Friday, May 26, 2017

அதிரையில் ரமலானும் இந்துக்களின் சகோதரத்துவமும்!!

 

வழக்கம்போல் கடந்த ஆண்டும் நாங்கள் இஃப்தார் ஏற்பாடுகளை செய்துக்கொண்டிருந்தோம். ஒவ்வொரு நாளும் வெவ்வெறு நபர்கள் பள்ளியில் இஃப்தாருக்கு வரும் நோன்பாளிகளுக்காக ஜூஸ் போன்ற பொருட்கள் வாங்க பணம் தருவார்கள். அதனை வைத்து நாங்கள் இஃப்தார் ஏற்பாடுகளை செய்தோம்.


இந்தநிலையில், ஜூஸ் செய்வதற்காக ஒரு இந்து சகோதரரின் பழக்கடையில், இஃப்தார் தொடர்பாக நண்பர்களுடன் பேசிக்கொண்டே தேவையான பழங்களை வாங்கினோம். இதனை கவனித்த அந்த சகோதரர் நாங்கள் பழத்திற்கான பணத்தை கொடுத்தபோது அதனை வாங்க மறுத்துவிட்டார்.


முதலில் எங்களுக்கு காரணம் புரியவில்லை, பின்னர் அவரே சொன்னார் பள்ளிவாசல் தொடர்பான காரியங்களுக்கு நான் பணம் வாங்குவது இல்லை, பழங்களை இலவசமாக எடுத்து செல்லுங்கள் என்று. ஒருநிமிடம் என்ன செய்வது என்று எங்களுக்கு புரியவில்லை, உடனே இது பள்ளிவாசல் பணத்தில் வாங்கவில்லை மாறாக வேறுநபர் இதற்காக பணம் கொடுத்துவிட்டார், எனவே தயவு செய்து இந்த பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என கூறியவாறு அவரின் கையில் பணத்தை பிடிவாதமாக வைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றோம்.


இன்ஷா அல்லாஹ், இறைவன் அந்த சகோதரருக்கு நேர்வழியான இஸ்லாம் மார்க்கத்தை ஏற்று நடக்க கூடியவராக மாற்றுவானாக...

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது