சி.பி.டி.யின் மதுக்கூர் கிளை துவக்கம்!

தமிழகம் முழுவதும் இலவச இரத்த தான சேவையை கிரஸண்ட் பிளேட் டோனர்ஸ் அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் புதிய கிளை துவக்கப்பட்டுள்ளது. மதுக்கூரில் மாவட்ட தலைவர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் மாவட்ட துணை தலைவர் அக்லன் கலீஃபா (அதிரை கலீஃபா), அதிராம்பட்டினம் நகர சி.பி.டி தலைவர் இப்ராகிம் அலி முன்னிலை வகித்தார்கள். மேலும் 30க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள், தங்களை சி.பி.டி அமைப்பில் இணைத்துக்கொண்டனர்.
மதுக்கூர் கிளை நிர்வாகிகள்:
தலைவர் : முகமது சமிர்
செயலாளர் : நூர் முகமது
பொருளாளர் : நூஹ் அல்பாஸ்Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது