Saturday, June 3, 2017

தஞ்சையில் நடைபெற்று வரும் விவசாயிகளின் தொடர் உண்ணாவிரத போராட்டம்!

தஞ்சாவூரில் நடந்து வரும் ஜூன் 12ல்காவிரி நீர் கேட்டும், குடியரசு தலைவர் தேர்தலை தமிழக அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம், பங்கீட்டுக்குழு அமைத்திடவும், வலியுறுத்தி மூன்றாவது நாளாக போராட்ட களத்திற்க்கு ஏறு பூட் டியமாட்டுடன், மண்வெட்டி, கருகிய கரும்புகளுடன் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் அணிவகுத்து வந்தனர்.

ஆம் ஆத்மி கட்சி தமிழக ஒருங்கினைப்பாளர் வசீகரன்,சுதா ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள், நிர்வாகிகளுடன் அணிவகுத்து வந்தனர்.
தேனீ மாவட்டத்திலிருந்து முல்லை பெரியாறு அனை பாசண விவசாயிகள் மாநில துணை செயலாளர் செங்குட்டுவன் தலைமையிலும், மதுரை,  ,சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களிலிருந்து வைகை பாசன விவசாயிகள் மதுரை மண்டல கவுரவ தலைவர் சிவகங்கை ஆதிமூலம், தலைவர் பரமகுடி மதுரை வீரன், மானாமதுரை இராம முருகன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகளும்,

நாகப்பட்டினம் தெற்க்கு மாவட்ட செயலாளர் இராமதாஸ்,

வடக்கு மாவட்ட செயலார் கொள்ளிடம் விஸ்வநாதன், ஆகியோர் தலைமையில் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள்,

பாண்டிச்சேரி மாநில தலைவர் காரைக்கால் இராஜேந்திரன், செயலாளர் இராமகிருஷ்ணன், துணை செயலார் தங்கராஜ்
ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், பங்கேற்றுள்ளனர்.

திராவிடர் கழகம் குணசேகரன், மண்டல தனலம் மாவட்ட தலைவர் ஜெயராமன் வழக்கறிஞர் அமர் சிங் மாவட்ட செயலாளர் கருணாநிதி ஆகியோர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

ஒக்க நாடு மேலையூர் விவசாயிகள் உழவு மாடுகள், கலப்பை, மண்வெட்டியுடன் வந்திருந்தனர்.

தஞ்சை த புண்ணியமூர்த்தி' டி.பி.கே.இராஜேந்திரன், மாவட்ட செயலாளர்கள், தஞ்சை பாலன், திருவாரூர் சேரன் செந்தில்குமார் பொன்னாப்பூர் பாஸ்கரன். பேரையூர் பாண்டியன் மனியர், வடுவூர் கார்த்திகேயன்,எம்.மணி, மகேஷ்வரன், அறிவு ஆகியோர் போராட் பத்தை வழி நடத்தி வருகின்றனர்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது