அதிரை பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்?

 

நாளுக்கு நாள் விதவிதமான முறையில் மோசடிகள் நடைபெற்று வருகிறது. வீட்டில் தனியாக இருக்கும் நபர்களை நோட்டமிட்டு, அவர்களை எளிதில் ஏமாற்றிவிடுகின்றனர். இது ஒருபுறமிருக்க, நவீன கால மோசடிகள் தற்போது அதிகரித்துள்ளது. இவைகள் பற்றி பலமுறை நாம் இணையதளங்களில் செய்தி வெளியிட்டுள்ளோம். ஆனால், அதன் பிறகும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கிறார்களா? என்ற கேள்வி நமது மனதில் எழுகின்றது.


சில தினங்களுக்கு முன், அதிரையில் ஒரு பெண்ணிற்கு முன்னறிமுகம் இல்லாத தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வருகிறது. அதனை எடுத்து பேசியபோது, மறுமுனையில் இருந்த மர்ம நபர் குறிப்பிட்ட வங்கியின் பெயரை சொல்லி, தங்களின் ஏடிஎம் கார்டு காலாவதியாகிவிட்டது, உடனே அதனை நீங்கள் புதுபிக்க வேண்டும், எனவே தங்கள் ஏடிஎம் கார்டு மற்றும் பின் நம்பரை சொல்லுங்கள் என்று கூறி உள்ளார்.


இதனையடுத்து உஷாரான அப்பெண் அழைப்பை துண்டித்துவிட்டு சம்பவம் குறித்து வீட்டில் இருக்கும் ஆண்களிடம் தெரிவித்திருக்கிறார். உண்மையில் இந்த பெண்ணின் நடவடிக்கை பாராட்டப்பட வேண்டிய செயல்.


ஆனால், இதுபோல் அதிரையில் இருக்கும் பெண்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்கிறார்களா? அல்லது நாம் தான் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோமா?

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது