விரைவில் மூடு விழா?இனி டோல்கேட்டை சண்டைஇல்லாமல் கடக்கலாம்!நிதித்துறை இணையமைச்சர்தெரிவித்தார்.

ஜி .எஸ் .டி வரி விதிப்பு முறை
நடைமுறைக்கு வந்தால் பல்வேறு
சோதனைச் சாவடிகள் மூடப்படும்
என மத்திய நிதித்துறை
இணையமைச்சர் அர்ஜூன் ராம்
மேக்வால் தெரிவித்தார்.
டில்லியில் கருத்தரங்கம் ஒன்றில்
பேசிய அவர், கால்நடை வளர்ப்பு,
சுரங்கம் மற்றும் வனம் தொடர்பான
சோதனைச் சாவடிகள் மூடப்படும்.
ஏனெனில் இவற்றை நடத்துவது
காலத்தை வீணடிப்பதாக இருக்கும்
என்பதால் மூடப்படுகின்றன.
ஜி .எஸ். டி வரிமுறை சுமார் 165
ஆண்டுகளாக உலகில் உள்ளது.முதன்
முதலில் அது பிரான்ஸ்சில்
நடைமுறைக்கு வந்தது இவ்வாறு
அவர் பேசினார்.
அமைச்சருக்கு முன் பேசிய
வருவாய் செயலர் அஸ்முக் ஆதியா,
ஜி எஸ் டி வரி முறை
நடைமுறைக்கு வந்தப்பிறகு ஒரு
சில சோதனைச் சாவடிகளே
திறந்திருக்கும் என்றார்.
ஏனெனில் ஜி எஸ் டி வரிமுறையின்
கீழ் பெரும்பாலான துறைகள்
வந்துவிடுகின்றன என்றார்.
சோதனை சாவடிகள் மூடினாள்
நடுத்தர மக்கள் நிம்மதி அடைவர்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது