Tuesday, May 23, 2017

சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் பெண்களுக்காக தராவிஹ் தொழுகை ஏற்பாடு?



நமதூர் புதுமனைத் தெருவில் அமைந்திருக்கும் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் எதிர் வரும் ரமலான் காலம் முழுவதும் பெண்களுக்காக தராவிஹ் தொழுகையினை நடத்த சம்சுல் இஸ்லாம் சங்கம் ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரமலான் காலங்களில் நம் ஊரில் பெண்களுக்கு தெருவாரியாக ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட வீடுகளில் தராவிஹ்
தொழுகைகள் நடத்தப்பட்டாலும் அனைவரையும் ஒன்று திரட்டி தராவிஹ் தொழுகையின தொழ முயற்ச்சிகளை சம்சுல் இஸ்லாம் சங்கம் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்னும் 3 அல்லது 4 நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் சம்சுல் இஸ்லாம் சங்கத்திலிருந்து இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவருமா என்ற எதிர்பார்ப்பும் அதிரை மக்களிடையே நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது