பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் 10-ம் ஆண்டின் நிறைவை முன்னிட்டு அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் 10-ம் ஆண்டின் நிறைவை முன்னிட்டு கலந்துரையாடல் நிகழ்ச்சி 05.05.2017  அன்று அதிராம்பட்டினத்தில்  இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் அஹமது நவவி அவர்கள்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சம காலத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷனின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரஹ்மான் ஸாதிக் கலந்து கொண்டு சமூகத்திற்கான சுகாதார முன்னெடுப்புகள் குறித்து உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் அதிராம்பட்டினத்தை அடுத்து உள்ள பிலால் நகரில் பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத்துறை மூலம் கட்டப்பட்டுள்ள 14 தனி நபர் இல்ல கழிவறைகள் பயணாளிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக சிந்தனை கொண்ட பெரியோர்கள், முக்கியஸ்தர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது