Thursday, June 15, 2017

தமிழகம் முழுவதும் அதிரைக்கு பெருமை சேர்த்து வரும் அதிரை வாலிபர் காலித் அஹமது பற்றி ...

தமிழக அளவில் அதிராம்பட்டினத்திற்கு பெருமை சேர்த்து வரும் அதிரை சேர்ந்த வாலிபர் காலித் அஹமது (வயது 22) அவர்கள் பற்றி....

சில நாட்களுக்கு முன் தினத்தந்தி  வெளியிட்ட ஆங்கில நாளிதழில் இவர் சார்ந்த கட்டுரை ஒன்று  வெளிவந்தது.

இதை தொடர்ந்து தற்போது சென்னை எக்ஸ்பிரஸ் என்னும் ஆங்கில செய்தித்தாளில் அதிரை சேதுரோடு சேர்ந்த காலித் அஹமது(22) அவரை பற்றிய செய்தி வெளிவந்துள்ளது.

இந்த செய்தித்தாளில், இரத்தம் தேவை என்றால் உடனடியாக அதனை உறுதி செய்து , பிற நட்பு வட்டத்தில் இதை பற்றி கூறி இரத்த தான கொடையாளரை தயார் நிலையில் (BLOOD COORDINATOR) அனுப்பி வைப்பார்.

அதுமட்டும் இன்றி பலமுறை இரத்த தானம் செய்தவர் .

இவர் மூன்று வருடகளால் ரத்தம் தானம் செய்யும் கொடையாளர்களை தயார் செய்து இரத்தம் தேவைபடும் இடங்களுக்கு கொடையாளர்களை அனுப்பி வருகிறார்.

அதுமட்டும் இன்றி இவர் பல நன்மையான காரியங்கள் செய்துள்ளார்.

இவர் சென்னையில் "விபதில்லா ட்தேசம் உருவாக்குவோம்"  என்ற தலைப்பில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் , போது இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

அதுமட்டும் இன்றி சென்னையில் நடைபெறும் விபத்துக்களில் தங்களுடைய குழுவுடன் இணைந்து மீட்பு பணியில்  ஈடுப்பட்டு வருகிறார்.

இவர் சென்னையில் பல தன் ஆர்வல தொண்டு நிறுவனங்களிலும் பணியாற்றி வருகிறார்.

இவர் தஞ்சாவூர் மாவட்டம் (CRESCENT BLOOD DONORS ) இலவச இரத்த சேவை மையத்தின் முக்கிய பொறுப்பாளராக திகழ்ந்து வருகிறார்.

இவர சமூக சேவையில் தமிழக அளவில் மிகுந்த பங்காற்றி வருகிறார்.

இவர் அதிரை மண்ணுக்கு இதுபோன்று பல சேவைகளை செய்து அதிரைக்கு பெருமை சேர்த்த வருகிறார்.

இவரது இந்த பயணம் வாழ்நாள் முழுவதும் தொடர அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது