அதிரையில் சாலை விபத்து இருவர் காயம்

புதுக்கோட்டையை உள்ளூரை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் இவர் பழஞ்செட்டி தெரு பேருந்து நிறுத்தம் அருகில் உரக்கடை நடத்தி வருகிறார் . இவர் இன்று மதியம் மணிபோல் தன் கடையை நோக்கி வந்து கொண்டு இருந்தார் இவருக்கு பின்னால் ராஜ்குமார் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் மற்றோரு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தனர் . அப்போது பழஞ்செட்டி தெரு பேருந்து நிறுத்தம் அருகில் வந்த போது ராஜமாணிக்கம் தன் கடையை நோக்கி திரும்பி உள்ளார் . அப்போது பின்னால் வந்த வாகனம் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விபத்து ஏற்பட்டது .உடனடியாக அருகில் இருந்தோர் அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் . இதில் ராஜேந்திரன் அவர்களுக்கு தலை மற்றும் காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது .
மேலும் இது குறித்து விசாரித்த விதத்தில் ராஜ்குமார் மது அருந்தி இருந்தது தெரிய வந்தது . அதிரையில் தொடர்ந்து நடைபெறும்  சாலை விபத்துக்கு மது முக்கிய காரணமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது