Sunday, May 28, 2017

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று காலை வெளியீடு


நாடு முழுவதும் சிபிஎஸ்இ(CBSC) பாடத்திட்டத்தின்கீழ் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவு இன்று காலை வெளியாக உள்ளது.
சிபிஎஸ்இ சார்பில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 9ம் தேதி நடந்தது. இந்த தேர்வை நாடு முழுவதும் உள்ள 10 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளில் படித்த 10,98,891 பேர் எழுதினர். அதில் 2,497 பேர் மாற்றுத்திறனாளிகள். பத்து மண்டலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

நாட்டிலேயே அதிகபட்சமாக டெல்லியில் 2,58,321 பேர் இந்த ஆண்டு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன்

www.results.nic.in, www.cbseresult.nic.in, www.cbse.nic.in

ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது