Monday, May 29, 2017

அதிரை தமுமுக சார்பாக கரையூர் தெருவில் குடிநீர் விநியோகம்!


             அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் இன்று(29/05/2017) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
அதிரை கரையூர் தெருவில் இன்று பகல் ஒரு வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்தது.
இதனால் பல பகுதியில் தீ பரவி சுமார் 30 மேற்பட்ட வீடுகள் நாசமாகின. இந்த தீயை அணைக்க அப்பகுதி மக்களும் மற்றும் பல சமூக ஆர்வலர்களும் தங்கள் வீடுகளில் உள்ள தண்ணீரை பயன்படுத்தினர். இதனால் அப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை எற்பட்டது.
இந்த நிலையை போக்க அதிரை தமுமுக சார்பாக இலவசமாக குடிநீர் வழங்கப்பட்டது. குடிக்க தண்ணீர் இல்லாத நிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றதால் அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது