A.J  ஜும்மா மஸ்ஜித் மற்றும் அதிரை மகாதிப் இணைந்து நடத்தும் திருக்குர்ஆன் திறன் அறிதல் போட்டி!

A.J. ஜும்மா மஸ்ஜிதின் மக்தப் அல்ஹிதாயாவின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு A.J  ஜும்மா மஸ்ஜித் மற்றும் அதிரை மகாதிப் இணைந்து நடத்தும் திருக்குர்ஆன் திறன் அறிதல் போட்டி இன்ஷா அல்லாஹ் 30.06.2017 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை A. J ஜும்மா மஸ்ஜித் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
அது சமயம் மக்தப் மத்ரஸாக்களில் பயிலும் மாணவர்களுக்கான குர்ஆன் பார்த்து ஓதுதல், சூரா மனனம் மற்றும் துஆக்கள் ஒப்புவித்தல் ஆகிய போட்டிகளும் குர்ஆணை மனனம் செய்து கொண்டிருக்கும் மாணவர்கள் மற்றும் செய்து முடித்த ஹாஃபிழ்கள் ஆகியவர்களுக்கான ஹிஃப்ழு போட்டிகளும் நடைபெறவுள்ளது.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசளிப்பு நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து உலமாக்ககளின் சிறப்புரையும் நடைபெறவுள்ளது. அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுவதுடன் போட்டியில் பங்கு பெறும் மாணவர்களை ஊக்குவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இங்ஙனம்,
நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் A.J.ஜும்மா மஸ்ஜித், அதிராம்பட்டினம்.
தொடர்புக்கு:9894348321,9788420821,7418831092.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது