அதிரையில் பிரபலமாகும் செம்பரத்தி பூ ஜூஸ்

அதிரை மக்கள் புது விதமான உணவு வகைகளை தயாரிப்பதில் முன்னணியில் இருப்பவர்கள்.அதன் படி சமிபகாலமாக அதிரை பகுதியில் புது விதமான  செம்பரத்தி பூ ஜூஸ் ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். 
செம்பரத்தி பூ வகையில் பல்ல வன்ணங்கள் இருக்கும்.அதில் குறிப்பாக சிகப்பு நிறத்தாலான  செம்பரத்தி பூவை வைத்து ஜூஸ் தயாரிக்கின்றன.அதன் செய் முறையை பாப்போம் ....

5 நபர் குடிக்கும் அளவு இருந்தால் தேவையான அளவு தண்ணீரை வைத்து 10   செம்பரத்தி பூவையும் சேர்ந்து தண்ணீருடன் நன்கு சுட வைக்க வேண்டும் சுட வைத்த தண்ணீரில் பூவின் சாறுகள் இறங்கி சிகப்பு நிறத்தில் தண்ணீர் மாறிவிடும்.அப்போது பூ சக்கையினை வடிகட்டி விட்டு 1 எலுமிச்சை சாறு பிழிந்து தேவையான அளவு சக்கரை அல்லது சீனி பாகு சேர்த்தால் அழகான செம்பரத்தி பூ ஜூஸ் ரெடி. 

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது