இன்னைக்கும் மழை இருக்கு” – மறக்காமல் குடை எடுத்துகிட்டு போங்க...!!!தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மழை பொய்த்துப் போனதையடுத்து கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதியே கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் நகரின் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும் எனவும், கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தேவகோட்டையில் 3 செமீ மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது