Wednesday, May 31, 2017

பள்ளி முடித்து, காலேஜ் செல்ல இருக்கும் என் அன்பு மகனே / மகளே....!

நான் நேரிடையாக அறிவுரை சொன்னால் உனக்கு பிடிக்காது!  Facebookகில்  ஸ்டேடஸாய்  போட்டால்,  நம் mutual friends மூலமாக இது உன் கவனத்தை வந்து சேரும் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன்... படிப்பாயா..?
1.  இது உன் வாழ்க்கையின்  முக்கிய கட்டம்!
‘என் career இதுவாக வேண்டும்..!' என்பதில்,  நீ  தெளிவாய் இருக்கிறாயா,  அதன் சாதகபாதகம் என்ன என்பதை, விஷயம் அறிந்தவர்களிடம் பேசித் தெளிவதும்,  போக வேண்டிய சரியான பாதை பற்றி தீர ஆராய்ந்து கொள்வதும், இந்தக் கட்டத்தில்  மிக அவசியம்..!
2. இது காம்படிஷன் அதிகமாகி விட்ட காலம்!   வேண்டும் என்று  நினைப்பது நமக்கு கிடைக்க,   நாம் ரேஸில் ஓடியாக வேண்டும்! அடுத்த 4 - 6 வருடங்கள் நீ உன் best efforts கொடு..! அது போதும்! அந்த மன நிறைவு உனக்கு வாழ்வில்  நிச்சய மகிழ்ச்சி தரும்! 
3.  'Academics  இல்லை; என் திறமை வேறு..'  என்று நீ நினைத்தால்,  அதற்கு தேவையான தகுதிகளை வளர்த்துக் கொள்.  உம்: இசை விற்பன்னன் ஆக வேண்டும் என்று நீ விரும்பினால், இசை கற்றுக் கொள்வதும், உன் திறமையை நிரூபணம் செய்து கொள்வதும் தேவை.   'Non-academic careerக்கான uncertain கடின வாழ்க்கைக்கு நான் தயாரா..?'  என்று உன்னை நீயே கேட்டுக் கொண்டு,  passion இருக்கும் தெளிவோடு இறங்க வேண்டும்..!
4. வெற்றி என்பது - முயற்சி, Attitude, அதிர்ஷ்டம் -  இந்த மூன்றின் weighted average!  ‘அதிர்ஷ்டம்'  குறைவாக இருந்தாலும், மற்ற இரண்டைக் கூட்டி முயற்சித்தால், எதுவும் அடைய முடியாததல்ல..!
5. வாழ்க்கை,  செல்வம் சேர்க்கும் materialistic போட்டி மட்டும் அல்ல.!.  ஆத்ம ஞானம், பரந்த அறிவு, ஆன்மீக, மன முதிர்ச்சியே  நமக்கு நிஜமான மகிழ்ச்சி தரும்!  அவைகளை  வளர்த்துக் கொள்ள, நல்ல புத்தகங்கள், இலக்கியங்களைத் தேடிப் படிப்பதோடு  நல்லறிவு படைத்தோரின் நட்பையும் தேடிக் கொள்ளுதல் இந்த வயதில் மிக அவசியம்..!
6. மகனே/ மகளே..! மிக முக்கியமான இந்த விஷயத்தைக் கவனமாய்க் கேட்பாயா :
உன் வாழ்க்கையில் 17-25 வயது வரையிலான பருவம்தான் பலப்பல திறமைகள் வளரும் காலம்! வருங்காலத்தின் கதவுகள் திறந்து கொள்ளும் நேரம்!  Unfortunately, அதே பருவம்தான் - எதிர்பால் கவர்ச்சி, Infatuation காதல், மது, சிகரெட், வியாபார சினிமா, இன்டெர்னெட் / மொபைல் வக்கிரங்கள்  -  என உன் மனதைச் சிதறடிக்கும்  போதை விஷயங்களும் உன்னைத் தாக்கும் நேரம்..!
"இவை எல்லோருக்கும் இயற்கையாய் இப்பருவத்தில் வரும் ஆசைகள்தானே..? இவை பாவமா..? ஈடுபடக் கூடாதவையா..?" என்று உனக்குத் தோன்றலாம்..! இந்தப் பருவத்தில், தெளிவு தேவை!.  என்ன தெளிவு..?
'செல்ல வேண்டிய பாதையில் பிசகாமல் போனால், வழியில் சில கேளிக்கைகள் தவறல்ல! ஆனால், அவையே  வாழ்க்கை அல்ல! வாழ்க்கை ஒரு மிக நீண்ட  கதை! இன்னும் பல அத்தியாயங்கள் வரும்!   Relevantடான வாழ்க்கை என்பது, நாம் படிப்பு முடித்து,  கேரீரில் settle ஆகி, அப்புறம் அமைத்துக் கொள்வதுதான்..!" என்ற தெளிவு!.
இனி உன் வாழ்க்கைப் பிரயாணத்தில்,   வண்டி ஓட்டுனரும் நீ, பிரயாணியும்  நீயே..!
அன்பு மகனே/மகளே..!  மேலே நான் சொன்னவைகளை கொஞ்சம் sincereராய் யோசி என்று  மட்டுமே உன்னிடம் கேட்கும்.........

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது