Tuesday, June 6, 2017

சவூதி அரேபியா ஜித்தாவில் உள்ள அய்டாவின் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி. அதிரையர்கள் குடுபத்துடன் பங்கேற்பு!

சவூதி அரேபியா ஜித்தாவில் உள்ள அய்டாவின் சார்பில் நேற்று(05 ஜூன் 2017) திங்கள் கிழமை மாலை ஜித்தா ஷரஃபிய்யா லக்கி தர்பார் உணவகத்தில்  இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியை அய்டாவின் தலைவர் ரஃபியா அஹமது தொடங்கி வைக்க, சல்வா ஷம்ஸ் கிராஅத் ஓத  சிறுமி சனா ஷம்ஸ், மொழி பெயர்ப்பு செய்தார். சகோதரர் ஜஃபருல்லாஹ் வரவேற்புரை வழங்கினார். அய்டாவின் சாதனைகள், மற்றும் செயல்பாடுகள் பற்றி செயலாளர் ஷம்சுதீன் விளக்கமளித்தார்.

இறுதியில் இணைத்தலைவர் ஏ.ஜே.தாஜுத்தீன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியை சகோ. அஸ்லம் தொகுத்து வழங்கினார்.

இரவு உணவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான அதிரையர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது