Sunday, May 28, 2017

துணை வேந்தர்கள் நியமனம் : அமைச்சர் அறிவிப்பு



உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் சென்னை பல்கலைக் கழக துணை வேந்தராக துரைசாமியும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக செல்லதுரையும் நியமிக்கப்பட்டுள்ளனர்  என்றும்  அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இன்னும் 3 அல்லது 4 மாதத்தில் துணைவேந்தர் நியமிக்கப்படுவார் என்றும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தராக பரிந்துரைக்கப்பட்ட 3 பேரை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் நிராகரித்துவிட்டதாகவும் கூறினார். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மோகன், கருணாமூர்த்தி, ஜெயக்குமார் என பெயர்களை தமிழக அரசு பரிந்துரைத்திருந்தது.
மேலும் தமிழகத்தில் துணை வேந்தர்கள் இல்லாமல் இயங்கும் 12 பல்கலைக்கழகத்துக்கும் துணை வேந்தர்கள் நியமனம் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. பல்கலைக் கழக துணைவேந்தர் கையொப்பம் இல்லாததால் பட்டப்படிப்பு சான்றிதழ் பெறும் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அன்பழகன் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது