Friday, May 26, 2017

கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ம் தேதி திறப்பு: செங்கோட்டையன் அறிவிப்பு

ராணிபேட்டை அருகே மனு அளித்த இரண்டே நாளில் குடிநீர் | மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் | நம் நாட்டின் பசு இனங்கள் காக்கப்பட வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் | பஞ்சாபின் முன்னாள் டி.ஜி.பி கே.பி.எஸ் கில் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் | மத்திய அரசின் அறிவிப்பு மாட்டிறைச்சி வியாபாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் : இஸ்மாயில் தகவல் | ரூ.65 கோடி வங்கி மோசடி: சென்னை மற்றும் கோயம்புத்தூரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை | வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அரைமணி நேரமாக கனமழை | கர்நாடகாவில் பாஜக முதலமைச்சர் வேட்பாளராக எடியூரப்பா போட்டியிடுவார்: அமித் ஷா | உத்தரகண்டில் கனமழை: விவசாயம் செய்யப்பட்ட பயிர்கள் நாசம் | விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் பலத்த மழை | மதுரையில் ஜூன் 5-ம் தேதி சாலையில் குப்பை கொட்டினால் அபராதம்: மாநகராட்சி ஆணையர் | விழுப்புரம் ஆட்சியருக்கு லஞ்சம் அனுப்பிய பெண் | முதல்வர் பழனிசாமியுடன் அதிமுகவின் 5 எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு | எகிப்தில் பேருந்து மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு: 24 பேர் உயிரிழப்பு | பஞ்சாபின் முன்னாள் டி.ஜி.பி கே.பி.எஸ்.கில் டெல்லியில்​ காலமானார் |
சென்னை
கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ம் தேதி திறப்பு: செங்கோட்டையன் அறிவிப்பு
பதிவு செய்த நேரம்:2017-05-26 15:11:13
சென்னை: கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஜூன் 1ம் தேதிக்கு பதில் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அவர் கூறியுள்ளார். சென்னை அம்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: வெயில் காரணமாக பள்ளிகள் ஜூன் 1க்கு பதில் ஜூன் 7 ம் தேதிக்கு திறக்கப்படும். பள்ளிகள் திறக்கப்படும் அன்றே பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். அடுத்த ஒரு வாரத்தில் பஸ்பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் கோடை வெப்பம் அதிகமாக நிலவுகிறது. ஒவ்வொரு நாளுமே பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைக் கடந்து வாட்டிவதைத்துக் கொண்டிருக்கிறது. இதனால், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரப்பட்டது.
இதேபோல் புதுச்சேரியிலும் ஜூன் 1ம் தேதிக்கு பதில் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். வெயில் காரணமாக பள்ளிகள் ஜூன் 7ம் தேதி திறக்கப்படும் என கமலக்கண்ணன் அறிவிப்பு

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது