பத்திரப்பதிவுதொடர்பாக அரசின்புதிய விதிகள் வெளியீடு

அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை வரையறுக்க புதிய
கட்டண முறை மற்றும் பல்வேறு விதி முறைகளை தமிழக
அரசு உயர் நீதிமன்றத்தில் தாக்கல்
செய்துள்ளது.
அதன்படி விவசாய நிலமாக இருந்திருந்தால்
மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறவேண்டும்.
விவசாய நிலத்தை மாற்றவேண்டும் என்றால்
வேளாண் இணை இயக்குநர் அனுமதி
பெறவேண்டும்.
ஆறு, கால்வாய் உள்ளிட்ட நீர் நிலைகளை மனையாக
மாற்ற அனுமதி கிடையாது. அதே போல் அரசு நிலம்
மற்றும் கோவில் நிலங்களை மாற்ற முடியாது. உரிமம்
இல்லாத காலி நிலங்களை மனையாக பதிவு
செய்ய அனுமதி இல்லை. மனை பகுதியில் உள்ள
பாசன கால்வாய்களை சேத படுத்த கூடாது.
தொடர்ந்து விவசாயம் செய்த தகுந்த
நிலங்களை மனையாக மாற்ற அனுமதியில்லை,
ஆட்சியர், நகரத்திட்ட இணை இயக்குநர்
ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
நிலங்களை வரையறை செய்ய அரசு புதிய
கட்டணத்தை விதித்துள்ளது அதன் படி சென்னை
மாநகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு
ரூபாய் 100 கட்டணமும், நகராட்சிக்கு ரூபாய் 60,
பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு ரூபாய் 30 என
கட்டணம் செலுத்தினால் நிலம் வரைமுறைபடுத்தி
தரப்படும்.
மாநகராட்சி பகுதியில் வரையறை செய்ய
வளர்ச்சி கட்டணமாக ரூபாய் 600, தர வேண்டும்.
சிறப்பு, தேர்வுநிலை நகராட்சியில் ஒரு சதுர மீட்டருக்கு
வளர்ச்சி கட்டணமாக ரூபாய்.350 , முதல்நிலை, 2 -
ம் நிலை நகராட்சி பகுதியில் வளர்ச்சி கட்டணம்
ரூபாய் 250 ஆகவும் பேரூராட்சிகளில் ரூபாய் 150 ,
ஊராட்சிகளில் ரூபாய் 100 வளர்ச்சி
கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
20.10.16 க்கு முன் பிரிக்கப்பட்ட மனைகளை வரையறுக்க
அரசு ஓப்புதல் அளித்துள்ளது. சந்தை மதிப்பில் 3
சதவிகிதம் செலுத்தினால் மனைகள்
அங்கீகரித்து வரையறுக்கப்படும். என்று தமிழக அரசு
தாக்கல் செய்துள்ள அரசாணையில்
கூறப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது