Wednesday, May 31, 2017

அதிரையில் SDPI கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

அதிரையில் இன்று(31/05/2017) மாலை சரியாக 5மணியளவில் SDPI கட்சி சார்பில் அதிரை பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாடு-ஒட்டகங்கள் விற்பனைக்கும் , வழிபாட்டிற்காக பலியிடவும் அரசு தடைவிதித்ததை கண்டித்தும், மத சுதந்திரத்திற்கு எதிரான மற்றும் விவசாயிகள் , ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் உடனடியாக இந்த ஆணையை திருப்பபெற வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அதிரை பேருந்து நிலைத்தில் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் திருச்சி மண்டல தலைவர் திரு அபூபக்கர் சித்தீக் அவர்கள் வருகைதந்தார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில SDPI கட்சியின் நிர்வாகிகளும் ,மாவட்ட SDPI கட்சின் நிர்வாகிகளும், பல சமூக ஆர்வலர்களும் மற்றும் பல பொது மக்களும் கலந்துக்கொண்டு தங்களுடைய கண்டன உரையை பதிவு செய்தனர்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது