Tuesday, April 25, 2017

வெறிச்சோடிய அதிரையின் பிரதான சாலைகள்! (படங்கள் இணைப்பு)

தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டாம் காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அதிரையின் எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் முக்கிய சாலைகள் வெறிச்சோடி போய் உள்ளன.

நன்றி: KMA.ஜமால்

    

அதிரையர்களின் இரத்தம் வீணடிக்கப்படுகிறதா?

 5 ஆண்டுகளில் தானமாக பெறப்பட்ட சுமார் 28 லட்சம் யூனிட் இரத்தம் வீணடிக்கப்பட்டுள்ளதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் இதில் மகாராட்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் முன்னிலையில் உள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்த விளக்கத்தை அதிரை நகர சி.பி.டி.யின் நகர தலைவர் இப்ராகிம் அலி அளித்துள்ளார்.
அதில், Crescent blood donor(சிபிடி) யில் நிர்வாகிகளான எங்களுக்கு பல விதிகள் கட்டமைக்கபட்டு உள்ளது அதில் முதல் மற்றும் தலையாய விதியாதேனின் நோயாளியோ,பாதிக்கபட்டவர்களையோ அவர்களை நேரில் போய் சந்தித்து ரத்த தேவையை உறுதிசெய்து அவர்களுக்கு எவ்வளவு ரத்தம் தேவையோ அவைகளை மட்டுமே எங்கள் சிபிடி பூர்த்தி செய்து வருகிறது. எந்த ஒரு சூழலிலும் நாங்கள் ரத்த வங்கிக்கு ரத்தம் வழங்குவதில்லை எங்களின் மூலம் வழங்கப்பட்ட ரத்தத்தில் ஒரு துளி கூட ரத்த வங்கிக்கு கொடுக்கவும் இல்லை வீணடிக்கபடவும் இல்லை என்பதனை இந்த நேரத்தில் மார்தட்டி சொல்லாம். தமிழகம் முழுவதும் எங்களுடன் கைகோர்த்து இணைந்து நடைபோடும் ரத்த கொடையாளர்கள்(blood donors) இல்லை என்றால் இப்படிபட்ட சாதனை சாத்தியமில்லை அவர்கள் எங்களுடன் இனைந்து வழங்கிய ரத்தம் ஒரு சிறு துளிகூட வீணடிக்கபடவில்லை. எங்கள் சேவையை  ஏற்றுகொண்டு இனைந்து நடைபோடுங்கள் உறவுகளே, என குறிப்பிட்டுள்ளார்.
 

அதிரை பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்?

 

நாளுக்கு நாள் விதவிதமான முறையில் மோசடிகள் நடைபெற்று வருகிறது. வீட்டில் தனியாக இருக்கும் நபர்களை நோட்டமிட்டு, அவர்களை எளிதில் ஏமாற்றிவிடுகின்றனர். இது ஒருபுறமிருக்க, நவீன கால மோசடிகள் தற்போது அதிகரித்துள்ளது. இவைகள் பற்றி பலமுறை நாம் இணையதளங்களில் செய்தி வெளியிட்டுள்ளோம். ஆனால், அதன் பிறகும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கிறார்களா? என்ற கேள்வி நமது மனதில் எழுகின்றது.


சில தினங்களுக்கு முன், அதிரையில் ஒரு பெண்ணிற்கு முன்னறிமுகம் இல்லாத தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வருகிறது. அதனை எடுத்து பேசியபோது, மறுமுனையில் இருந்த மர்ம நபர் குறிப்பிட்ட வங்கியின் பெயரை சொல்லி, தங்களின் ஏடிஎம் கார்டு காலாவதியாகிவிட்டது, உடனே அதனை நீங்கள் புதுபிக்க வேண்டும், எனவே தங்கள் ஏடிஎம் கார்டு மற்றும் பின் நம்பரை சொல்லுங்கள் என்று கூறி உள்ளார்.


இதனையடுத்து உஷாரான அப்பெண் அழைப்பை துண்டித்துவிட்டு சம்பவம் குறித்து வீட்டில் இருக்கும் ஆண்களிடம் தெரிவித்திருக்கிறார். உண்மையில் இந்த பெண்ணின் நடவடிக்கை பாராட்டப்பட வேண்டிய செயல்.


ஆனால், இதுபோல் அதிரையில் இருக்கும் பெண்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்கிறார்களா? அல்லது நாம் தான் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோமா?

Sunday, April 23, 2017

என் மறுபக்கம்! வெளியில் சொல்ல முடியாத குற்ற உணர்வு!

 


தலைப்பின் பொருள் எனக்கு மட்டும் பொருத்தமானதாக இருப்பது இல்லை, மாறாக நம் அனைவருக்கும் இந்த தலைப்பு ஏகோபித்தமாக பொருந்தும். சிறு வயது முதல் வாழ்க்கையின் முதுமை வரையில் பல்வேறு சந்தர்பங்களில் கசப்பான சில நிகழ்வுகளை நாம் சந்திக்கின்றோம். ஏனெனில் இவைகள் அனைத்தும் வாழ்க்கையின் அடிப்படையாக அமைகிறது.


நான் நினைத்தது எனக்கு கிடைக்க வில்லையே என்ற எண்ணம் தினந்தோறும் என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கின்றது. அதேசயம் கிடைக்க பெற்ற இன்பங்களை எண்ணுகின்ற பொழுது வாழ்கையை ரசித்து அனுபவிக்க விரும்புகிறேன். 


செய்த தவறுகள் ஏராளம், அதில் அனைத்தையும் வெளியில் சொல்லிவிட முடியாது. அதனை திருத்திக்கொண்டு இந்த சமூகத்தின் மத்தியில் வாழ முயலுகின்ற போது, தன்னை தானே பரிசுத்தவாதிகளாக நினைத்துகொண்டு பிறரை குறை சொல்லி திரியும் ஜீவன்கள், ஒன்றாக இணைந்து என்னை குற்ற உணர்வுக்கு ஆளாக்கி வாழ்க்கையை வெறுக்க செய்தனர். பின்புதான் தெரிந்தது, அவர்கள் பிறரின் குறைகளை மட்டுமே தேடி கண்டுபிடித்து(?) குறை சொல்லி திரியும் ஈன பிறவிகள் என்ற தகவல்.


இதற்கு தீர்வு காண வேண்டும் என எண்ணிய எனக்கு, ஆய்வின் முடிவுகள் பதிலாக அமைந்தன. அதன்படி குறை சொல்லித் திரியும் அதிமேதாவிகள்(?) அவர்களின் செயலால் வாழ்கையில் விலை மதிப்பற்ற உறவுகளை இழக்கிறார்கள். முதலில் அதனை பெரிதாக எண்ணாத அவர்கள், பின்னர் அனாதையாக ஆக்கப்படுகிறார்கள்.


உலகில் வாழும் பெரும்பாண்மையான மனிதர்கள் எதேனும் ஒரு விதத்தில் தவறு செய்து விடுகின்றனர். அதற்காக நாம் இறைவனிடம் உணர்வுபூர்வமாக பாவமன்னிப்பு கோரலாம். நிச்சயம் இறைவன் நமது பாவங்களை மன்னிக்க கூடியவனாக இருக்கிறான். தேவையற்ற குற்ற உணர்வை தவிர்த்திடுங்கள், வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்திடுங்கள்.


கசப்பான நிகழ்வுகளை அனுபவம் என்போம்! தற்கொலை முடிவை கைவிடுவோம்!!


குற்ற உணர்வுக்கு தீர்வு, இறைவனிடம் உள்ளது! தற்கொலை ஒரு ஏமாற்று வேலை!!


சமூகமே! குற்ற உணர்வுக்கு என்னை தள்ளாதீர்கள்! மாறாக அமர்ந்து பேசுவோம் வாருங்கள்!!


-ஜெ.முகம்மது சாலிஹ்

#Whatsapp 9500293649


அதிரையில் கோப்பையை கைபற்றிய இடமழையூர் அணி!

ESC  நடத்தும் 8ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர்போட்டி அதிரை காட்டுப்பள்ளி வாசல் மைதானத்தில் நேற்று இரவு முதல் நடைபெற்றது. இதற்கு முதல் பரிசாக 10000 ரூபாயும், 2-ஆம் பரிசாக 8000 ரூபாயும், 3 ஆம் பரிசாக 6000 ரூபாயும், 4-ஆம் பரிசாக 4000 ரூபாயும் நிர்ணயம்செய்யபட்டது.  இதில் பல தலைசிறந்த அணிகள் கலந்துகொண்டு விளையாடினர். இதனை காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் கூடியிருந்தனர்.

இரவு முழுவதும் தொடர்ந்து நடைபெற்ற இந்த போட்டி, இன்று மாலையுடன் நிறைவுபெற்று பரிசளிப்பு விழா நடைபெற்றது. 

முதல் பரிசு:இடமழையுர்
இரண்டாம் பரிசு: இ எஸ் சி 
முன்றாம் பரிசு:திட்டச்சேரி
நான்காம் பரிசு:காரைக்கால்

 
    

Saturday, April 22, 2017

அதிரையில் கணக்கெடுப்பு நடத்தும் மர்ம நபர்கள்? எச்சரிக்கை

அதிரையில் சமிப காலமாக சிலர் வீடுவீடாக சென்று டெங்கு பாதிப்பு தொடர்பான கணக்கெடுப்பு பணியை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள், அவர்களிடம் இருந்த உத்தரவு நகலை வாங்கி படித்து பார்த்துள்ளனர். அப்போது அது காலாவதியானது என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் பணியாளர்களிடம் கேட்டதற்கு முறையான பதில் சொல்ல வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் இதுபோன்ற கணக்கெடுப்பு என்று கூறி வீடுகளுக்கு வரும் நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

 

Friday, April 21, 2017

அதிரையில் இருந்து சென்னை செல்வோருக்கு அறிய வாய்ப்பு!

 
25-04-2017 அன்று இரவு அதிரையில் இருந்து சென்னை ஏர்போட் வரையில் டவேரா கார் காலியாக செல்ல உள்ளது. இதில் சேரிங் முறையில் பயணம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் காதிர் முகைதீன் அவர்களை தொடர்பு கொள்ளவும்.

Concept sharing
Contact no: 7010202997
Tavera T board
Capacity 9+1
Departure: 25/04/17 
Time:8.30pm
Arrival:25/04/17 
Time.5.00am

Thursday, April 20, 2017

அதிரையின் பிரபல ஆசிரியருக்கு சாதனையாளர் விருது!

அதிரையில் செயல்பட்டு வரும் பழமைவாய்ந்த காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் A.ராஜா அவர்கள் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரின் நேர்த்தியான பயிற்சி மற்றும் ஊக்கத்தின் காரணமாக இப்பள்ளியின் மாணவர்கள் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, ராஜா அவர்களின் சேவையை பாராட்டி "உடற்கல்வி துறையில் சாதனையாளர்" என்ற விருதினை வழங்கி கவுரவித்துள்ளார். இந்த விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவாளர்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் சாதனையாளர் விருது பெற்றுள்ள ராஜா அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.