Thursday, May 25, 2017

முன்னாள் சாம்பியன் பள்ளத்தூரை பதம்பார்த்தது அதிரை AFFA!




அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேசன் AFFA அணி சார்பாக 14 ம் ஆண்டு எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கிராணி மைதானத்தில் நடைபெற்று வந்தது.

இன்றைய தினம் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அதிரை AFFA - பள்ளத்தூர் அணிகள் மோதினர். இரு அணிகளும் சமபலம் வாய்ந்த
அணிகளாக இருந்தாலும் பள்ளத்தூர் அணி சென்ற ஆண்டு அதிரையின் இரு இடங்களில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது. இதனால் அதிரை AFFA அணி விளையாடும் இந்த இறுதி போட்டியானது ரசிகர்களிடையே வெகுவாக எதிர்பார்க்கப்பட்டது.

அந்த எதிர்ப்பார்ப்புக்கு ஏற்றார் போல் அதிரை AFFA அணியினர் அதிரையின் நடப்பு சாம்பியனான பலம் வாய்ந்த பள்ளத்தூர் அணியை பதம்பார்க்கத் துவங்கியது.

முதல் பகுதி நேர ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் ஏதும் போடாத நிலையில், இரண்டாம் பகுதி நேர ஆட்டம் ரசிகர்களிடையே விறுவிறிப்பை எட்டியது.

அடுத்த சில வினாடிகளில் பள்ளத்தூர் அணி ஒரு கோல் போட்டதும் ஆட்டம் மிகுந்த பரபரப்புக்குள்ளானது.

ஆட்டம் முடிவிற்க்கு 5 நிமிடங்களே மீதமிருந்த நிலையில் அதிரை AFFA அணியின் வீரர்கள் மிகவும் சாமர்த்தியமாக ஆடி அடுத்தடுத்து இரு கோல்களை அடித்து அதிரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டனர்.

இறுதியில் 2 - 1 என்ற கோல் கணக்கில்  வெற்றியை அதிரை AFFA அணி தன்வசப்படுத்தியது மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் ஒரு நம்பிக்கை எனும் முத்திரையை அழுத்தமாக பதித்தது.

வெற்றிக்கு காரணமாய் இருந்த அதிரை AFFA அணியின் இளம் நட்சத்திர வீர ஆசிப்பை ரசிகர்கள் அனைவரும் பாராட்டி மகிழ்ந்தது குறிப்பிடதக்கது..

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது