Sunday, June 4, 2017

அதிரையில் கலைஞர் பிறந்த நாள் விழாதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம் !

திமுக தலைவர் டாக்டர் கலைஞரின் 94 வது பிறந்த தினத்தையொட்டி, அக்கட்சியின் அதிரை பேரூர் சார்பில் 5 இடங்களில் கொடியேற்றி வைக்கப்பட்டு, இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் பேரூர் கழக செயளாலர் இராம.குணசேகரன் அவர்களின்அதிரை பேரூர் பொருளாளர் கோடி முதலி தலைமை வகித்தார். அக்கட்சியின் அவைத் தலைவர் ஜே. சாகுல் ஹமீது, பா.கு பகுருதீன் ஆகியோர் கட்சி கொடியை ஏற்றி வைத்தனர். இதில் அக்கட்சி அலுவலகம், பேருந்து நிலையம், சால்ட் லேன், வண்டிப்பேட்டை, கல்லூரி முக்கம் ஆகிய 5 இடங்களில் திமுக கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், திமுக அதிரை பேரூர் துணைச் செயலாளர் ஏ.எம்.ஒய் அன்சர்கான், மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், ஒன்றிய பிரதிநிதிகள் முல்லை மதி, வீரப்பன், துணைச்செயலர் தில்லை நாதன், வார்டு நிர்வாகிகள் முத்துராமன், சேக்தாவூது, வரிசை முகம்மது,
உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது











0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது