Thursday, June 1, 2017

ஆங்கில நாளிதழில்வெளியான அதிரைஇளைஞர் காலித் குறித்தகட்டுரை

அதிரை சேதுரோடு பகுதியை
சேர்ந்தவர் காலித் அஹமது.
சென்னை AMS பொறியியல்
கல்லூரியில் 3 ஆண்டு
மெக்கானிக்கல் இஞ்சினியரிங்
படித்து வருகிறார். சமூக
சேவையில் ஈடுபாடு கொண்ட
இவர் அதிரையிலும்,
சென்னையிலும் தொடர்ந்து
பல்வேறு விதமான சமூக
சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்.
Crescent Blood Donors அமைப்பின்
தஞ்சை மாவட்ட செயலாளராக
இருந்து வரும் இவர் இரத்தம்
தேவைபடுபவர்களுக்கு
உடனுக்குடன் சமூக
வலைதளங்களின் மூலமாக இரத்தம்
கிடைக்க வழிவகை செய்து
சென்னையில் இயங்கி
வரும் அறப்போர், D4V உள்ளிட்ட
பல்வேறு தனியார் தொண்டு
நிறுவனங்களில் உள்ள இவர்
தொடர்ந்து சாலை பாதுகாப்பு,
இரத்ததான விழிப்புணர்வு
உள்ளிட்டவை குறித்து
பள்ளிகளிலும்
பொதுவெளியிலும் தனது
நண்பர்களோட சேர்ந்து பிரச்சாரம்
செய்துவருவதை வழக்கமாக
கொண்டுள்ளார்.
ஆற்றிவரும் சமுதாய
சேவைகளுக்கான் Awareness India
Movement அமைப்பின் சார்பாக
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
விருதை பெற்றுள்ளார். இந்த
நிலையில் இது வரை ஆயிரம்
யூனிட்கள் இரத்தம் கிடைப்பதற்கு
காலித் உதவியுள்ளார். இது
குறித்து தினத்தந்தியின் ஆங்கில
நாளிதழான DT NEXT இன் மாடல்
சிட்டிசன் பெட்டகத்தில் காலித்
குறித்த கட்டுரை
வெளியிடப்பட்டுள்ளத

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது