அதிரையில் கேஸ் சிலிண்டர் வாங்குபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு...!

அதிரையில் பல வருடங்களுக்கு முன்பிலிருந்து கேஸ் சிலிண்டர் பல வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த கேஸ் சிலிண்டரை நமது வீட்டுக்கு விநியோகம் செய்ய வரும் நபருக்கு அந்த கேஸ் சிலிண்டர் கம்பெனி மூலம் மாதாமாதம் சம்பளம் வழங்கப்படுகிறது.

ஆனாலும் நமது வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் சப்ளை செய்ய வரும் நபர்கள் கேஸ் விலையை அதிகமாக சொல்லி பணம் பறித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி,கேஸ் சிலிண்டர் வீடுகளுக்கு சப்ளை செய்பவர்கள் கேஸ் சப்ளைக்கு என்று தனிப்பட்ட முறையில் ஒரு வீட்டுக்கு ரூபாய் 30 முதல் 50 வரை பணம் வாங்கிவருகின்றனர்.

இது வன்மையாக கண்டிக்கதக்க ஒரு செயல்.

ஏன்னென்றால், அவருக்கு மாத சம்பளம் அவருடைய கம்பெனி மூலம் வழங்கப்படுகிறது,இருப்பினும் அவர்கள் நம்மிடம் பணம் வாங்குகின்றனர்.

நமது வீட்டு பெண்களும் பில்லை(bill) பார்க்காமல் கேட்ட பணத்தை கொடுத்து விடுகின்றனர்.

ஆகவே, நட்புகளே நாம் மிகவும் விழிப்புணர்வோடு இருத்தல் அவசியம்.

இனி வரும் காலங்களில் கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்பவர் சொல்லும் பணத்தை கொடுக்காமல் அவர்கள் கொடுக்கும் பில்லில்(bill) எவ்வளவு பணம் குறிப்பிடப்பட்டுள்ளதோ அப்பணத்தை மட்டும் செலுத்தவும்.

மீறி கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்பவர் பணம் கேட்டால் அல்லது கேஸ் சிலிண்டர் தரமுடியாது என்று மிரட்டினாலோ அவர்களை பற்றி புகார் கொடுக்க கீழே உள்ள தொலைபேசி எண்ணை எந்த நேரத்திலும் அழைக்கலாம்.

புகார்களை தெரிவிக்க தொடர்புக்கொள்ளவும் 7200364700 

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது