர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து  பாதிக்கபட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் . ஆனால் போராட்டகாரர்கள் இடத்தை விட்டு கலைந்துசெல்லமாட்டோம்  என்று திட்டவட்டமாக அறிவித்தனர். இதனால்  போலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் சிறுது வாக்குவாதம்  எற்பட்டது. மேலும் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும்  எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.

 இதற்கிடையில் சமந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை  எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடபட்டது.Tuesday, July 25, 2017

அதிரை கால்பந்து தொடரில் திண்டுக்கலை திணரடித்த காயலர்கள்!அதிரை .டி. மைதானத்தில் சில நாட்களாக அதிரை கால்பந்து இளைஞர் கழகம் 25வது ஆண்டு மற்றும் எஸ்.எஸ்.எம்.குல் முகம்மது 16ஆம் ஆண்டு நினைவு ஒருங்கிணைந்த கால்பந்து தொடர் நடைபெற்று வந்தது. இதன் இறுதி போட்டியில் திண்டுக்கல் அணியும் காயல்பட்டினம் அணியும் பலபரீட்சை மேற்கொண்டனர்

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இன்றைய இறுதிப்போட்டியில் காயலர்கள் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். கடைசியில் தங்களின் சிறப்பான ஆட்டத்தினால் 3க்கு 0ம் என்ற கோல் கணக்கில் காயல்பட்டினம் அணி சுழற்கோப்பையை கைபற்றியது.Monday, July 24, 2017

மதுக்கூரில் தமுமுக ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைப்பு..!


  அதிராம்பட்டினம் அருகே உள்ள மதுக்கூர்ரில் தமுமுக ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைக்கப்பட்ட செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல சமுதாய மக்களுக்கு அவசர நிலையிலும் , அப்பகுதியில் விபத்திற்குள்ளானவர்களையும் மருத்துவமனையில் சேர்க்க மிகவும் உதவியாக இருந்து வந்த தமுமுக ஆம்புலன்சின் கண்ணாடியை சமூக விரோதிகள் உடைத்துள்ளதால் மதுக்கூர் சுற்று வட்டார பகுதியாளவில் இச்செய்தி மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இதுசம்மந்தமாக நடவடிக்கை எடுக்க கூறி காவல் துறையில் புகார் கொடுக்கபட்டுள்ளது.

ரூ.1க்கு ரயில் பயணிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம்இந்திய ரயில் பயணிகளுக்கு குறைவான கட்டணத்தில்  குடிநீர் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஓர் திட்டத்தை அமலுக்கு கொண்டுவரவுள்ளது. இதற்காக நாடு முழுவதிலும் உள்ள 450 ரயில் நிலையங்களில் 1,100 குடிநீர் வழங்கும் இயந்திரங்களை கொண்டு வர மத்திய அமைச்சகம் முடிவு செய்துள்ளது இதன் மூலம், பயணிகளுக்கு  ரூ.1க்கு குடிநீர் பாட்டில்கள் விநியோகிக்க படக்கூடும் என்றும், இதனால் 2000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கால்பந்து தொடரின் நாளை இறுதி போட்டியில் வெல்ல போகுவது யாரு

அதிராம்பட்டினத்தில் சென்ற நோன்பு பெருநாள் அன்று S.S.M.குல் முஹம்மது அவர்களின் நினைவு17ஆம் ஆண்டு மற்றும் அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 23ஆம் ஆண்டு சார்பில் மாபெரும் 7வர் கால்பந்து போட்டி தொடங்கப்பட்டது. இந்த போட்டி அதிரை கடற்கரை தெரு(ITI) மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பல அணிகள் கலந்துகொண்டு வருகின்றன. இந்த கால்பந்து போட்டியில் நாளை மாலை சரியாக 5.00 மணியளவில் நடைபெறவுள்ளது.நாளை நடக்கவிருக்கும் இறுதி போட்டியில் திண்டுக்கல் அணியும் காயல்பட்டினம் அணியும் விளையாட உள்ளது.இந்த போட்டில் யார் வெற்றி பெறுவார்கள் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

டி.என்.பி.எல். கிரிக்கெட் அட்டவணை " TNPL Cricket schedule டி.என்.பி.எல். கிரிக்கெட் அட்டவணை

 

ஜூலை.24 சேப்பாக் சூப்பர் கில்லீஸ்–திருவள்ளூர் வீரன்ஸ் நெல்லை இரவு 7.15 மணி*

ஜூலை.25 மதுரை சூப்பர் ஜெயன்ட்–திண்டுக்கல் டிராகன்ஸ் நத்தம் இரவு 7.15 மணி*

ஜூலை.26 திருச்சி வாரியர்ஸ்–தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் நத்தம் இரவு 7.15 மணி*

ஜூலை.27 மதுரை சூப்பர் ஜெயன்ட்–காரைக்குடி காளை நெல்லை இரவு 7.15 மணி*

ஜூலை.28 திண்டுக்கல் டிராகன்ஸ்–திருவள்ளூர் வீரன்ஸ் நெல்லை இரவு 7.15 மணி*
ஜூலை.29 சேப்பாக் சூப்பர் கில்லீஸ்–கோவை கிங்ஸ் சென்னை இரவு 7.15 மணி

ஜூலை.30 காரைக்குடி காளை–தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் நெல்லை மாலை 3.15 மணி*
,,
திருவள்ளூர் வீரன்ஸ்–திருச்சி வாரியர்ஸ் நெல்லை 7.15 மணி*


ஜூலை.31 கோவை கிங்ஸ்–திண்டுக்கல் டிராகன்ஸ் நத்தம் இரவு 7.15 மணி*

ஆக.1 சேப்பாக் சூப்பர் கில்லீஸ்–தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் நெல்லை இரவு 7.15 மணி*

ஆக.2 காரைக்குடி காளை–திருவள்ளூர் வீரன்ஸ் நத்தம் மாலை 3.15 மணி*
,,
திருச்சி வாரியர்ஸ்–மதுரை சூப்பர் ஜெயன்ட் நத்தம் இரவு 7.15 மணி*

ஆக.3 தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்–கோவை கிங்ஸ் நெல்லை இரவு 7.15 மணி*

ஆக.4 காரைக்குடி காளை–சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சென்னை இரவு 7.15 மணி*

ஆக.5 திண்டுக்கல் டிராகன்ஸ்–திருச்சி வாரியர்ஸ் நெல்லை மாலை 3.15 மணி*
,,
திருவள்ளூர் வீரன்ஸ்–தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் நெல்லை இரவு 7.15 மணி*

ஆக.6 மதுரை சூப்பர் ஜெயன்ட்–சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சென்னை இரவு 7.15 மணி*

ஆக.7 திண்டுக்கல் டிராகன்ஸ்–காரைக்குடி காளை நெல்லை இரவு 7.15 மணி*

ஆக.8 மதுரை சூப்பர் ஜெயன்ட்–திருவள்ளூர் வீரன்ஸ் நெல்லை இரவு 7.15 மணி*

ஆக.9 சேப்பாக் சூப்பர் கில்லீஸ்–திருச்சி வாரியர்ஸ் நத்தம் இரவு 7.15 மணி*

ஆக.10 கோவை கிங்ஸ்–மதுரை சூப்பர் ஜெயன்ட் நத்தம் இரவு 7.15 மணி*

ஆக.11 காரைக்குடி காளை–திருச்சி வாரியர்ஸ் நத்தம் இரவு 7.15 மணி*

ஆக.12 திருவள்ளூர் வீரன்ஸ்–கோவை கிங்ஸ் சென்னை இரவு 7.15 மணி*

ஆக.13 தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்–மதுரை சூப்பர் ஜெயன்ட் நத்தம் மாலை 3.15 மணி*
,,
திண்டுக்கல் டிராகன்ஸ்–சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நத்தம் இரவு 7.15 மணி*

ஆக.14 திருச்சி வாரியர்ஸ்–கோவை கிங்ஸ் சென்னை இரவு 7.15 மணி*

ஆக.15 முதலாவது தகுதி சுற்று சென்னை இரவு 7.15 மணி*

ஆக.16 வெளியேற்றுதல் சுற்று நத்தம் இரவு 7.15 மணி*

ஆக.18 2–வது தகுதி சுற்று நெல்லை இரவு 7.15 மணி*

ஆக.20 இறுதிப்போட்டி சென்னை இரவு 7.15 மணி*

மரண அறிவிப்பு மர்ஹும் M.A.அப்துல் கபூ(fu)ர் அவர்கள்


மர்ஹும்.ஹனீபா அவர்களின் மகனும் ஹாஜி.M.A. அப்துல் லத்தீப் ,M.A.அகமது கபீர் அவர்களின் சஹோதரரும் அஹமது ஜுபைர், நூருல் அமீன் இவர்களின் மாமாவும் சேக் அலி,சேக் முஹமது, கமால், உமர் ஃபாரூக்  ஆகியோரின் மச்சானும் ஆகிய M.A.அப்துல் கபூர் அவர்கள் இன்று காலை செட்டி தெரு இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன். அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுகையிக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அனைவரும் இவருக்காக துவா செய்யுங்கள்...

Sunday, July 23, 2017

இந்த 2017வருடம் ஹஜ் பயணிகள் அனைவருக்கும் சோலார் AC குடை வழங்க இருக்கும் சவூதி அரசு!

இவ்வருடம் புனித ஹஜ் பயணம்
கொள்ளும் ஹாஜிகளுக்கு சோலார்
கூலர் குடை வழங்க ஏற்பாடு
இன்ஷா அல்லாஹ் இந்த (2017) வருடம்
அனைத்து புனித ஹாஜிகளுக்கு இந்த
தனித்துவமான இந்த குடை
வழங்கப்படவுள்ளது .
இந்த 610 கிராம் எடை கொண்ட
குடையில் என்ன விஷேசம் என்றால் குடைக்கு
மேல் பகுதியில் சோலார் அமைப்பு
வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மின்
உற்பத்தி செய்யப்பட்டு குடைக்குள்
அமைக்கப்பட்ட மைக்ரோ குளிர் சாதனம் வேலை
செய்கிறது. அதன் மூலம் குடை
பிடித்தவர்கள் ஏ. சி அறையில் இருந்தது போன்ற
அனுபவத்தை உணர்வார்.
புனித நகரங்களில் உள்ள வெப்பத்தை
விட்டும் புனித ஹாஜிமார்களை
பாதுகாக்க இந்த ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.. என சவூதி ஹஜ்
அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Air Conditioned Umbrella is a REAL THING now!
Saudi Engineer created “Makkah Umbrella” with
Air Condition in It to ease the heat.
Saudi Engineer, Mohammed Hamid Sayegh
created “Makkah Umbrella” which runs on solar
panel and batteries so that pilgrims can stay
hydrated during the heat of over 40c this
Hajj.
Weather forecasters are expecting a heatwave
during the Hajj 2017, so a senior colleague of
Mohammed Hamid Sayegh asked him to come
up with the creative ideas so that they can
make the Hajj 2017 easier for all the pilgrims
coming to Makkah from all around the world.
To be noted, Mohammed Hamid Sayegh is a
Makkah resident.
The official launch of the Air Conditioned
Umbrella held in the city of Makkah, where
Mohammed Hamid Sayegh said that the
demand of Umbrellas is going up here, the
buyers are mostly Asian and European because
they are not used to bear the extreme middle
east heat. So, he came up with the idea to
make Hajj easy for them.
In the launch, he said the umbrella works with
a solar panel which charges the batteries and
those batteries support the air conditioning
which is embedded within the umbrella. The
weight of Makkah Umbrella is just 610 Grams,
which is very light.
The umbrella will keep the people cool as it
pumps the water spray our of it, and this can
last hours easily. These umbrellas will be
available soon but as of now, it is available for
sale only in China. This is also quoted in the
launch, that before the Hajj 2017 they will be
making it public and making it available for
every single Guest of Allah coming for the Hajj
2017 pilgrimage.
Source. சவூதி கேஜட்

அதிரை CMP லைன் பகுதியில் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின்கம்பங்கள் அகற்றம்.!!
                 மின் கம்பம் அகற்றம்.

சி.எம்.பி லைன் ஹனீப் பள்ளிக்கு எதிரில் உள்ள சந்தில் வாகன போக்கு வரத்துக்கு இடையூராக இருந்து வந்த மின் கம்பம்

இரவு நேரத்தில் பவர் கட்டான போது இருட்டில் பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை அக்கம்பத்தில் மோதி காயங்கள் ஏற்ப்பட்டுள்ளது.

இக் கம்பத்தை அகற்றச் சொல்லி பல ஆண்டு காலமாக சமூக ஆர்வலர்களால் சம்பந்தப் பட அதிகாரிகளுக்கு  மனுக்கள் கொடுத்தும் அலட்சியம் காட்டப்பட்டது.

இனியும் காலம் தாழ்த்துவதால் குதிரை கொம்பாக ஆகிவிடும் என்று கருத்தில் கொண்டு.

சமூக ஆர்வலரால் சென்னை மாநகரில் உள்ள சம்பத்தப் பட்ட அதிகாரியின் கவணத்திற்க்கு கொண்டு சென்று அவர்களின் உத்தரவின் பேரில்.22/7/2017 அன்று இடையூராக இருந்த மின் கம்பம் அகற்றப்பட்டது.

இதற்க்காக அயராது முயற்ச்சி செய்து தக்க நடவடிக்க எடுக்க உதவி செய்த நல்லுள்ளங்களுக்கு மன மார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Saturday, July 22, 2017

அய்யம்பேட்டைசக்கராபள்ளியில்தெருவில் பயங்கர தீ விபத்து ஏற்ப்பட்டது.நிவாரண வழங்கும் SDPIமாநில தலைவர் KKSM.தெஹலான் பாகவி அவர்கள்

அய்யம்பேட்டை சக்கராபள்ளியில் உள்ள முஹம்மதியார் தெருவில் பயங்கர தீ விபத்து ஏற்ப்பட்டது. இதில் 56 வீடுகள் எரிந்து சாம்பலனது.
இந்த மக்களையும் ஜமஆத் யும் சந்திக்கும் விதமாக SDPI கட்சி மாநில தலைவர் KKSM. தெஹலான் பாகவி அவர்கள் ஜுலை 22 இன்று மாலை 5.30 மணி அளவில் வருகை தந்தார்.
பதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண வழங்கும் விதமாக முதல் கட்டமாக மாநில தலைவர் KKSM.தெஹலான் பாகவி அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூபாய் 1,00,000  (ஒரு லட்சம்) ஜமஆத் யிடம் வழங்கினாகள்.
இதில் மாநில பொது செயலாளர் B.அப்துல் ஹமீது, மாநில துணை தலைவர் A.அம்ஜத் பாட்ஷா, மாநில செயலாளர் S.அமீர் ஹம்ஜா மற்றும் மாவட்ட தலைவர் MYS.அப்துல் காதர், மாவட்ட பொது செயலாளர் வழக்கறிஞர் N.முஹம்மது அன்சாரி, மாவட்ட துணை தலைவர் A.சேக் அன்சாரி, மாவட்ட பொருளாளர் H.தஸ்லிம் அகமது  பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் S.முஹம்மது பைசல் மேலும் திருச்சி மற்றும் நாகை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உலக அரங்கில் இந்தியாவை தலை நிமிரச்செய்த "தமிழ் பெண்மணி - மித்தாலி ராஜ்"

Image result for mithali raj


பிரிட்டனில் நடை பெற்று வரும் "மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்" அபாரமாக விளையாடி செமி பைனலில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வெற்றி கரமாக கையாண்டு வழி நடத்தி செல்லும் பெண்மணி - கேப்டன் "மித்தாலி ராஜ்" ஐயே சேரும். இவரது துணிச்சலான ஆட்டம், போட்டியை வெற்றி கொள்ளும் யுக்தி, தனது தலைமையிலான அணியில் உள்ள அனைத்து ஆட்டக்காரர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்வது போன்ற இவரது தனித்தன்மை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை "உலக கோப்பை கிரிக்கெட்டில் இறுதி போட்டி வரை கொண்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அதிலும் தமிழ் நாட்டை சேர்ந்த மித்தாலி ராஜ், நம் தமிழருக்கான பெருமையை உலக அரங்கில் பறை சாற்றியுள்ளார்.
அனைவரும் வாழ்த்துவோம், போற்றுவோம்....எதிர் வரும் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டு வெற்றி பெற பிரார்த்திப்போம்.

பகிர்வு. அதிரை வா. இபுறாஹிம்.

ஓட்டர் ஐடி பெயர் சேர்த்தால், திருத்தல் சம்மந்தமாக முகாம்


நாலை 23:7;2017 அன்று அதிராம்பட்டினம்  வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய நடுனிலைப் பள்ளியில்  ஓட்டர் ஐடி பெயர் சேர்த்தால், திருத்தல் சம்மந்தமாக முகாம் நடை பெற உள்ளது அதுசமயம் வார்டு எண்,12,13 வாக்காளர்கள் வந்து பதிவு செய்ய வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொல்கின்றேன்.
குறிப்பு:
ஏற்கனேவே புதிய போட்டோ கொடுத்தவர் களும், கொடுக்காத வர்களும் முகாமில் கலந்து கொல்லவும்.
இபடிக்கு, 12 வது முன்னால் கவுன்சிலர்
என்,எம், செய்யது முகம்மது
செல்:9865057910

யார் இந்த அதிரை இனாமுல் ஹசன்?அதிரை நடுத்தெருவை சேர்ந்த ஹாபிழ் உதுமானின் மகனான இனாமுல் ஹசன், பாட்சா மரைக்காயரின் பேரன். புதுக்கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வருகிறார். பள்ளி பருவமுதலே மாணவர்களின் உரிமைக்காக ஜனநாயக வழியில் குரல் கொடுத்து வருகிறார். தமிழகத்தின் தன்னெழுச்சி என வர்ணிக்கப்படும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மெரினா கடற்கரையில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் முன் நின்று குரல் கொடுத்தார்

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து ஜனநாயக வழியில் போராட்டத்தை நடத்தியுள்ளார். இவர் கல்லூரி மாணவர்களின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தது முதலே சமூக வலைதளங்களில் இனாமுல் ஹசனுக்கு ஆதரவாக மீம்ஸ்கள் பகிரப்பட்டன

இதனையடுத்து தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் 80% வாக்குகள் விதியாசத்தில் வெற்றிபெற்று புதுக்கல்லூரியின் மாலை நேர வகுப்பு மாணவர்களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அதிரையர் ஒருவர் புதுக்கல்லூரி மாணவர்களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.BREAKING NEWS: சென்னை புதுக்கல்லூரி சேர்மனாக அதிரை இனாமுல் ஹசன் தேர்வு!சென்னை புதுக்கல்லூரி மாலை நேர வகுப்பு மாணவர்களின் தலைவராக அதிரை நடுத்தெருவை சேர்ந்த ஹாபிழ் உதுமானின் மகன் இனாமுல் ஹசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட மாணவனைவிட 80% வாக்குகள் விதியாசத்தில் அமோகமாக வெற்றிபெற்றுள்ளார். மேலும் இவர் மறைந்த அதிரை நகர திமுக அவைத்தலைவர் பாட்ஷா மரைக்காயரின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சமூகநல போராட்டங்களில் கலந்துக் கொண்டு உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் இனாமுல் ஹசனின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

தஞ்சை (வ) மாவட்டம் சக்கராப்பள்ளியில் தீ விபத்து பகுதிகளை பார்வையிட்டனர் தமுமுக - மமக நிர்வாகிகள்...
மனிதநேய மக்கள் கட்சி யின் மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை  I.M. பாதுஷா தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சக்கராப்பள்ளி நிர்வாகிகளுடன் கள ஆய்வு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்ப்பாடு...

நேற்று தஞ்சை (வ) மாவட்டம் சக்கராப்பள்ளியில் தீ விபத்து  ஏற்ப்பட்டு 63 வீடுகள் எறிந்து நாசமாகின உடுத்திய உடைகளோடு வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் உயிர் பிழைத்து கைகுழந்தைகள் உள்பட அனைவரும் திருமண மண்டபத்தில் தங்கவைக்க பட்டுள்ளனர். செய்தி அறிந்த தமுமுக - மமக நிர்வாகிகள் சம்பவ இடத்திற்க்கு விரைந்தனர். அதை தொடர்ந்து இன்று மனிதநேய மக்கள் கட்சி யின் மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை  I.M. பாதுஷா தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் செல்லப்பா , சலீம் , பாபுஜி, பாபநாசம் ஒன்றிய செயலாளர் முபாரக், தஞ்சை (தெ) மாவட்ட நிர்வாகிகள் ரியாஸ் அகமது, அப்துல் ஜப்பார், லுக்மன் ஹக்கீம் மற்றும் கிளை நிர்வாகிகளோடு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர் பாதிக்கப்பட்ட மக்களை கண்டு ஆறுதல் கூறி சக்கராப்பள்ளி பெரிய ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து நிலவரங்களை தெறிந்து கொண்டு நிவாரண பொருள்கள் விரைவில் தமுமுக சார்பாக வந்தடையும் என்றும் இந்த விபத்து சம்பந்தமான அனைத்து பணிகளுக்கும் தமுமுக என்னேரமும் ஜமாத்தோடு சேர்ந்து செயல்படும் என்றும் உறுதி அளித்தனர்..

Friday, July 21, 2017

ஆலத்தூரில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் அதிரை AFFA அணி அபார வெற்றி..!


                  ஆலத்தூரில் கடந்த சில நாட்களாக மாபெரும் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் பல ஊர்களிலிருந்து பல கால்பந்து அணிகள் கலந்து கொண்டனர்.இதன் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் , அதிரை AFFA அணியும் திருவோணம் அணியும் மோதியது. இதில் அதிரை affa அணி 2-3என்ற கோளில் வெற்றி பெற்று ரூபாய் 30,000 தட்டி சென்றது.
இதில் திருவோணம் அணி இரண்டாம் பரிசாக ரூபாய் 20000 தட்டி சென்றது.


SDPI முப்பெரும் விழா நேரலை !

சென்னையில் தற்பொழுது SDPI கட்சியின் சார்பில் நடைபெற்று வரும் முப்பெரும் விழாவின் நேரலை தற்பொழுது நமது அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் ஒளிப்பரப்பு செய்யபடுகிறது.

ஜியோவின் அடுத்த அதிரடி..!
இந்தியர்கள் அனைவருக்கும் 4ஜி செல்போன் குறைந்த கட்டண திட்டங்களுடன் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மும்பையில் நடந்த கூட்டத்தில் முகேஷ் அம்பானி பேசியதாவது:

ஒவ்வொரு விநாடிக்கும் 7 பேர் ஜியோவில் இணைகின்றனர். தற்போது ஜியோவில் 125 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். மொபைல் இணைய சேவையில் இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனாவை முந்தியுள்ளது.

மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்படி, இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட 4ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்படும். ஜியோவை பயன்படுத்தினால் உங்கள் வாழ்க்கை டிஜிட்டல் ஆகும், அழகாகும். இந்த போனை அனைத்து டிவியிலும் இணைத்து, இணைய சேவை மூலம் வீடியோ, படங்களை பார்த்து கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு 3 முதல் 4 மணி நேரத்திற்கு டிவியில் வீடியோ பார்க்கலாம். ரூ.153க்கு இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ், அன்லிமிடெட் இணைய சேவை வழங்கப்படும்.

இந்த மொபைல் போன் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.1,500 டெபாசிட் செய்ய வேண்டும். இத்தொகையை 3 வருடத்திற்கு பின் திரும்ப பெற்று கொள்ளலாம். மொபைல் போனுக்கு வரும் ஆகஸ்ட் 24ம் தேதி முதல் முன்பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SDPI கட்சி நடத்தும் முப்பெரும் விழா

9ஆம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி
பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி

21.07.2017 வெள்ள மாலை 05 | பெரியார் திடல், சென்னை